கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

அரசின் நிவாரண உதவிகளிலேயே பிரபாகரன் தங்கி வாழ்கிறார்.- அமைச்சர் டளஸ் அழகப்பெரும

dalas_alahapperuma.jpgஅப்பாவித் தமிழ் மக்களுக்காக அரசாங்கம் வழங்கி வரும் நிவாரண உதவிகளிலேயே புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கி வாழ்கிறார். தேவையேற்படின் எல்.ரீ.ரீ.ஈ. களை 4 நாட்களுக்குள் முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் அரசுக்கும் படையினருக்கும் உண்டு என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பு, மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை பாதுகாப்புப் படையினர் உலக யுத்த வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை பதித்துள்ளனர். எமது உண்மையான எதிரிகளான புலிகள் ஒழிந்துள்ள இடத்தை படையினர் கண்டுபிடித்துள்ளபோதும் பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக புலிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதில்லை.

புலிகளுக்கு அரசாங்கத்தினால் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை முடக்கி விட்டால் அவர்கள் இயற்கை மரணத்தை எய்துவார்கள். எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியின்படி உணவை ஒருபோதும் ஆயுதமாகப் பயன்படுத்தாது.

பயங்கரவாதத்துக்கெதிராக அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் ஈட்டிய கௌரவமான வெற்றியை சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நேற்றுவரை 64147 பேர் வந்துள்ளனர் – அமைச்சர் மஹிந்த

pr-con-02042009.jpgஅரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நேற்றுவரை 64147 பேர் தப்பி வந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

அரசாங்கம் வழங்கியுள்ள வாகனங்கள் மற்றம் ஏனைய வசதிகளைப் பயன்படுத்தி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 7556 பொது மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் கொண்டுவந்துள்ளது. இவர்களுள் 3488 பேர் நோயாளர்களாவர். ஏனைய 4068 பேரும் நோயாளர்களின் உறவினர்களாவர்.

இடம்பெயந்தேர் தங்கியுள்ள 15  இடைத்தங்கல் முகாம்களுக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புது வருடத்துக்கு முன்னர் சகல இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்களைச் சந்திக்கும் விசேட அறைகள் அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

பிரபாகரன் உடனடியாக சரணடைய வேண்டும். புலிகளுக்கு கடைசி அறிவிப்பு.

thalai.jpgபிரபாகரன் உடனடியாக சரணடைய வேண்டும். பொதுமக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுதான்  கடைசி அறிவிப்பு. என யுத்த தவிர்ப்பு பிரதேசத்தில் படையினர் ஒலிபெருக்கிகளில் மூலம் இன்று அறிவிப்பு விடுத்துள்ளதாக சில சிங்கள இணைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒரேநேரத்தில் கூடுதல் பொது மக்கள் வெளியேறி வரலாமென எதிர்பார்ப்பு

badurdeen.jpgபுதுக் குடியிருப்பு- புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரே நேரத்தில் கூடுதலான பொது மக்கள் வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரலாமென எதிர்பார்க்கப்படுவதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இவ்வாறு ஒரே நேரத்தில் வரும் கூடுதலான மக்களைத் தங்க வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கென வவுனியாவில் பாடசாலைகள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரச அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்ததாக அமைச்சர் கூறினார்.

பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறுவதற்கு மக்கள் தயாராகி வருவதாக அரசாங்கத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. நேற்று முன்தினமும் சுமார் இரண்டாயிரம் பேர் வெளியேறி வந்துள்ளார்கள், என்று தெரிவித்த அமைச்சர் பதியுதீன், ஒரே தடவையில் பெருந்திரளானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

இவர்களைத் தங்க வைப்பதற்கு நிவாரணக் கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகக் கூறிய அமைச்சர் ரிஷாட், சிலவேளை, மக்கள் வருவதற்கு முன்னர் இந்தத் தற்காலிகக் குடியிருப்புகளான வீடுகளை நிர்மாணித்து முடிக்கலாமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி முகாம்களிலும் தங்கியுள்ள மக்களின் நலன்கள் குறித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வவுனியாவில் அரச அதிகாரிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போதே, வெளியேறி வரவிருக்கும் மக்களைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கின்றார்.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைப் படையினர் முழுமை யாகக் கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அங்கிருந்து பொதுமக்கள் முற்றாக வெளியேறியதன் பின்னரே, புலிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடருமெனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலைமையின் தற்போது புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வெளியே ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அங்குள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன மேற்கொண்டு வருகிறார் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா திடீர் பாக்தாத் விஜயம்

obama_ap.jpg

முன்னறிவிக்கப்படாத விஜயம் ஒன்றை மேற்கொண்டு அதிபர் ஒபாமா பாக்தாதுக்கு சென்றுள்ளார். துருக்கிக்கான நீண்ட விஜயத்தின் முடிவில், சிறிது நேரத்துக்கு முன்னர் இராக்கிய தலைநகருக்கு அவர் சென்று இறங்கியுள்ளார்.

அவர் அமெரிக்க படையினரையும், இராணுவ தளபதிகளையும் சந்திப்பார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.இராக்கிய அதிபர் ஜலால் தலபானியையும், பிரதமர் நூரி அல்மலிக்கியையும் அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்த போதிலும், அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஹெலிக்கொப்டரில் செல்வதற்கு மோசமான கால நிலை இடம் கொடுக்காத காரணத்தினால், அநேகமாக அவர்களுடன் அவர் தொலைபேசியிலேயே உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து இன்று Wed. 8 April 4pm லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

சோசலிஸ்ட் கட்சியினால் (CWI- Socialist Party) ஆரம்பித்து வைக்கப்பட்ட தொடர் பிரச்சார நிகழ்வின் ஒர் அம்சமாக 8ம் திகதி புதன்கிழமை இன்று இந்திய தூதரகம் முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தியா தமிழ்நாட்டை மையமாக கொண்டு இயங்கும் இந்த பிரச்சார ஏற்ப்பாட்டாளர்கள் குழு சர்வதேசம் எங்கும் பல நாடுகளில் ஒரே நாளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஒழுங்கு செய்துள்ளனர்.

இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தின் தமிழ் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவளித்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க உதவிய இந்தியா தற்போது நடைபெறும் மனித அவலங்களிலும், தமிழினப் படுகொலையிலும் பங்காளிகளாக இருப்பதை இன்று இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை தமிழர்களின் மனித அவலங்களை நிறுத்த விருப்பமின்றி தனது இந்திய பொருளாதாரத்தை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்ப்படுவதையும்;

விடுதலைப்புலிகளை அழிப்து என்ற போர்வையில் தனது வல்லாதிகத்தை இலங்கையில் ஏற்ப்படுத்துவதும் இந்த மனித அவலங்களில் அக்றையற்ற சர்வதேசங்களின் மனச்சாட்சியையும்;

தமிழ் மக்களின்மீது நடாத்தப்படும் இந்த மனித அவலத்தின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் சர்வதேசத்தின் நிலையையும் இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

ஆளும் வர்க்கம் தமது நலனிலும் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதில் மட்டுமே அக்கறையுடன் இருப்பதையும் தொழிலாளிகள் விவசாயிகள் தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக தாமே போராட வேண்டும் என்பதையும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்தும்.

International Day of Action – Protest at INDIA HOUSE, Aldwych, London, WC2B 4NA
http://www.stoptheslaughteroftamils.org/

Wednesday 8 April 4 – 5.30 pm

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்

A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்

லாலு பேச்சு: கைது செய்ய உத்தரவு

laluprasat.jpgநான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருண் காந்தியை ரோடு என்ஜினை ஏற்றி கொன்றிருப்பேன் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார். இதையடுத்து அவரைக் கைது செய்ய பிகார் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

லாலு பிரசாத் யாதவின் இந்தப் பேச்சு தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லாலுவின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. லாலுவின் பேச்சு விஷமமானது. இதுவும் துவேஷப் பேச்சாகும் என்று பாஜக மூத்த தலைவர் சுதீந்திர குல்கர்னி தெரிவித்திருந்தார்.

இருப்பினும், நான் சொல்ல வந்தது வேறு. மதவாத அரசியலைத்தான் புல்டோசர் போட்டு நசுக்க வேண்டும் என கூறியிருந்தேன். ஆனால் மீடியாவில் வந்ததைப் போல நான் பேசவில்லை. அரசியல் ரீதியாக வருண் கதையை முடித்திருப்பேன் என்றுதான் நான் கூறினேன் என்று ஜகா வாங்கியிருந்தார் லாலு.

இந்த நிலையில் இன்று லாலு பிரசாத் யாதவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந் நிலையில் லாலுவைக் கைது செய்ய கிஷண்கஞ்ச் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தலைவர் திடசங்கற்கம் பூண்டுள்ளார்: பா. நடேசன்

thalai.jpgதமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தை இடையறாது முன்னெடுக்க தமிழீழு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அதன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் தெரிவித்துள்ளார்.
 
1985ம் ஆண்டு பூட்டானின் தலைநகர் திம்புவில் முன்வைக்கப்பட்ட சமாதானத் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தயார் நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் ஜனசக்தி தமிழ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலி : நிலநடுக்க பலி 180 ஆக உயர்வு

italyearthquake.jpgஇத்தாலியின் மையப்பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.

அப்ருஸோவின் தலைநகரான லக்யுலாவின் பெரும்பாலான பகுதிகள் இந்த நிலநடுக்கத்தில் கடுமையாக சேதமடைந்துள்ளன. அந்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்தன. அதில் தூங்கிக் கொண்டிருந்த மக்களும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,500 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

வருண்காந்தியை ரோடு ரோலருக்கு அடியில் போட்டு நசுக்கவேண்டும்: லாலு

laluprasat.jpgநான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்து இருந்தால் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய வருண் காந்தியை ரோடு ரோலருக்கு அடியில் போட்டு நசுக்கி இருப்பேன் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் ஆவேசமாக பேசினார். பீகாரில் உள்ள கிஷன்கன்ஞ்சில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்.ஜே.டி.) தலைவர் லாலு பிரசாத் பேசுகையில்,

கடந்த தேர்தலின்போது ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜ. மதவாதத்தை தூண்டி விட்டது. சோனியா வெளிநாட்டில் பிறந்தவர் என்ற பிரச்னையை கையில் எடுத்தனர். பா.ஜ.வின் இந்த சூழ்ச்சியை ஆர்.ஜே.டி. கட்சியும் நானும் தோற்கடித்து ஏமாற்றம் அடைய வைத்தோம். பாபர் மசூதியை இடித்ததில் நேரடியாக தொடர்பு உடைய அத்வானியின் மடியில் நிதிஷ்குமார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரது கனவு ஒரு போதும் நிறைவேறாது என்றார்.