வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட 72 ஆசிரியர்கள் தற்காலிகமாக கிழக்குப் பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். தண்டாயுதபாணி தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் மேற்படி 72 பேரின் பெயர் பட்டியலை தமக்கு அனுப்பி வைத்தள்ளதாக அவர் மேலும் கூறினார்.