தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தை இடையறாது முன்னெடுக்க தமிழீழு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அதன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் தெரிவித்துள்ளார்.
1985ம் ஆண்டு பூட்டானின் தலைநகர் திம்புவில் முன்வைக்கப்பட்ட சமாதானத் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தயார் நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்திலிருந்து வெளியாகும் ஜனசக்தி தமிழ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
MUKILVANNAN
A GREAT SINGER IS HE WHO SINGS OUR SILENCE
thurai
தனிமனித சுதந்திரமே தமிழரின் சுதந்திரமாக மாறமுடியுமென்பதை அறியமுடியாத தலவனே நீர் உம் ஆதரவாளர்களோ மேய்பன் முன் செல்லும் மந்தை போல் இருந்துவிட்டார்கள்.
முதலில் தலைவா நீர் நிற்கும் இடத்தில் நிம்மதியாக இருக்கமுடியுமானால் அதன் பின்னர் தமிழினத்தைப் பற்ரி சிந்திக்கவும்.
துரை
ssganendran
இதுதான் 2009இன் மிகச்சிறந்த நகைச்சுவை, இனி எங்கிருந்தாம் பிள்ளை பிடிக்கப்போகிண்றார் தலைவர் ஐயா? புலம்பெயர் நாடுகளில் புலிக்கொடி துக்கிப்பிடித்து தெருக்கூத்துக்காட்டும் ஐயாமார்கள் அம்மாமார்கள் தங்கள் பிள்ளைகளைகளை மனமுவந்து அனுப்புவதெண்றாலும் எங்கு எப்படி என்பதே தெரியாமல் தமிழ் மக்கள் வாழ்ந்த மண்ணையே அழித்தொழித்துவிட்டு தொடரப்போகிறாராம் போராட்டத்தை. கேட்பவன் கேனை எண்றால் ஆகாயவிமானத்தை எருமைமாடு ஓட்டுகிறது எனச்சொல்லவும் தயங்கமாட்டார்கள் இந்த்த புலிக்கூட்டம்
மாயா
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான்.
1985க்கு பிறகு எத்தனை உயிர்கள் ?
எண்ணிப்பார்க்க முடியவில்லை. நெஞ்சு வலிக்கிறது. இன்னும் கொஞ்சம் நாட்களில் குப்பியை கழுத்தில் போட்டு அடுத்தவர்களைக் கடி என்றவர்கள் கடிக்க வேண்டியதுதானே? தன் உயிர் வாழ எப்படி இறங்கி வருகிறார்கள்?
ஐயோ இன்னும் இதுகளுக்கு விளங்குதில்லையே?
பார்த்திபன்
//தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தை இடையறாது முன்னெடுக்க தமிழீழு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டுள்ளார் – பா.நடேசன் //
ஓ..தாலை தானோ நாட்டை விட்டோட திட்டமெல்லாம் போட்டனீங்கள். எனி உந்த திடசங்கற்பம் எல்லாம் வெறும் ஏட்டுச் சுரக்காய் தான்.
damilan
எங்கே பங்கருக்குள்ளேயா? இல்லை சவப்பொட்டிக்குள்ளேயா? உங்களைப் போன்றவர்களையும் அப்பாவி மக்களையும் பலி கொடுக்கும் வரை சுதந்திரப் போராட்டத்தை தலைவர் முன்னேடுப்பார்.
murugan
இது வெல்லாம் ஒரு செய்தியென தேசம் எங்களை சோதித்து பார்க்கிறது. நாங்களும் சளைக்காமல் பின்னூட்டம் விடுகிறோம்.
chandran.raja
பிறந்த பூமியை நம்பி வாழ்பவனுக்கும் அதை நேசிப்பவனுக்கும் சுகந்திரத்தையல்ல சுருக்குகயிற்றை தான் வழங்கமுடியும். இது தான் கடந்த காலத்தில் நாம் அனுபவித்த கசப்பான உண்மைகள்.
புலம்பெயர் நாட்டில் அந்தந்த நாடுகளின் ஜனநாயகத்தையும் பாஷைகளையும் கற்றுக்கொண்டவர்கள் சிங்களத்தை வெறுப்பாக பார்ப்பதும் ஒரு ஜனநாயகபோராட்டத்தை விருத்தி செய்யமறுத்து பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதும் அர்தமற்ற கற்பனை இராச்சியத்தை காணமுயல்வதும் தான் இன்றைக்கு வேதனை தரும் முரண்பாடாகயிருக்கிறது.
selva
//சுதந்திரப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தலைவர் திடசங்கற்ப்பம் பூண்டுள்ளார்//
இந்தச் செய்தி எங்கேயோ இடிக்குறமாதிரி இருக்குதே… ஓகோ!.. அப்படியாயின் தலைவர் நாட்டை விட்டு தாவிவிட்டாரா?.. அவ்வாறானதோர் சம்பவம் நிகழ்ந்திருக்குமானால் ஐயாவுக்கு ஒரு இத்தூண்டு.. சான்ஸ் உண்டு. மத்தபடி நடேசண்ணா நீங்கள் சும்மா எல்லாம் அறிக்கை விடக்கூடாது.