எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவு வெளியானது – லோகேஸ்வரன் முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.

031009logeswaran.gifஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. யாழ். வட்டுக்கோட்டை தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் ஸ்ரீகர்ஷன் 192 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் இலங்கையில் முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.

சிங்கள மொழிமூலம் 196 புள்ளிகளைப் பெற்று அம்பாந்தோட்டை ருஹரிணு விஜயபா மகா வித்தியாலய மாணவன் கே. ஏ. பிரமோத் டில்ஷான் முதலாவது இடத்தையும் பிடித்துள்ளார். வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த சச்சிதானந்தம் கெளரீசன் என்ற மாணவன் 191 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில்(தமிழ் மொழி மூலம்) இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தப் பாடசாலையில் 58 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் 82 மாணவர்களும், சைவப்பிரகாசா மகளிர் மாகாவித்தியாலயத்தில் 42 மாணவர்களும், தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 34 மாணவர்களும், நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் 10 மாணவர்களும், பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் 6 மாணவர்களும் , சிதம்பரபுரம் சிறிநாகராஜா வித்தியாலயத்தில் 5 மாணவர்களும் , செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 4 மாணவர்களும் , தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் 3 மாணவர்களும் , இயங்கராவூர் , தாலிக்குளம் ஆகிய பாடசாலைகளில் தலா 2 மாணவர்களும் இந்தப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 2 லட்சத்து 98,000 மாணவர்கள் தோற்றினர். இவர்களுள் 31,000 பேரே சித்தியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

மாவட்டங்களுக்குரிய வெட்டுப்புள்ளிகள் வருமாறு:

கொழும்பு, கம்பஹா, களுத்துறை / கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல், கேகாலை தமிழ் மொழிமூலம் 141 புள்ளிகள். சிங்கள மொழிமூலம் – 144 புள்ளிகள்

நுவரெலியா தமிழ் – 137 சிங்களம் 138
வவுனியா – தமிழ் 136 சிங்களம் 136
அம்பாறை – தமிழ் 139 சிங்களம் 139
திருகோணமலை – தமிழ் 138 சிங்களம் 139
புத்தளம் – தமிழ் 137 சிங்களம் 139
அநுராதபுரம் – தமிழ் 138 சிங்களம்139
பொலன்னறுவை – தமிழ் 140 சிங்களம் 139
பதுளை – தமிழ் 138 சிங்களம் 139
மொனராகலை – தமிழ் 135 சிங்களம் 138
மன்னார் – தமிழ் 139
இரத்தினபுரி – தமிழ் 134 சிங்களம் 141
மட்டக்களப்பு – தமிழ் 139

ஐ.சி.சி. விருது – தலைசிறந்த வீரர் டோனி, டெஸ்ட் வீரர் காம்பீர் 20 ஓவர் போட்டி வீரர் டில்சான்,

tmdil.jpgசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி) ஆண்டுதோறும் சிறந்த வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. ‘கிரிக்கெட் வீரர்களின் ஆஸ்கார்’ என்று அழைக்கப்படும் இவ்விருதுக்கு இந்த ஆண்டு நிறைய வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. ஓராண்டு காலம் (2008ம் ஆண்டு ஆகஸ்டு 13 ந் திகதி முதல் 2009 ம் ஆண்டு ஆகஸ்டு 24 ந் திகதி வரை) வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் விருதுக்கு தகுதியானவர்கள் கருத்தில் கொள்ளப்பட்டனர்.

இதன் பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 6 வது ஐ. சி. சி. விருதுகளை பெறும் வீரர்கள் யார் – யார்? என்ற விவரம் நேற்று முன்தினமிரவு ஜோகனஸ்பர்க்கில் நடந்த கோலாகலமான விழாவில் அறிவிக்கப்பட்டன.

இதன்படி ஆண்டின் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான விருதை இலங்கை அணி டில்ஷான் பெற்றார். சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதியில் மே. தீவுக்கு எதிராக 57 பந்துகளில் 96 ஓட்டங்கள் விளாசியது அவருக்கு இந்த விருதை பெற்றுத்தந்தது. வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு அவுஸ்திரேலியாவின் 24 வயதான வேகப்பந்து வீச்சாளர் பீட்டல் சிடில் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன சிடில் 12 டெஸ்ட் ஆடி 49 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தலைசிறந்த வீரருக்கான ஐ. சி. சி. விருதுக்கு இந்திய வீரர்கள் டோனியும் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு கவுதம் காம்பீரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மேலும்  விளையாட்டு உணர்வுடன் ஆடியதற்கான உத்வேக அணிக்கான விருதுக்கு நியூசிலாந்து அணியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் : மார்ச்சில் பாராளுமன்றத் தேர்தல் – அரசு தீர்மானம்

srilanka-voting.jpg2010 ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலையும் மார்ச்சில் பாராளுமன்றத் தேர்தலையும் அரசாங்கம் நடத்தவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல், ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில்;

ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் ஊடகங்களுடன் அரசாங் கத்துக்கு எந்தவொரு பிணக்குமி ல்லை.

ஊடகவியலாளர்களை அழிப்பதோ அல்லது அதனூடாக இலாபம்பெறுவதோ அரசின் நோக்கமல்ல. உரிய சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்தி பத்திரிகைப் பேரவையை தொடர்ந்து செயல்படுவதற்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கம்.

செம்பியன் கிண்ணம் இறுதியாட்டத்துக்கு அவுஸ்திரேலியா தெரிவு

021009untitled.bmpசாம்பி யன்ஸ் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்று இரவு பகல் ஆட்டமாக  சென்சூரியனில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 257 ஓட்டங்களை தனது இனிங்சில் பெற்றது. சென்சூரியன் மைதானம் துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமான மைதானமாகும். இங்கிலாந்து அணி 5.56 ஓட்ட வீதத்தைப் பேணியும் கூட மைதானத்தைப் பொறுத்தமட்டில் இது குறைவான ஓட்டமென்றே கிரிக்கட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். நேற்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா பந்து வீச்சில் களத்தடுப்பும் மிகவும் உயரிய மட்டத்திலே காணப்பட்டது.

அவுஸ்திரேலியா அணி தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த வேளையில் மைதானத்தின் புற்றீசல்கள் அதிகமாக இருந்ததினால் ஆட்டம் சற்று தாமதித்தே ஆரம்பமானது. புற்றீசல்களை அகற்ற மைதான ஊழியர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டனர்.

பின்பு இப்போட்டியில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி தனது முதல் விக்கட்டை 6 ஓட்டங்கள் பெற்ற நிலையில் இழந்தது. தொடர்ந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வொட்சனும் ரிக்கி பொன்டினும் மிகவும் அவதானமாக போட்டிநேரம் முடியும் வரை ஆடுகளத்திலே ஆட்டமிக்காமல் நிதானமாக ஆடி அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களைப் பெற்ற வொட்சன் ஆட்ட நாயகனாக தெரிவானார்.

இதன் மூலம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள சம்பியன் கிண்ண இறுதியாட்டத்துக்கு அவுஸ்திரேலியா அணி தெரிவு செய்யப்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தின் களத்தடுப்பும் பந்து வீச்சும் கிரிக்கட் விமர்சகர்களின் விமர்சனத்துக்கு உட்பட்டிருந்தது.

இன்று இப்போட்டியின் இரண்டாவது இறுதிப்போட்;டி நிவுசிலாந்து பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

England won the toss and elected to bat

England innings

 AJ Strauss*  c Hopes b Siddle  14
 JL Denly  not out  21 
 OA Shah  c †Paine b Lee  0
 PD Collingwood  c †Paine b Johnson  34  
 EJG Morgan c †Paine b Watson 9
 SM Davies† b Watson 5
 LJ Wright  c †Paine b Siddle  48
 TT Bresnan  b Lee  80
 GP Swann  run out (Hauritz/†Paine)  18
 JM Anderson  not out  5
 G Onions  run out (Ferguson/†Paine)  1
 
 Extras (w 6, nb 1) 7    
     
Total (all out; 47.4 overs) 257 (5.39 runs per over)
Fall of wickets1-15 (Strauss, 1.6 ov), 2-16 (Shah, 2.4 ov), 3-71 (Collingwood, 11.2 ov), 4-91 (Denly, 17.2 ov), 5-100 (Davies, 18.5 ov), 6-101 (Morgan, 20.2 ov), 7-208 (Wright, 39.6 ov), 8-245 (Swann, 45.1 ov), 9-251 (Bresnan, 46.2 ov), 10-257 (Onions, 47.4 ov)
       
 Bowling 
 B Lee 9 0 46 2
 PM Siddle 10 0 55 3
 JR Hopes 4 0 28 0 
 MG Johnson 10 1 61 1
 SR Watson 8.4 1 35 2
 NM Hauritz 6 0 32 0 5.33 

 Australia innings

 SR Watson  not out  136 
 TD Paine†  c †Davies b Onions  4
 RT Ponting*  not out  111
 Extras (lb 2, w 5) 7    
     
 Total (1 wicket; 41.5 overs; 176 mins) 258 (6.16 runs per over)
Did not bat MEK Hussey, CL White, CJ Ferguson, JR Hopes, MG Johnson, B Lee, NM Hauritz, PM Siddle
Fall of wickets1-6 (Paine, 1.3 ov)

Bowling
 JM Anderson 8.5 0 48
 G Onions 8 0 47 1
 TT Bresnan 8 0 51 0
 PD Collingwood 8 0 50 0
 GP Swann 5 0 31 0
 LJ Wright 3 0 18 0 
 OA Shah 1 0 11 0 

Player of the match SR Watson (Australia)

தில்லியின் இலங்கை தூதரகம் மீது புதிய தமிழகம் கட்சியினர் தாக்குதல்; இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

03srilankanhighcommissioninde.jpgஇந்தியத் தலைநகர் தில்லியில் உள்ள இலங்கைத் தூதரக வளாகத்துக்குள் புகுந்து புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழர்களை, தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தக் கோரியும், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் புதிய தமிழகம் மற்றும் தெளஹீத் ஜமாத் மற்றும் யாதவ மகாசபை ஆகிய அமைப்புக்களின் சார்பில் தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர், இலங்கைத் தூதரகம் அமைந்துள்ள கெளடில்யா மார்க் பகுதிக்குச் சென்று, அத்துமீறி உள்ளே நுழைந்தார்கள். வளாகத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை உடைத்துச் சேதப்படுத்தினார்கள்.

இந்தச் சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் குறித்து மிகுந்த வருத்தப்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய பூகம்பம் : 40 மணி நேரத்திற்குப் பின் மாணவி ஒருவர் மீட்பு

01-indonesia.jpgஇந்தோ னேசியாவில் பூகம்பம் ஏற்பட்ட பதாங் நகரில் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 40 மணி நேரத்திற்கு பின் 21 வயது மாணவி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள பதாங் நகரில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து நாசமாயின.

ஒட்டுமொத்த நகரமே தரைமட்டமாகி விட்டதைப் போல் எங்கு பார்த்தாலும் கட்டிட இடிபாடுகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இந்த பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டி விட்டது. மேலும் ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் ஏராளமான பிணங்கள் கிடக்கின்றன. எனவே பிணங்களை முழுமையாக அகற்றிய பின்னர்தான் சரியான இறப்பு எண்ணிக்கை தெரியவருமெனக் கூறப்படுகின்றது.

பதாங் நகரில், இடிந்து விழுந்த ஒரு பள்ளிக்கூட கட்டிடத்தின் இடிபாடுகளை மீட்புக்குழுவினர் அகற்றிய போது ஒரு பெண்ணின் குரல் லேசாக கேட்டது. இதனால் உஷாரான அவர்கள் இடிபாடுகளை மெதுவாக அகற்றி உள்ளே சிக்கி இருந்த சாரி என்ற 21 வயது மாணவியை மீட்டனர். மிகவும் தாகமாகவும், பசியாவும் இருப்பதாக சாரி கூறியதை தொடர்ந்து அவருக்கு உடனடியாக பால் கொடுக்கப்பட்டது. அவர் மீட்கப்பட்டதும் அங்கு திரண்டு இருந்தவர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மிகவும் சோர்வாக இருந்த அந்த மாணவி சாரி உடனடியாக அம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இடிபாடுகளுக்குள் இருந்து 40 மணி நேரத்திற்கு பின் அந்த மாணவி உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறார். பள்ளிக்கூட கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக தெரிய வந்து உள்ளது. அவர்களையும் பத்திரமாக மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கே.பி.க்கு சுமார் 600 வங்கி கணக்குகள் இருக்கின்றன – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

KP_Selvarajah_Pathmanathanவிடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று தன்னைப் பிரகடனப்படுத்திய நிலையில் தற்போது தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு 600 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன என்று கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கே.பி.யை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.பி.யிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு சுமார் 600 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணைகள் யாவும் நிறைவடைந்ததன் பின்னர் ஏனைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

ஹிலாரியின் குற்றச்சாட்டுக்கு அரசு கண்டனம் : பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பில் ஹிலாரி யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை- அமெரிக்க தூதரகம்

hillary-clinton.jpgஇலங்கை இராணுவத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்தை யுத்தத்தின் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தவில்லையென பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

முதன்முதலாக இராணுவத்தினர் மீது இப்படி ஓர் அபாண்டத்தைச் சுமத்துகிறார்களெனத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ள கூற்றை நிராகரிப்பதாகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை (02) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்தக் கண்டனத்தையும் மறுப்பையும் வெளியிட்டார்.

இலங்கை இராணுவத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்தை (கற்பழிப்பை) யுத்தத்தின் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி உள்ளார்களென்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் கூறியுள்ளமை ஓர் அப்பட்டமான கட்டுக்கதையாகுமென்று கூறிய அமைச்சர் கெஹலிய, பொறுப்பற்ற விதத்தில் ஹிலாரி கூறியது கவலை தருவதாகக் குறிப்பிட்டார். புலிகள் இயக்கப் பெண்களும், வேறு பெண்களும் கற்பழித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகும். இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே இதனைக் கருதுகிறோம். முன்பு ஒருபோதும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை சுமத்தவில்லை. ஹிலாரி கிளின்ரன் இவ்வாறு கூறுகையில், புலிகள் இயக்கத்தினருக்குச் சட்ட ரீதியான எந்த ஆதரவும் வழங்கப்படமாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார்.

ஒரு விடுதலைக்கான நடவடிக்கையையே இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டனர். படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக பொறுப்பற்ற விதத்தில் ஹிலாரி தெரிவித்திருக்கின்றார் என்று தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சில வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவியுடன் சில அமைப்புகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பில் ஹிலாரி யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை: அமெரிக்க தூதரகம் விளக்கம்

இலங்கை போரில் பாலியல் வன்முறைகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் பொதுப்படையாகக் கருத்துத் தெரிவித்தாரே தவிர, அவர் எந்த ஒரு தரப்பையும் அது தொடர்பாகச் சுட்டிக்காட்டவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டின்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.  ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் புதன்கிழமை பேசிய கிலறி கிளின்ரன், போரின்போது பாலியல் வன்முறை ஓர் ஆயுதமாக சிறிலங்கா, பர்மா, பால்கன் நாடுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் வன்முறையால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின்போது உரையாற்றுகையிலேயே ஹிலாரி சிறிலங்கா தொடர்பான கருத்தையும் கூறி இருந்தார்.

ஹிலாரியின் கருத்துக் குறித்து அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டின்ஸ் (02) விளக்கம் அளித்தார். “ஏனைய நாடுகளில் இடம்பெற்றதைப் போலவே, 26 வருடங்கள் நீண்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் போது பாலியல் வன்புணர்வுகள் மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஹிலாரியின் அறிக்கை அத்தகைய கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தது. குற்றம் செய்தவர்கள் யார் என எவர் மீதும் அவர் குறிப்பிட்டுக் கூறவில்லை” எனத் தூதுவர் கூறினார்.

ஹிலாரி கிளின்ரனின் முழுப் பேச்சையும் எடுத்துக்காட்டிய தூதுவர், அதில் சிறிலங்கா அரசு குறித்தோ விடுதலைப் புலிகள் குறித்தோ குறிப்பிட்டு எதுவும் கூறப்படவில்லை என்பதையும் எடுத்துக் கூறினார். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய கிலறி, பாலியல் வன்முறை குற்றங்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் விடப்படுவது ஏனையவர்களும் அவ்வாறான குற்றங்களைச் செய்வதற்குத் தூண்டுகோலாக அமைகின்றது எனக் கூறி இருந்தார்.

அமெரிக்கத் தூதரகம் முன்பாக ஹெல உறுமயவினர் ஆர்ப்பாட்டம்

அமெரிக்கா இலங்கையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுகிறது என்று குற்றஞ்சாட்டி அந்நாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய நேற்றுக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

விகாரமகாதேவி பூங்காவுக்கு முன்பாக முற்பகல் 10.30 மணிக்கு ஒன்றுகூடிய ஜாதிக ஹெல உறுமயவினர் அங்கிருந்து பேரணியாக அமெரிக்கத் தூதரகம் நோக்கிச் சென்றனர். அமெரிக்கத் தூதரகம் முன்பாக அவர்கள் சுமார் அரைமணி நேரம் வரை ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். “இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமை ஒரு போர்க்குற்றமா?”, “அமெரிக்காவில் ஆபிரகாம்லிங்கன் 6 லட்சம் பேரைக் கொன்றமை சரியா?”, போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.

அத்தோடு அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் ரொபேர்ட்ஓ பிளேக், அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்ரன் ஆகியோரைக் கண்டித்தும் அவர்கள் கோஷமெழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் வண.அத்து ரலிய ரத்தினதேரர் அங்கு உரையாற்றிய போது இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதை அமெரிக்கா விரும்பவில்லை.

இங்கு யுத்தம் முடிவடைந்துள்ளதால் அமெரிக்காவால் இங்கு ஆயுதங்களை விற்பனை செய்ய முடியாதுள்ளது. இதனால் மீண்டும் இங்கு பயங்கரவாதத்தை வளர்க்கவே அந்நாடு முயற்சிக்கிறது. இந்நாட்டுக்கு எதிரான அமெரிக்காவின் செயற்பாடுகளைத் தேசப்பற்றாளர்களான எம்மால் ஒருபோதும் ஏற்க முடியாது. அதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டோம். அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.  என்றார் அவர்.

புலிகளுக்கு வழங்கப்படும் ஆதரவினை சட்ட ரீதியானதாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்காவில் வழங்கப்படக் கூடிய ஆதரவினை சட்ட ரீதியாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அந்நாட்டு அசராங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.  தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு எந்த வகையிலும் உதவிகளை வழங்ககக் கூடாது என ஒபாமா அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்குவதனை சட்ட ரீதியானதாக மாற்றும் முயற்சியில் அந்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு குறித்த அமைப்பு நீதிமன்ற உதவியை நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள மனுவிற்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தினால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த மனு மீதான விசாரணைகள் அடுத்த ஆண்டு அளவில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மோசமான காலநிலை, காற்றில் மரம் சரிந்து ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

021009monsoon-rains.jpgதற்போதைய இலங்கையின் காலநிலை நாடு முழுவதும் மோசமடைந்துள்ள நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் அனர்த்தங்களை ஏற்படுத்தி வருகிறது. காலி, கல்வடுகொட பிரதேசத்தில் வீசிய கடும் காற்றுக் காரணமாக பஞ்சுமரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக ஐந்து பேர் ஸ்தலத்திலேயே பலியாகினர்.
பலியானவர்களுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களும், இரு சிறுவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடும் மழை காரணமாக காசல் நீர்த்தேக்கத்தின் அவசர கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக களனி கங்கையின் கரையோரத்தில் உள்ள மக்களை அவதானமாக இருக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தற்போதைய காலநிலை தொடந்தும் நிலவும் என கால நிலைய அவதான நிலையம் எச்சரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான கடற்பிரதேசங்களில் தற்போது 40 கிலோமீற்றர் தொடக்கம் 50 கிலோமீற்றர் வரையிலான காற்றின் வேகம், 60 கிலோமீற்றர் தொடக்கம் 70 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புகையிரதத்தில் வரும் பயணிகளின் நன்மை கருதி இரவு நேர பஸ் சேவை

மாத்தறை ரயில் நிலையத்துக்கு இரவு 8.25க்கு சென்றடையும் புகையிரதத்தில் வரும் பயணிகளின் நன்மை கருதி இரவு நேர பஸ் சேவையை நடத்த போக்குவரத்துச் சபை முன்வந்துள்ளது.

ரயில்வே திணைக்களமும், இலங்கை போக்குவரத்துச் சபையும் இணைந்து கூட்டு சேவையாக இதனை நடத்துகின்றன.