வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் பெயர் விபரங்களைப் பார்வைக்கு வைக்கத் தீர்மானித்திருப்பதான வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
அவ்வாறு பெயர் விபரங்களைப் பார்வைக்குவைத்தால் முகாம்களுக்கு வெளியிலிருக்கும் உறவினர்கள் முதியவர்களை அழைத்துச்செல்வதற்கு ஏதுவாக இருக்குமென அவர் கூறினார்.
நலன்புரி முகாம்களிலிருக்கும் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களை வெளியேற அனுமதிக்க மாவட்ட செயலகமும், மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சும் தீர்மானித்தன.
இதற்கமையவே ஒவ்வொரு முகாம்களிலும் முதியவர்களின் பெயர் விபரங்களை பார்வைக்குவைக்க நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும், அதன் பின்னர் வெளியிலிருக்கும் உறவினர்கள் விண்ணப்பித்து முதியவர்களை முகாம்களிலிருந்து அழைத்துச்செல்ல முடியுமெனவும் வவுனியா அரசாங்க அதிபர் கூறினார்.