செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இலங்கையை இன்னிங்ஸ்-144 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

india.jpgகான்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கையை ஒரு இன்னிங்ஸ், 144 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி அடையச் செய்தது.

கான்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 642 ஓட்டங்களைக் குவித்து இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து இலங்கையின் ஆட்டம் தொடங்கியது – தடுமாற்றத்துடன். ஸ்ரீசாந்த்தின் அபாரப் பந்து வீச்சால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை 229 ஓட்டங்களுக்கு இழந்தது. இதையடுத்து பாலோ ஆன் வாங்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது இலங்கை. இந்த முறை ஹர்பஜன் சிங்கும், ஓஜாவும் பந்து வீச்சில் இலங்கையை கட்டுப்படுத்தினர்.

சமரவீராவைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வீழ்ந்து வெளியேறினர். சமரவீர கடுமையாகப் போராடி 78 ஓட்டங்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 269 ஓட்டங்களில் வீழ்ந்து இலங்கை. ஒரு இன்னிங்ஸ் 144 ஓட்டவித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது முதல் இன்னிங்ஸில் இலங்கையை நிலை குலைய வைத்த ஸ்ரீசாந்த் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

 India 642
Sri Lanka 229 & 269 (65.3 ov)
India won by an innings and 144 runs

Sri Lanka 2nd innings (following on)
 NT Paranavitana  lbw b Sehwag  20 
 TM Dilshan  c †Dhoni b Sreesanth  11
 KC Sangakkara*  b Harbhajan Singh  11
 DPMD Jayawardene  run out (Yuvraj Singh/†Dhoni)  10 
 TT Samaraweera  not out  78 
 AD Mathews  c Dravid b Khan  15
 HAPW Jayawardene†  b Harbhajan Singh  29 
 HMRKB Herath  lbw b Harbhajan Singh  13 
 M Muralitharan  b Ojha  29 
 BAW Mendis  lbw b Yuvraj Singh  27 
 UWMBCA Welegedara  c & b Ojha  4 
 Extras (b 7, lb 1, nb 14) 22     
      
 Total (all out; 65.3 overs; 294 mins) 269 (4.10 runs per over)
Fall of wickets1-13 (Dilshan, 3.3 ov), 2-37 (Paranavitana, 10.5 ov), 3-54 (DPMD Jayawardene, 18.3 ov), 4-54 (Sangakkara, 19.1 ov), 5-79 (Mathews, 24.4 ov), 6-140 (HAPW Jayawardene, 37.5 ov), 7-154 (Herath, 41.2 ov), 8-191 (Muralitharan, 44.5 ov), 9-264 (Mendis, 64.2 ov), 10-269 (Welegedara, 65.3 ov) 
        
 Bowling O M R W Econ  
 Z Khan 11 0 63 1
 S Sreesanth 11 4 47 1
 Harbhajan Singh 22 2 98 3
 V Sehwag 3 0 4 1
 PP Ojha 15.3 4 36
 SR Tendulkar 1 0 6 0  
 Yuvraj Singh 2 0 7 1

 

எதிர்க் கட்சிகளிடம் எதிர்காலத் திட்டமில்லை – விமல் வீரவன்ச

vimal-veeravansa.jpgஎதிர்காலத் திட்டமெதுவும் இல்லாத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கும் ஒரே நோக்கில்தான எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்துள்ளன என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஒரே கொள்கையில் ஒன்றுபட முடியாத இவர்கள் எப்படி நாட்டை ஆளப்போகிறார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். விமல் வீரவன்ச அங்கு மேலும் கூறியதாவது இந்த நாட்டில் சர்வாதிகாரம் நடைபெறுவதாகக் கூறும் எதிhக்கட்சிகள் அதற்கான ஆதாரங்ளை முன்வைக்க வேண்டும். தேவையானளவு அதிகாரம் இன்றி எந்தக் கட்சியையும் கட்டியெழுப்ப முடியாது. குடும்ப அரசியலால் இந்த நாட்டுக்குப் பாதகம் இல்லை. அவர்களின் செயற்பாடுகளால் நாடு நன்மையடைந்தால் அதுவே பெரும் சேவையாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

புத்தளவை அண்மித்த பகுதியில் எம்.ஐ.-24 உலங்கு வானூர்தி விபத்து

இலங்கை விமானப்படையின் எம்.ஐ.24 தாக்குதல் ரக உலங்கு வானூர்தி ஒன்று புத்தள காட்டுப் பகுதியில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்துள்ளது. 5 வான் படையினருடன் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாக விமானப்படைத்தரப்பு அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப பிரச்சினையே இந்த விபத்துக்கான காரணம் என உடனடியாக அரசாங்கம் அறிவித்த போதும் விசாரணைகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உலங்கு வானூர்தி, தற்போது எரிந்து கொண்டிருப்பதாகவும் உலங்கு வானூர்த்தியில் சென்ற 5 பேர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, பாராளுமன்ற முறை மாற்றம்; சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் – அநுர பிரியதர்ஷன யாப்பா

anura.jpgநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்வதும், பாராளுமன்ற முறையை மாற்றி அமைப்பதும் சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பாராளுமன்ற முறையை மாற்றாமல் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கினால், ஸ்திரமற்ற நிலை உருவாகும். அவ்வாறு பாராளுமன்றத்தைப் பலவீனப்படுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றவே எதிர்க் கட்சிகள் முயற்சிக்கின்றன.

இதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்த அமைச்சர், இந்த இரண்டு விடயங்களையும் சமகாலத்தில் மேற்கொள்ள எதிர்க் கட்சிகள் முன்வருமானால் அரசாங்கமும் அதற்கு தயாராகவே உள்ளது என்றும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார்.

“ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியம், அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும். ஜனாதிபதியால் மாத்திரம் தனித்து இதனைச் செய்ய முடியாது.  எதிர்க் கட்சி கூறுவதைப்போல் செய்வதானால் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள பாராளுமன்றத்தில் தான் இதனைச் செய்யவேண்டும். நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் எதனையும் நடத்த முடியாது.

எனவே மீண்டும் ஜனாதிபதி தலைமையில் பலமான ஓர் அரசாங்கத்தை உருவாக்கவேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, பாராளுமன்றம் பலவீனமான நிலையில் ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்தால், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.

நெருக்கடிகளுக்குப் பின்னரான செயற்பாடுகளில் இப்போது நாடு உள்ளது. உலக அரசியல் மாற்றமடைந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் நாமும் செயற்படவேண்டும். இராணுவ மூலோபாயத்தினால் மாத்திரம் யுத்தத்தை வெல்ல முடியாது. அவ்வாறெனில் எப்போதோ வென்றிருக்கலாம்.

ஆகவே, அரசியல் மூலோபாயமும் அவசியம். அந்த இரண்டையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தலைமையில் மேற்கொண்டதனால் தான் எம்மால் யுத்தத்தை வெல்ல முடிந்தது. அந்த வகையில் ஈடினையற்ற ஒரு பொது ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உள்ளார். அவருக்குச் சவாலாக எவருமே இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

3 ரிச்டர் அளவில் நேற்று தென் பகுதியில் நில அதிர்வு

தென் பகுதியின் சில பிரதேசங்களில் நேற்றுக்காலை சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக பூகற்பவியல் அகல்வாராய்ச்சித் திணைக்களம் தெரிவித்தது. இந்த நில அதிர்வு திஸ்ஸ மகாராம, லுணுகம் வெஹர, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, அம்பலந்தொட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக திணைக்கள பணிப்பாளர் டொக்டர் ஒ. கே. திசாநாயக்க கூறினார்.

இந்த நில அதிர்வினால் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், நில அதிர்வு தொடர்பாக பல்லேகலேயில் உள்ள பூமியதிர்வு உபகரணங்களில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 3 ரிச்டர் அளவை விட குறைந்தளவு நில அதிர்வே ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நில அதிர்வு குறித்து திணைக்களம் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

பல்லேகலே சுனாமி நிலையத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திலேயே இந்த நில அதிர்வு இடம்பெற்றுள்ளது. கண்ணாடிகள், ஜன்னல்கள் என்பன ஒரு சில செக்கன்கள் அதிர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பைத் தாக்குதல் தினமான நேற்று தமிழக கரையோரப் பாதுகாப்பு தீவிரம்

mumbai-terror-attack.jpgமும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தினமான (நவம்பர் 26 ஆம் திகதி) நேற்று தமிழகத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. மும்பையில் மீண்டும் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் சமீபத்தில் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் இந்திய கடற்படையும் கடலோர காவல்படையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பாக்கு நீரினை சந்தியில் இந்திய கடற்படையினரும் கடலோர காவல்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சிபுலியில் உள்ள விமான கண்காணிப்பு நிலையம் உஷார்படுத்தப்பட்டுள்ளதுடன், பாக்ஜலசந்தி,மன்னார் வளைகுடா பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டக்கூடாது என்றும் தங்களுடைய அடையாள அட்டைகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதைகள் இனி மூடப்படாது

கொழும்பில் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் பாதைகள் இனிமேல் மூடப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை சுமுக மானதையடுத்தே இத்தகைய தடைகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கூறிய பிரிகேடியர், இனிமேல் எம்.பிக்கள், இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அதி முக்கியஸ்தர்கள் பயணம் செய்வதற்காக வீதிகள் மூடப்படமாட்டாதெனவும் தெரிவித்தார். பாராளுமன்றம் செல்லும் வீதி உட்பட அனைத்து வீதிகளிலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வவுனியாவில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த சகல பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைக்கு ஒப்படைப்பு

gachandrasri.jpgவவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப் பட்டிருந்த சகல பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் தற்காலிகமாக வவுனியா மாவட்ட பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். சிலர் படிப்படியாக நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டனர்.

மீள்குடியேற்றம் துரிதமாக நடைபெறுவதால் பாடசாலைகளில் தங்கவைக்கப் பட்டுள்ளவர்கள் நிவாரணக் கிராமத்துக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்டத்திலுள்ள 18 பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகாக ஒப்படைக்கப் பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

பொன்சேகா அரசியலில் ஈடுபடுவதற்கு ஹெல உறுமய கடும் எதிர்ப்பு

முன்னாள் இராணுவத்தளபதியான ஜெனரல் சரத்பொன்சேகா அரசியலில் ஈடுபடுவதையோ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதையோ ஹெல உறுமய ஆதரிக்கவில்லையெனவும் ஆனால் அவர் அரசியல் பிரவேசம் செய்து ஆசி வேண்டி எம்மிடம் வந்தால் அவருக்கு நல்ல ஆலோசனை வழங்கி பிரித்நூல் கட்டுவதற்கு தயங்கமாட்டோம் என்று ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான உடவத்தே நந்ததேரோ நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்களான உடவத்தே நந்ததேரோ, அக்மீமன தயாரத்ன தேரோ, அளவ்வை நந்தாலோக்க தேரோ, அப்பரெக்க புன்னானந்த தேரோ, உடுவே தம்மாலோக்க தேரோ ஆகிய ஐந்து பேரும் செய்தியாளர் மாநாட்டை நடத்தினர் . ஜெனரல் சரத்பொன்சேகாவை தேசத்தை காத்த வீரராகவே நாம் மதிக்கின்றோம். அவரைத் தேசிய வீரராகவே நாட்டுமக்கள் மதிக்கின்றனர். ஆனால் அவர் சில தீய சக்திகளின் வலையில் சிக்கி தனது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளப்போகிறார். ஜெனரல் சரத்பொன்சேகா ஒரு சிறந்த இராணுவீரர். அவருக்கு யுத்த உபாயம் நன்கு தெரியும். ஆனால் அவரால் நாட்டை ஆளக்கூடிய தகைமை கிடையாது. நாட்டை ஆள்பவருக்கு பொறுமை மிக அவசியம். அந்தப் பொறுமை அவரிடம் கிடையாது. சர்வதேச சதிகாரர்களின் உள்ளூர் முகவர்களுடன் சேர்ந்து நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் நோக்கத்துடன் அரசியலுக்கு வரும் ஜெனரல் பொன்சேகாவை நாம் எந்த விதத்திலும் ஆதரிக்க முடியாது எனவும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினர்.

மீள்குடியேறிய ஆசிரியர்கள் கிழக்கு பாடசாலைகளில் இணைப்பு

sri-lanka-teacher.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட 72 ஆசிரியர்கள் தற்காலிகமாக கிழக்குப் பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். தண்டாயுதபாணி தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் மேற்படி 72 பேரின் பெயர் பட்டியலை தமக்கு அனுப்பி வைத்தள்ளதாக அவர் மேலும் கூறினார்.