இலங் கையில் நடைபெறும் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஜூன் 19 இல் நடக்கும் லீக் போட்டியில் மோதுகின்றன.
இலங்கையில் 10 ஆவது ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஜூன் 15 ஆம் திகதி தொடங்குகிறது. இதில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நான்கு ஆசிய அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடர் 24 ஆம் திகதி வரை தம்புள்ளையில் நடைபெறும்.
இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் மோதும். லீக் சுற்றின் முடிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஜூன் 24 ஆம் திகதி நடக்கும் இறுதியாட்டத்தில் விளையாடும்.
அடுத்த மாதம் 15 ஆம் திகதி நடக்கவுள்ள இத்தொடரின் முதல் போட்டியில் சாம்பியன் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை (ஜூன்16) எதிர்கொள்கிறது. அதன்பின் பாகிஸ்தான் (ஜூன்19), இலங்கை (ஜூன்22) அணிகளுடன் மோதுகிறது.
இதுவரை நடந்துள்ள இத்தொடரில் இலங்கை 1986,1987,2004,2008 இந்தியா (1984, 1988, 1990, 1991, 1995) தலா நான்கு முறை சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளன. பாகிஸ்தான் அணிஒருமுறை (2000) மட்டும் கிண்ணம் வென்றுள்ளது.