அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நேற்றுவரை 64147 பேர் வந்துள்ளனர் – அமைச்சர் மஹிந்த

pr-con-02042009.jpgஅரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நேற்றுவரை 64147 பேர் தப்பி வந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

அரசாங்கம் வழங்கியுள்ள வாகனங்கள் மற்றம் ஏனைய வசதிகளைப் பயன்படுத்தி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 7556 பொது மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் கொண்டுவந்துள்ளது. இவர்களுள் 3488 பேர் நோயாளர்களாவர். ஏனைய 4068 பேரும் நோயாளர்களின் உறவினர்களாவர்.

இடம்பெயந்தேர் தங்கியுள்ள 15  இடைத்தங்கல் முகாம்களுக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புது வருடத்துக்கு முன்னர் சகல இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்களைச் சந்திக்கும் விசேட அறைகள் அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *