சுமார் 30 வருடத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் 10ம் திகதி திங்கட்கிழமை முதல் செயல்படவுள்ளது. முன்னர் நீதிமன்றம் இயங்கிய கட்டடம் சேதமடைந்துள்ளதினால் அதற்கு சமீபத்தில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றிலேயே நீதிமன்றம் இயங்கவுள்ளது.
குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் நீதிமன்ற கட்டிடத்தினை வைபவ ரீதியாக காலை 9 மணிக்கு திறந்து வைப்பார். கிளிநொச்சி நீதிமன்றுக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றிய அலுவலர்கள் கடந்த முதலாம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.