ஹிலாரியின் குற்றச்சாட்டுக்கு அரசு கண்டனம் : பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பில் ஹிலாரி யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை- அமெரிக்க தூதரகம்

hillary-clinton.jpgஇலங்கை இராணுவத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்தை யுத்தத்தின் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தவில்லையென பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

முதன்முதலாக இராணுவத்தினர் மீது இப்படி ஓர் அபாண்டத்தைச் சுமத்துகிறார்களெனத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ள கூற்றை நிராகரிப்பதாகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை (02) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்தக் கண்டனத்தையும் மறுப்பையும் வெளியிட்டார்.

இலங்கை இராணுவத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்தை (கற்பழிப்பை) யுத்தத்தின் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி உள்ளார்களென்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் கூறியுள்ளமை ஓர் அப்பட்டமான கட்டுக்கதையாகுமென்று கூறிய அமைச்சர் கெஹலிய, பொறுப்பற்ற விதத்தில் ஹிலாரி கூறியது கவலை தருவதாகக் குறிப்பிட்டார். புலிகள் இயக்கப் பெண்களும், வேறு பெண்களும் கற்பழித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகும். இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே இதனைக் கருதுகிறோம். முன்பு ஒருபோதும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை சுமத்தவில்லை. ஹிலாரி கிளின்ரன் இவ்வாறு கூறுகையில், புலிகள் இயக்கத்தினருக்குச் சட்ட ரீதியான எந்த ஆதரவும் வழங்கப்படமாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார்.

ஒரு விடுதலைக்கான நடவடிக்கையையே இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டனர். படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக பொறுப்பற்ற விதத்தில் ஹிலாரி தெரிவித்திருக்கின்றார் என்று தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சில வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவியுடன் சில அமைப்புகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பில் ஹிலாரி யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை: அமெரிக்க தூதரகம் விளக்கம்

இலங்கை போரில் பாலியல் வன்முறைகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் பொதுப்படையாகக் கருத்துத் தெரிவித்தாரே தவிர, அவர் எந்த ஒரு தரப்பையும் அது தொடர்பாகச் சுட்டிக்காட்டவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டின்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.  ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் புதன்கிழமை பேசிய கிலறி கிளின்ரன், போரின்போது பாலியல் வன்முறை ஓர் ஆயுதமாக சிறிலங்கா, பர்மா, பால்கன் நாடுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் வன்முறையால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின்போது உரையாற்றுகையிலேயே ஹிலாரி சிறிலங்கா தொடர்பான கருத்தையும் கூறி இருந்தார்.

ஹிலாரியின் கருத்துக் குறித்து அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டின்ஸ் (02) விளக்கம் அளித்தார். “ஏனைய நாடுகளில் இடம்பெற்றதைப் போலவே, 26 வருடங்கள் நீண்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் போது பாலியல் வன்புணர்வுகள் மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஹிலாரியின் அறிக்கை அத்தகைய கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தது. குற்றம் செய்தவர்கள் யார் என எவர் மீதும் அவர் குறிப்பிட்டுக் கூறவில்லை” எனத் தூதுவர் கூறினார்.

ஹிலாரி கிளின்ரனின் முழுப் பேச்சையும் எடுத்துக்காட்டிய தூதுவர், அதில் சிறிலங்கா அரசு குறித்தோ விடுதலைப் புலிகள் குறித்தோ குறிப்பிட்டு எதுவும் கூறப்படவில்லை என்பதையும் எடுத்துக் கூறினார். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய கிலறி, பாலியல் வன்முறை குற்றங்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் விடப்படுவது ஏனையவர்களும் அவ்வாறான குற்றங்களைச் செய்வதற்குத் தூண்டுகோலாக அமைகின்றது எனக் கூறி இருந்தார்.

அமெரிக்கத் தூதரகம் முன்பாக ஹெல உறுமயவினர் ஆர்ப்பாட்டம்

அமெரிக்கா இலங்கையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுகிறது என்று குற்றஞ்சாட்டி அந்நாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய நேற்றுக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

விகாரமகாதேவி பூங்காவுக்கு முன்பாக முற்பகல் 10.30 மணிக்கு ஒன்றுகூடிய ஜாதிக ஹெல உறுமயவினர் அங்கிருந்து பேரணியாக அமெரிக்கத் தூதரகம் நோக்கிச் சென்றனர். அமெரிக்கத் தூதரகம் முன்பாக அவர்கள் சுமார் அரைமணி நேரம் வரை ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். “இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமை ஒரு போர்க்குற்றமா?”, “அமெரிக்காவில் ஆபிரகாம்லிங்கன் 6 லட்சம் பேரைக் கொன்றமை சரியா?”, போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.

அத்தோடு அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் ரொபேர்ட்ஓ பிளேக், அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்ரன் ஆகியோரைக் கண்டித்தும் அவர்கள் கோஷமெழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் வண.அத்து ரலிய ரத்தினதேரர் அங்கு உரையாற்றிய போது இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதை அமெரிக்கா விரும்பவில்லை.

இங்கு யுத்தம் முடிவடைந்துள்ளதால் அமெரிக்காவால் இங்கு ஆயுதங்களை விற்பனை செய்ய முடியாதுள்ளது. இதனால் மீண்டும் இங்கு பயங்கரவாதத்தை வளர்க்கவே அந்நாடு முயற்சிக்கிறது. இந்நாட்டுக்கு எதிரான அமெரிக்காவின் செயற்பாடுகளைத் தேசப்பற்றாளர்களான எம்மால் ஒருபோதும் ஏற்க முடியாது. அதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டோம். அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.  என்றார் அவர்.

புலிகளுக்கு வழங்கப்படும் ஆதரவினை சட்ட ரீதியானதாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்காவில் வழங்கப்படக் கூடிய ஆதரவினை சட்ட ரீதியாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அந்நாட்டு அசராங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.  தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு எந்த வகையிலும் உதவிகளை வழங்ககக் கூடாது என ஒபாமா அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்குவதனை சட்ட ரீதியானதாக மாற்றும் முயற்சியில் அந்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு குறித்த அமைப்பு நீதிமன்ற உதவியை நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள மனுவிற்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தினால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த மனு மீதான விசாரணைகள் அடுத்த ஆண்டு அளவில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

44 Comments

  • Amer
    Amer

    ஆப்கானிஸ்தான் ஈராக்கிலை எல்லாம் கிளாறி உங்கட ராணுவம் என்ன செய்ததாம்?

    Reply
  • Anonymous
    Anonymous

    அமிர், 2 பிழைகல சரியாகுமா?

    Reply
  • BC
    BC

    எங்கே இருந்து தான் தேசம் அவருடை படத்தை எடுத்ததோ தெரியவில்லை. மிகவும் பொருத்தமாக சிறப்பாக உள்ளது.

    Reply
  • jeeva
    jeeva

    அமீர்,
    ஆப்கானிஸ்தான் என்ன வியட்நாம், ஈராக், ஈரான் என பல நாடுகளில் அமெரிக்கா என்ன செய்தது என கதைகள் உண்டு. பல சம்பவங்கள் வெளிவந்து அமெரிக்க ராணுவத்தினர் தண்டனை அனுபவித்துள்ளனர். அண்மையில் ஈராக் படுகொலைகளுக்கு பல ராணுவத்தினர் சிறைத்தண்டனை அனுபவிக்கின்றனர். மேலும் இந்த படுகொலை , கற்பழிப்புகளை வெளிக்கொணர்ந்தவர்கள் அமெரிக்க ராணுவத்தில் கடமையாற்றியவர்களே. உதாரணமாக மீலாய் படுகொலைகளை வெளிக்கொணர்ந்தவர் இன்றைய செனற்ரரும் ஜநாதிபதி வேட்பாளருமான ஜோன் கெரி.

    அதேபோல ஏன் நட்புநாடுகள் ஒன்று சேர்ந்து அமெரிகாவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்கொன்றைத் தாக்கல் செய்ய முடியாது. அமெரிக்காவுக்கு எதிராக இயங்க எந்த ஒரு நாடும் இல்லையா? இங்கே கேள்வி என்னவெனில் ஸ்ரீலங்கா ராணுவம் பாலியல் வன்கொடுமை செய்ததா இல்லையா என்பதே? அதை விட்டு நீங்கள் என்ன……. என்ற வகையில் பதிலிறுப்பது விவாதமாகாது!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இராணுவத்தில் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது அபத்தமானது. இதற்கு அமெரிக்க இராணுவமோ இந்திய இராணுவமோ விதிவிலக்கல்ல. சமீபத்திய தரவின்படி ஈராக்கில் அமெரிக்க இராணுவம் நடந்துகொண்ட முறைகளைப்பற்றி கூறலாம். இல்லை இல்லை பிரிடிஸ் இராணுவம்தான் என கூறப்போகிறீர்களா? இந்தியஇராணுவத்தை எடுத்துக்கொண்டால் 87-88 காலப் பகுதியில் நடந்த ஈழப்பிரச்சனை பற்றிய அட்டவணை வேண்டுமா? இராணுவத்திற்கு இதுவெல்லாம் சகயம்? பாலியல் குற்றம் கண்டு பிடிப்பதாக இருந்தால் என்னிடம் புலிகள் தமது இனத்திற்கெதிராக புரிந்த அட்டவணை இருக்கிறது கிளிங்டன் அதை விரும்புகிறாரா? அரசியலை அரசியல்ரீதியாக அணுகுவதே தான்குடியிருக்கும் நாட்டிற்கு அழகு.

    Reply
  • jeeva
    jeeva

    ‘…பாலியல் குற்றம் கண்டு பிடிப்பதாக இருந்தால் என்னிடம் புலிகள் தமது இனத்திற்கெதிராக புரிந்த அட்டவணை இருக்கிறது கிளிங்டன் அதை விரும்புகிறாரா?…’

    பிளீஸ் சந்திரன். புலிகளின் பாலியல் குற்ற லிஸ்ற்றை தயவு செய்து அனுப்பி விடுங்கள். தேசத்திலும் இடுங்கள். அத்துடன் இதனை தேசத்துக்கு அனுப்புங்கள். அவர்களிடம் எனது ஈ-மெயில் இருக்கிறது. அவர்கள் அதனை எனக்கு அனுப்புவார்கள். நிச்சயம் அதனை அமெரிக்க ஸ்ரேற் டிப்பாட்னன்ருக்கு அனுப்பி வைப்பேன். ஆனால் ஆதாரங்களுடன் அனுப்புங்கள். இல்லை எனில் நிராகரித்து விடுவார்கள்.

    ராணுவட்திடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க வேண்டாம்……… வாழ்க தூய்மையான அரசியல்

    Reply
  • காண்டீபன்
    காண்டீபன்

    யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என ‘நட்டத்தில் லாபம்’ கனவுகாணுவோர் இருக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக ஸ்ரீலங்காவில் (சமாதான விரும்பிகள், பெளத்த நாடு ) எனச்சொல்லி இருப்பது தனிப்பட்ட குற்றச்சாட்டிலும் விடக் கேவலம் என உணர மறுக்கிறார்கள்.

    Reply
  • mano
    mano

    இராணுவம் என்ன இராணுவம்> ஆண்கள் பாலியல் வல்லுறவு புரிந்திருப்பார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஆனால் அது ஒரு யுத்தஆயுதமாகப் பாவிக்கப்பட்டிருக்கவில்லை. ~இராணுவம் பெண்கள் மீது பாலியல்வல்லுறவு புரியும்”> இராணுவம் 30 ஆயிரம் பெண்களைக் கற்பழித்தது” என்று சொல்லி யுத்த ஆயுதமாகப் பாவித்தவர்கள் புலிகள். இந்தப் பரப்புரை மூலம்> தமது படைக்கு சின்னஞ்சிறு பெண் பிள்ளைகளையும் சேர்த்துக் கொண்டார்கள். பணயமாகப் பிடித்துச் சென்று இப்போது தடுப்புக்காவல் சிறைக்குள் தள்ளிவிட்டிருக்கிறார்கள்.

    உண்மையில் யுத்தகளம் பாலியல் குற்ற நிகழ்வுகளுக்கு சாதகமாக இருக்கவில்லை. அதேநேரம் அதிகாரிகள் தரத்தில் பெரும்பாலும் யுத்தம் பற்றிய தீவிர உணர்வுள்ளவர்களாயிருந்திருக்கிறார்கள். இது ஆற அமர நடந்த யுத்தமில்லை> குறுகிய காலத்தில் நடந்த தீவிரமான யுத்தம். கடைசி சில மாதங்களே இராணுவம் மக்களுடன் நெருங்கிச் செயற்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுசேர்ந்தே வந்திருக்கிறார்கள். தனித்தனிக் குடும்பங்களாக அவர்கள் இராணுவத்திடம் செல்லவில்லை. அதேநேரம் அக் காலத்தில் இராணுவம் மக்களிடம் மிகவும் மனிதநேயத்துடன் நடந்துகொண்டிருக்கிறது என்பது உண்மை. புலிகளாலும் சுட்டுக்கொல்லப்படும் அந்த மக்களைப் பார்த்து இளம் இராணுவ வீரர்கள் பரிதாபப்பட்டார்கள் என்றே சொல்லப்படுகிறது. இதனால் தான் தமிழினி போன்ற சிரேஷ்ட பெண்புலி கூட முகாமிற்கு வந்து மறைந்திருக்க முடிந்திருக்கிறது.

    இருந்தபோதிலும் இன்றைய நிலையில்> என்ன நடைபெறுகிறது என்று யாரால் சொல்லமுடியும்?

    Reply
  • பல்லி
    பல்லி

    மனோ ரம்புகல போல மிக நிதனமாக ராணுவ பேச்சாளராய் விடயத்தை ஒப்புவித்துள்ளீர்கள்;
    புலி பாலியல் வன்முறை செய்யவில்லை என்றோ அல்லது அதை சாட்டி யுவதிகளை தமது அமைப்புக்காக ஆள் சேர்க்கவில்லை என்றோ இங்கு யாரும் சொல்லவும் இல்லை, சொல்லவும் முடியாது; ஆனால் ராணுவம் இந்த ஒருமாதத்தில் பாலியல் செய்தால் மட்டும்தான் பாலியல் குற்றமா? மற்றவையெல்லாம் என்ன தேன்நிலவா?

    சரி ராணுவம் போர் நடக்கும்போது தளத்தில் பாலியலில் ஈடுபட நேரம் ஏது உங்கள் ஆதங்கம் வரவேற்க்கபட வேண்டியதே, ஆனால் போர் தொடங்கிய சில காலத்திலேயே மக்கள் ராணுவத்தை நாடி வந்துவிட்டனர் (பாசத்திலோ நம்பிக்கையிலோ அல்ல வேறு வழிஇன்றி) வந்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்த ராணுவத்தினர் போர் சூழலில் இல்லை என்பது கூடவா மனோ அறியவில்லை,

    //கடைசி சில மாதங்களே இராணுவம் மக்களுடன் நெருங்கிச் செயற்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுசேர்ந்தே வந்திருக்கிறார்கள். தனித்தனிக் குடும்பங்களாக அவர்கள் இராணுவத்திடம் செல்லவில்லை//
    மனோ கூட்டமாக வரும்போது கெடுக்க முடியாதே என்னும் உங்கள் கண்டுபிடிப்பும் சிலரை குளிர வைக்கலாம்; ஆனால் கூட்டமாக வந்தவர்களை வடிகட்டிதான் பிரித்து வாலிபர்கள் தனி; யுவதிகள் தனி, வயோதிபர்கள் தனி; இதுவரை உலகமே சிறைபற்றி பேசுவது இந்த வயோதிப முகாம்கள் பற்றிதான், மற்றய வாலிப ,யுவதிகள் முகாம்கள் பற்றிய செய்திகள் மகிந்தாவுக்கு கூட தெரிய வாய்ப்பு இருக்காது; இது தவையற்ற பின்னோடம் இருப்பினும் ஒரு செயல் பலர் அறிந்ததுதான் வவுனியாவில் இரு (வடிகட்டும்போது) பெண்களை மேல்உடுப்பை களட்டும்படி கடமையில்(காமத்தில்) இருந்த இராணுவ அதிகாரி சொல்ல அந்த பெண்கள் விளிக்க ராணுவம் சொன்னாராம் உங்களை பார்த்தால் ஆணா அல்லது பெண்ணா என தெரியவில்லை அதனால் தான் களட்டுங்கள் என, இப்படி பல நிகழ்வுகள் மனிதனேயமிக்கவர்களால் சம்பந்தபட்டவர்களுக்கு போய் சேர்ந்திருக்க வேண்டும், ஏன் பல்லிகூட சில விடயங்கள் எழுந்தமானம் இல்லாமல் நிதானமாக தெரிந்த பின் சில மனிதனேய அமைப்புகளிடம் சில நண்பர்கள் மூலம் தெரியபடுத்தியுள்ளேன்;

    //இராணுவத்தில் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது அபத்தமானது. இதற்கு அமெரிக்க இராணுவமோ இந்திய இராணுவமோ விதிவிலக்கல்ல. //
    உன்மைதான் அதுக்காக நடந்தநடக்கும் காட்டுமிராண்டி தனத்தை நாம் ஏற்க்க வேண்டுமா?

    :://ஆப்கானிஸ்தான் ஈராக்கிலை எல்லாம் கிளாறி உங்கட ராணுவம் என்ன செய்ததாம்?//
    அமீர் அமெரிக்க ராணுவம் வியட்னாமிடன் தோற்றதுக்கு முக்கிய காரணமே ராணுவத்தின் பாலியல் பலவீனம்தான் என்பது எப்போதோ படித்தேன், அதுவல்ல பிரச்சனை அவர் தற்ப்போது வகிக்கும் பதவி அவரை தவறுகளை சுட்டிகாட்டனேரிடலாம்; அதையும் விட இராக்கில் நடந்த பல சம்பவங்களுக்கு தற்ப்போது அமெரிக்காவில் சம்பந்த பட்டவர்கள் மீது வழக்கு நடப்பதாக சொல்லுகிறார்கள்; இவை போக இம்மினத்தின் மீது இரக்கபட்டோ அல்லது அல்லது அந்த சிறை வாழ் மக்கள் நிலைகண்டு கோபப்பட்டோ அந்த விடயங்கள்மீது கவலை கொண்டு பேச புறப்பட்டவர்களில் கிளாரியும் ஒருவர்(இறுதி போர் தொடங்கு முன்பே அவர் இலங்கை விடயத்தில் கவனம் செலுத்தினார்) ஆகவே அவரது நடவெடிக்கைகளுக்கு தடிகொடுப்பது தமிழர் மீது உலக்கையால் அடிப்பதுக்கு சமனல்லவா?

    நாம் இந்த பின்னோட்டம் எழுதுவதுக்கு சிந்திப்பதை விட பலர் சிந்தித்து விவாதித்த பின்னரே கிளாரி போன்றோர் ஒரு அறிக்கை விடமுடியும்; அவர்கள் சொல்வதில் 20வீதம் பிழை இருப்பினும் 80வீதம் உன்மை இருக்கும் என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறியள்;

    Reply
  • mano
    mano

    பல்லி! கடைசியில் நான் சொல்லியிருப்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லைப் போலிருக்கிறது.
    ஆனால்> இதை கிலாரி சொல்வதற்கும் நாங்கள் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கிலாரி ஆராய்ந்துதான் சொல்லியிருக்கிறா என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர்கள் எதை ஆய்வு செய்து இந்த முடிவெடுத்து சொல்லியிருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியாததா? நாங்கள் எமது மக்களைப் பற்றித்தான் சிந்திக்க முடியும். அமெரிக்க இராணுவம் செய்தது பற்றியும் இந்திய இராணுவம் செய்தது பற்றியும் ஒப்பிட்டு மனஅமைதி கொள்வது பாதிக்கப்படாதவர்களால்தான் முடியும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    மனோ தங்களது அந்த வரியை சுட்டி காட்டவும்;

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    நீதிநெறியுடன் கூடிய துணிகரமிக்க ஊடகவியலாளருக்கான பீட்டர்மெக்லர் விருது முதல் முறையாக இலங்கை ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்திற்கு நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது.

    Reply
  • Thaksan
    Thaksan

    புலிகள் அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள்> பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்களென ஒப்புக்கொண்ட பூந்தோட்டம்> பூவரசன்குளம் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19வயதுக்குட்பட்ட பெண்களில் கடந்த ஆகஸ்ட் 31 வரையான காலத்தில் 72 பேர் குழந்தைகளை பிரசவித்தள்ளனரென வவுனியா வைத்தியசாலை புள்ளிவிபர திணைக்கள பிரிவு அறிவித்துள்ளது. இன்னமும் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100க்கும் அதிகமான பெண்கள் பிரசவத்தை எதிர்நோக்கியுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இவர்களின் கருத்தரிப்புக்கு சிறீலங்கா இராணுவம் காரணமாக இருந்திருக்க முடியாதென்பது வெளிப்படை. இந்த கர்ப்பிணிகளும் தாய்மார்களும் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்தானென (அது எவராயிருந்தாலும்) கருதப்பட முடியாது. வாழ்வா சாவாவென பரிதவித்த வாழ்வும் இனியென்ன என்ற விரக்தியும்கூட சூழ்நிலைகளாக அமைந்திருக்கலாம். ஆனாலும் இராணுவமும் அகதிமுகாம்களில் பலத்காரத்தை பிரயோகித்தள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது.

    Reply
  • பல்லி
    பல்லி

    தக்ச்சன் எனக்கு இது தெரியாது ஆனால் இது யதார்த்த உன்மைதான், ஆனால் இதை பல்லி சொல்லும்போது பல்லியும் புலி பினாமியா? என்னும் கேள்வி எழதான் செய்கிறது; நண்பரே பல்லி புலிபினாமி ஆவதற்க்கு எம்மின பெண்களின் கருவறையா கிடைக்க வேண்டும்.? ஆகவே சிந்தியுங்கள் உங்கள் உறவுகள் அங்கு இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அங்கு இருக்கும் உறவுகளை உங்கள் உறவாய் நேசியுங்கள்;

    Reply
  • sumi
    sumi

    ஜயவர்தனா தொடக்கம் சந்திரிகா வரையும் விட்ட புலுடாக்கள் ராஜபக்சேயிடம் பலிக்கவில்லையே என்ற ஆத்திரம்தான் கிலறியை இப்படியெல்லம் கதைக்வும் புழுகவும் வைக்கிறது.

    Reply
  • guru
    guru

    எங்கள் உறவுகள் 20 000 பேரை நாம் இழந்தபிறகு இதைக் கதைக்கிறீங்கள். போரை நிறுத்த நீங்கள் உதவவில்லை ஆனால் ஆயுதம் கொடுத்து உதவினது ஏனாம்?? நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    இவர்களின் கருத்தரிப்புக்கு சிறீலங்கா இராணுவம் காரணமாக இருந்திருக்க முடியாதென்பது வெளிப்படை. இந்த கர்ப்பிணிகளும் தாய்மார்களும் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்தானென (அது எவராயிருந்தாலும்) கருதப்பட முடியாது. வாழ்வா சாவாவென பரிதவித்த வாழ்வும் இனியென்ன என்ற விரக்தியும்கூட சூழ்நிலைகளாக அமைந்திருக்கலாம். ஆனாலும் இராணுவமும் அகதிமுகாம்களில் பலத்காரத்தை பிரயோகித்தள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது./

    தக்சன் எனது உறவினர்களில் நிறையப்பேர் முகாமில்தான் இவர்கள் ஒட்டிசுட்டான் ராணுவத்தினர் முற்றுகைக்குள்ளாகும் போது சிலர் மாட்டினார்கள் சிலர் இறந்தார்கள் சிலருக்கு என்னாச்சோ? உண்மைகள் சில அவர்களுடன் உரையாடும் சந்தர்பங்களில் அவர்களுக்கு தெரிந்தவற்றை கூறுவார்கள் எதற்கும் யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை இதை நம்புவதும் விடுவதும் உங்கள் உங்கள் சிந்தையைப் பொறுத்தது

    Reply
  • raman
    raman

    //உண்மைகள் சில அவர்களுடன் உரையாடும் சந்தர்பங்களில் அவர்களுக்கு தெரிந்தவற்றை கூறுவார்கள் எதற்கும் யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை//
    இதைத்தானே ராஜபக்சவும் சொல்கிறார்.
    படையினருக்கு எதிராக குற்றம் சுமத்தும் நாடுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்குமா? – ஜனாதிபதி கேள்வி http://thesamnet.co.uk/?p=16914
    October 5th, 2009
    எல்லாரும் ஒரே பாட்டுத்தான்

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    இலங்கையில் இடம்பெற்ற மோதல்களின் போது பாலியல் வல்லுறவும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்த கருத்து தவறுதலாக இடம்பெற்ற ஒன்றென அவர் ஏற்றுக்கொண்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே ஹிலாரியின் உரையில் இலங்கையின் பெயர் உள்ளடக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ஹிலாரி கிளிண்டனிடம் குறித்த அறிக்கையை எழுதிக்கொடுத்த நபர், இலங்கை தொடர்பாகவும் கூறியுள்ளதுடன் இது வேண்டுமென்றே நாட்டை அசௌகரியத்திற்குள்ளாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    ஹிலாரி தனது குறிப்பில் பொஸ்னியா, பர்மா, இலங்கை உட்பட மற்றும் பல நாடுகளில், பெண்கள் மீதான பாலியல் வல்லுறவும் யுத்த ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதெனத் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

    எனினும் தூதுவரின் தற்போதைய கூற்றுப்படி, 2006 -2009 இடைப்பட்ட கால கட்டத்தில் யுத்த ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்பட்டதாகத் தங்களுக்கு எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே இதன் பின்னணியில் எவரேனும் இருக்கக்கூடும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    இந்தச் சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் சில சக்திகள் இருக்கக் கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு அறிக்கையைக் குறித்துக் கொடுத்த நபர் தொடர்பாக ஹிலாரி கிளிண்டனும் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எது, எவ்வாறெனினும், தற்போது இடம்பெயர் முகாம்களிலுள்ள 250,000 மக்களை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைக்கே இலங்கை அரசு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அருட்செல்வன்,
    நாளை நீங்கள் இங்கு இணைத்த அறிக்கையை எழுதிக்கொடுத்த நபர், இதற்கும் சதி செய்து விட்டாரென்று ஹிலாரி அறிக்கை விட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. ஒரு அறிக்கையை எவர் தயாரித்தாலும் அதை வாசிக்காதா கையெழுத்துப் போடுவார்??

    Reply
  • BC
    BC

    //பார்த்திபன்-ஒரு அறிக்கையை எவர் தயாரித்தாலும் அதை வாசிக்காது கையெழுத்துப் போடுவார்??//

    இது சுமி சொன்ன மாதிரி தங்கள் புலுடாக்கள் சரிவரவில்லையே என்ற கோபமும் மன புழுக்கமும் தான் அம்மையாரின் முதலாவது அறிக்கைக்கு காரணம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    பிரச்சனை தமிழருக்கா? அல்லது மகிந்தாவுக்கா? அல்லது கிளாரி கிலிண்டனுக்கா?
    பலரை குளப்பிய பல்லி இன்று குளம்பி போய் உள்ளேன்;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    இதில் குளம்புவதற்கு ஒன்றுமில்லை. ஹிலாரி அறிக்கை என்பது முன்பு நாம் படித்த “ஆடு நனைகின்றதென்று ஓநாய் அழுத கதை” தான்.

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    அமெரிக்க ராஜாங்க செயலாளர் திணைக்களம் எமது படை வீரர்களுக்கு எதிராக தெரிவித்த கூற்றுக்களில் உண்மையில்லையென்பதை அத்திணைக்களமே ஏற்றுக்கொண்டுள்ளது. தவறை சரி செய்து உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளமைக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

    அமெரிக்க ராஜாங்க செயலாளர் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள குறிப்பில் தமது தவறை நிவர்த்தி செய்துள்ளதுடன் எமது படை வீரர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமைக்கான பின்னணி அல்லது நிலைமைகள் தொடர்பாகத் தம்மிடம் எவ்வித தகவல்களும் இல்லையென்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அக்குற்றச்சாட்டை வாபஸ் பெறுவதாகவும் மேற்படி திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தம்மால் இடம்பெற்றுள்ள தவறை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //“ஆடு நனைகின்றதென்று//
    ஆடு(மக்கள்) நனைகிறது என்பதை பார்த்திபன் ஏற்று கொள்கிறீர்கள்; நன்றி:
    //ஓநாய் அழுத கதை”//
    அந்த கதையில் வரும் ஓனாயால் ஆட்டுக்கு ஆபத்து, ஆனால் இந்த ஓனாயால் (பார்த்திபன் பாணியில்) ஆட்டுக்கு பாதிப்பா? சாதகமா??

    Reply
  • jeeva
    jeeva

    மஹிந்தா சொல்லும் இந்த அறிக்கையோ அன்றி கோத்தபாயா சொல்லும் அறிக்கையோ எங்கே வந்தது என யாமறியோம் பராபரமே. ஆனால் ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்கத் தூதர் சொன்னதெல்லாம் அமெரிக்காவிடம் 2006-2009 இற்கிடையில் எந்த ஆதாரமும் ’கைவசம்’ இல்லை என்பதே.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    கைவசம் ஆதாரம் இல்லாமல் போன காரணம் 2006-2009 இடையில் ஒரு ஊடகவியலாளரும் அங்கே அனுமதிக்கப்படவில்லை.

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    மனிக்ஃபார்ம் முகாமுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபொஸ்டர், அங்கு கடுமையான மழை பெய்தால், பெரும் அழிவும், தொற்றுநோய் பரவலும் ஏற்படும் என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.

    முகாமில் உள்ளவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் அங்கிருந்து வெளியேறும் பட்சத்தில், அவர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய குடும்பங்களுடன் சென்று தங்குவதற்கான வசதியுடையவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.

    அந்த முகாம்களில் தமது நிலலைமை குறித்து பேசுவதற்கு ஆர்வத்துடன் இருந்த மக்களுடன் பிபிசிக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு நிலைமைகள் மிகவும் மோசம் என்றும், நல்ல குடிநீர் கிடையாது என்றும், போதுமான வடிகால் வசதி கிடையாது என்றும், அதிக வெப்பம் காரணமாக மக்கள் பலர் நோயில் வீழ்வதாகவும், அங்கிருந்த பெண்கள் மாறி மாறி கூறினார்கள்.

    முடிந்தவரை விரைவாக எங்களை எங்கள் வீடுகளுக்கு அனுப்புங்கள் என்று ஒருவர் கூறினார். மனிக்பார்ம் முகாமில் இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் பேர் இன்னமும் இருப்பதாக கூறுகின்ற அரசாங்கம், இதுவரை இருபதினாயிரம் பேர் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக, அல்லது விடுவிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறது
    நன்றி பிபிசி தமிழ்

    Reply
  • mano
    mano

    பல்லி! அந்த வரி> இருந்தபோதிலும் இன்றைய நிலையில்> என்ன நடைபெறுகிறது என்று யாரால் சொல்லமுடியும்?”

    முகாம்களில் நடைபெறுவது எல்லாம் வெளிச்சத்துக்கு வருவதில்லை. உ+ம்: மிருசுவில் முகாமிலிருந்து இராணுவத்தால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட இளம்பெண் ஒருவர்> பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். – இதன் உண்மைத்தன்மை பற்றி என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.

    72 பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்கள் – புலிகளால் தமது பிள்ளைகள் பிடித்துச் செல்லாமல் இருப்பதற்காக இள வயதிலேயே பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள். ஆயினும் கர்ப்பிணிகளையும் புலிகள் களத்திற்கு அனுப்பினார்களாம். 16 வயது எனது உறவுப்பெண் ஒருவர் குழந்தை பெற்றிருக்கிறா. அவவின் கணவன் போரில் இறந்துவிட்டார்.

    Reply
  • jalpani
    jalpani

    அமேரிக்காவே தான் சொன்னதை திருத்தி மாற்றிக் கொண்டு விட்டது. நாங்கள் எழுதி என்ன கிழிக்கப் போகிறோம்?

    இருந்தாலும் ஒரு சந்தேகம்- இறுதிக்கட்ட போரின் போது பாலியல் பலாத்காரம் நிகழ்ந்நது மட்டும் தான் போர் ஆயுதமாக பார்க்கப்படுகிறதா? முப்பது வருடமாக அது நடைபெற்று வந்திருக்க்கிறதே- கோணேஸ்வரி கிருசாந்தி இன்னும் பலர் பலியாகி இருக்கிறார்களே. அதற்கெல்லாம் நியாயம் இல்லையா?

    Reply
  • சட்டம் பிள்ளை
    சட்டம் பிள்ளை

    அமெரிக்க இராஜாங்க செயலளர் ஹிலாரி கிளின்டன் மோனிகா லெவன்ஸ்கியின் கதையை மறந்துள்ளார். ஏனைய நாடுகளில் காணப்படும் பெண்கள் துஷ்பிரயோகம் குறித்து குற்றம் சாட்டுவதை விடுத்து அவர் தனது பின்புலம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க வானொலியொன்றுக்கு இன்று காலை வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் ஹிலாரி கிளிண்டன் இலங்கை உட்பட யுத்தம் இடம்பெறும் பல நாடுகளில் பெண்கள் பாலியல் வல்லுறவிற்குட்படுவதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விளக்கமளித்து அறிக்கையொன்று வெளியிட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ஹிலாரி கிளிண்டனின் கணவர் பில் கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சமயம் அவரது ஊழியரொருவரான மோனிகா லெவின்ஸ்கியை பாலியல் வல்லுறவிற்குட் படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    சட்டம் பிள்ளை,
    பிரதமரின் பதில் மிக அருமையான பதில்.

    ‘…மோனிகா லெவின்ஸ்கியை பாலியல் வல்லுறவிற்குட் படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.’

    முதலில் மொனிகா/கிளின்ரன் உறவு பாலியல் ‘வல்லுறவு’ அல்ல, மாறாக மனமொத்த உறவு(consensual) என்பதனை அறியாமல் உளறியுள்ளார் பிரதமர். அமெரிக்க காங்கிரஸ் அவரின் உறவு ‘முறைகேடானது’ (ஜனாதிபதியின் பெயருக்கு அவமானம்) எனவே கூறியிருந்தது. அவ்வாறிருந்த போதும் அமெரிக்க காங்கிரசும் அமெரிக்க நீதிமன்றமும் அமெரிக்க ஊடகங்களும் கிளின்ரனை போட்டு ஆட்டிய ஆட்டம் இன்றும் தொடர்வது ஸ்ரீலங்காப் பிரதமருக்கு தெரியாமல் இருப்பது ஒன்றும் வேடிக்கையல்ல. அண்மையில் நியூயோர்க் நகரில் நடந்த சந்திப்பில் இவர் பேசிய பேச்சுகள் இணையத்தில் பார்த்தோமே.

    மேலும் ஸ்ரீலங்கா பிரதமர் இன்னொரு ஜோக்கும் சொல்லி இருக்கிறார். அதாவது அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்காவில் ஒரு ஊருக்குச் சென்றால் அவ்வூரே மூடப்படும் நிலை இருக்கிறது என. (The Premier noted however that while Blake was taking that stand, in the US at times even a whole town is closed when the US Presidential motorcade was traveling along that route)சிரிப்புத்தான் வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி வரும்போது ஏறத்தாழ 300 அடி சாலையே மூடப்படும். வோஷிங்ரனில் என்றால் அதுவும் இல்லை! அவர் பாட்டுக்கு காரில் பாதுகாப்பு படையுடன் (3 கார்கள்) போய்க்கொண்டிருப்பார்.

    ஒரு மாதம் முன்னர் ஜப்பானில் ’ஆட்கடத்தல் கேசில்’ கைவிரல் அடையாளம் எடுபட்டும் திருந்தவில்லைப்போல் இருக்கிறது!

    Reply
  • சட்டம் பிள்ளை
    சட்டம் பிள்ளை

    வியட்நாமுக்கு எதிரான யுத்த காலத்தில் அமெரிக்க இராணுவத்தினர் அதிக எண்ணிக்கையிலான பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், மேல் மாகாணசபை அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

    யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:-

    ஹிலாரி கிளின்ரனின் கணவர் ஆட்சியிலிருந்த காலத்தில் வெள்ளை மாளிகையிலும் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ஹிலாரியின் கருத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் நாடு முழுவதிலும் சுமார் பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட்டு, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.

    ஹிலாரியின் கருத்தை தனிப்பட்ட கருத்தாக கருதப்பட முடியாது எனவும் அதனை அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாடாகவே நோக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Reply
  • Dissanayake
    Dissanayake

    According to Buddish principles, we do not pick on others, specially mothers. Hilary, right or wrong, we must understand she does not know whole range of facts when speaking about Sri Lanka. Everyone speaks based on his own knowledge, including Mr. Ratnasiri in his pointing out of Monika issue. Mr. Ratnasiri may not know exact facts in that. Noone knows. Its an personal issue and well as HR is a Sri Lanka issue and therefore, Sri Lankan issues must be handled through rightful explanations to the world without sword to bad sword crossings which will only create unfavorable atmosphere for our country. Hope Mr. Ratnasiri can understand this.

    Reply
  • Dicky Athugala
    Dicky Athugala

    i don’t know how this man became the premier of this country. our pm should know difference between rape and making love. Well said PM. This is the way we should attack. I am proud of leaders like you Sir. fortunate to have a people like you PM. Thanks for making this type of clear Statements What a diplomatic statement for a PM! Sir, be careful when you throw stones being in glass houses. Typical Asian style to dig dirt on personal matters! Oh Lanka! How could you ever bring light into these petty minds! Well done! A local “Dustbin” for “Foreign Garbage”.

    Reply
  • Luthica
    Luthica

    But sir, it is not a joke, let us be frank. Do you have a secreat agenda of becoming the president of our country by putting our president in trouble?
    Well done PM, We are very proud of you. We need more politician like you so SRILANKA no longer exist near future. Gone is the ERA that SRILANKAN POLITICIAN AND LEADERS OF CLASS…Here comes the PM of a country showing his true colors of his origins…What a bunch of garbage is ruling this country…I am in pain and Crying for our MOTHERLAND

    Reply
  • Kalu
    Kalu

    This statement is very low class. We should have educated and high qualified person as our PM.

    Reply
  • BC
    BC

    Appu hammy, Abeya singee, Neville Perera, Rogan Peter, Desilva.P, Manemperuma, Konappu Bandara, Kumara Ekanayake நீங்கள் எல்லாம் எங்கே போய் விட்டீர்கள்? உங்கள் ஹிலாரி கிளின்டன் அம்மையாருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டிய நேரம் இது.

    Reply
  • mano
    mano

    இது இலங்கையில் வெளியாகும் ‘தினமுரசு’ பத்திரிகையில் வெளிவந்த செய்தி விமர்சனம்>

    கிருஷாந்திகள்> கோணேஸ்வரிகள்> சாரதாம்பாள்கள் போன்ற சில சம்பவங்கள் இடம்பெற்றாலும்> பாலியல் வன்புணர்ச்சியை யுத்த ஆயுதமாக இலங்கைப் படை பயன்படுத்தவில்லை -அரசியல்> இராணுவ ஆய்வாளர்கள் அபிப்பிராயம்

    இலங்கை சிவில் யுத்தத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சி ஒரு யுத்தக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் ஐ.நா.பாதுகாப்புக் சபைக் கூட்ட அமர்வில் கூறிய கருத்துக் கடுமையானதும் அதீத சித்தாpப்பு என்பதும் உண்மையே. ஆனால் கிருஷாந்திகள்> சாரதாம்பாள்கள்> கோணேஸ்வரிகள் போன்று அவ்வப்போது சில பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் இடம்பெறவே செய்திருக்கின்றன. ஆனால் திட்டமிட்ட முறையில் தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் வன்புணர்ச்சிகளில் அரச படையினர் ஈடுபடவில்லை என்று வடக்கே யுத்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தொpவிக்கின்றனர்.

    அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தத்தில் நடந்ததைப் போன்ற சில சம்பவங்கள்> ஜே.வி.பி. அரசு இயந்திரத்துக்கு எதிராகப் போராடிய காலங்களிலும் இடம்பெறவே செய்திருக்கின்றன என்றும் அந்த மக்கள் தொpவித்தனர். கடந்த முப்பதாம் திகதி ஐ.நா.பாதுகாப்புச் சபைக் கூட்டத் தொடர் நடைபெற்றது. அந்த மாதக் கூட்டத்தொடர் அமெரிக்காவின் தலைமையில் நடைபெற்றது. திருமதி ஹிலாரி கிளின்ரன் கடைசித் தொடருக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையில் பால்கன் நாடுகள்> பர்மா> இலங்கை போன்ற இடங்களில் பாலியல் வன்புணர்ச்சி ஒரு யுத்தக் கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

    இலங்கையில் இடம்பெற்ற சில பாலியல் வன்புணர்ச்சிச் சம்பவங்களிலும் பார்க்க மோசமான பல சம்பவங்களில் ஈராக்கின் அபுகிராப் சிறையிலும்> குவாண்டனாமோ தடுப்பு முகாம்களிலும் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டிருக்கின்றன என்று பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தொpவிக்கிறார். ஹிலாரி கிளின்ரனின் குற்றச்சாட்டு வெளிவந்து மூன்று நாட்களின் பின்னர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சு அதிகாரியான மெலன்னே வேர்வீர் என்ற பெண்மணி> முன்னைய குற்றச்சாட்டை வலுவிழக்கச் செய்யும் பாணியில் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்காவுக்குக் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். 2006இற்கும் 2009இற்கும் இடைப்பட்ட இலங்கை மோதல் காலப் பகுதியில் உலகின் ஏனைய மோதல் பகுதிகளில் இடம்பெற்றதைப் போன்று பாலியல் வன்புணர்ச்சியம் துஷ்பிரயோகமும் இடம்பெற்றதாக அமெரிக்காவுக்கு அறிக்கைகள் கிடைக்கவில்லை எனத் தொpவித்துள்ளார்.

    ஹிலாரியின் கூற்றுக்கு இலங்கை தனது கடுமையான கண்டனத்தைத் தொpவித்துள்ள போதிலும் அமெரிக்காவுடனான உறவைப் பேணுவதில் கவனமாக இருந்துள்ளதென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அமெரிக்க வெளிவிவகார அமைச்சிலுள்ள ஒரு சிலர் புலிகளின் சார்பு நிலைப்பாட்டை எடுத்தாலும்> புலிகளின் பலமான சர்வதேச ஆயுத வலைப்பின்னலைத் தகர்ப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்துள்ளது என்கிறார் பேராசிரியர் ரோஹன் குணரட்ன. இவர் சர்வதேசப் பயங்கரவாத விவகாரங்கள் தொடர்பான நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் சீ.ஐ.ஏ.> எப்.பி.ஐ. மற்றும் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவை புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவை முறியடிப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளன என்றும் அவர் தொpவித்துள்ளார்.

    புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவுத் தரகராகத் திகழ்ந்தவரென்ற குற்றச்சாட்டு உட்படப் பல்வேறு பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டு வந்த சிங்கப்பூர் வர்த்தகரான பால்ராஜ் நாயுடு பத்து நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சம்பவத்தையம் ஆதாரமாகக் காட்டுகிறார் பேராசிரியர் குணரட்ன. அமெரிக்க நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் குணரட்ன கூறுகிறார். அவர் மேலும் தொpவித்ததாவது:

    புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவுக்கு எதிரான நடவடிக்கைகளை 2006ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தீவிரப்படுத்தியிருந்தது. அமெரிக்கா-இலங்கை இரு நாடுகளுக்கிடையிலான புலனாய்வுத் தகவல் பரிமாற்றத்தின் விளைவாகவே புலிகளின் ஆறு கப்பல்களைத் தாக்கியழிக்க முடிந்திருக்கிறது. அமெரிக்க மத்திய புலனாய்வுப் பணியகம் அளித்த தகவலின் பேரிலேயே புலிகளின் ஆயுதக் கொள்வனவுப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தரான பார்த்திபன் தவராசா 2006ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டார். புலிகளின் நிதி சேகாpப்பு> ஆயுதக் கொள்வனவு ஆகியவற்றைத் தகர்ப்பதற்கு அமெரிக்கா பங்களித்திருக்கிறது என்கிறார் பேராசிரியர் குணரட்ன.”

    Reply
  • sintha
    sintha

    புலிகளின் பாலியல் குற்ற லிஸ்ற்றை தயவு செய்து அனுப்பி விடுங்கள். தேசத்திலும் இடுங்கள். அத்துடன் இதனை தேசத்துக்கு அனுப்புங்கள். அவர்களிடம் எனது ஈ-மெயில் இருக்கிறது. அவர்கள் அதனை எனக்கு அனுப்புவார்கள். . ஆனால் ஆதாரங்களுடன் அனுப்புங்கள்.புலிகள் அவ்வாறான பாலியல் குற்றச்சாட்டுகள் எதனையும் செய்யவில்லை என்பதை மனதில் கொள்ளவும் சந்திரன். தின முரசினை கொண்டே குப்பையில் போடுங்கள் மனோ

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இலங்கை இராணுவத்தில் இருந்தவர்களெல்லாம் ஏதோ உத்தமர்கள் இல்லை. ஆனால் இதில் சமயம் பார்த்து சிலர், புலிகள் ஏதோ உத்தமர்கள் என்பது போல் சரடு விடுவது தான் வேடிக்கை. விடுதலைப்புலிகள் பல இராணுவ அதிகாரிகளை மடக்குவதற்கு எம்மினப் பெண்களையே பாவித்ததை எந்தப் பட்டியியலில் இணைப்பது. அதுபோல் கொழும்பில் விடுதலைப்புலிகளின் புலனாய்வாளர்களாக இருந்தவர்களுக்கு, மனைவி போல் இணைந்து வாழ பல தமிழ் அழகிகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றார்கள். பின்பு இந்த அழகிகளையே இராணுவ அதிகாரிகளுடன் இரகசியமாக உறவு வைக்கப் பயன்படுத்தியுள்ளார்கள். யாழ் மாவட்டத்தில் அச்சுவேலி என்ற ஊரில் கணவன் வெளிநாடொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்க தாயையும் அவரது 4 மகள்களையும் விடுதலைப்புலிகள் தமது இச்சைகளுக்கு தொடர்ந்து பாவித்து வந்தார்கள். குறித்த இந்தக் குடும்பத்தினர் அச்சுவேலியைச் சேர்ந்தவர்களல்ல. வேறொரு ஊரிலிருந்து வெளியேறி தற்காலிகமாக அச்சுவேலியில் வாழ்ந்தவர்கள். ஊரவர்கள் இது தெரிந்தும் புலிகளுக்கு பயத்தினால் கண்டிக்கத் திராணியற்றிருந்தனர். 1995 இல் யாழை விட்டு வன்னிக்கு ஓடியபோது மக்களைக் கூட காப்பாற்ற நினைக்காத புலிகள் இந்தக் குடும்பத்தை தம்முடன் அழைத்துச் செல்வதில் தீவிரம் காட்டி அழைத்துச் சென்றனர்.

    கருணா புலிகளிலிருந்து வெளியேறிய பின், கருணா புலிகளோடு இருந்த போது எத்தனை பெண்களை சீரழித்தாரென புலிகளே பட்டியல் வாசித்தார்கள். ஆக கருணா புலிகளிலிருந்து வெளியேறியிருக்கா விட்டால் இந்தப் பட்டியல் வெளி வந்திருக்காது. இதுபோல் புலிகளோடு தொடர்ந்து இருந்ததால் எத்தனை கருணாக்கள் காப்பாற்றப் பட்டிருப்பார்கள். எனியும் புலிகளை உத்தமர்களென்று எவரும் காதில் பூ வைக்கும் வேலைகளை செய்ய வேண்டாம். விரும்பினால் உங்கள் காதுகளில் நீங்களே பூ வைத்து திருப்திப்பட்டுக் கொண்டிருங்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சிந்தா உங்கள் கனவுகள் ஈழத்தில் வாழும் ஈழத்தமிழர்களை பற்றிதல்ல. உங்களைப் பற்றியும் உங்கள் எதிர்காலத்தை எப்படி வளம்கொழிக்கப் பண்ணமுடியும் என்பதை பற்றியதுமே. உங்கள் பிழைப்புக்கு மண்விழுந்து விட்டது என்பதைப் பற்றியே!.
    நீங்கள் தவறு செய்யாதவர்களா? 83ல் பூட்டிய சிறையில் பழிவாங்கப்பட்ட கைதிகள் குமுதினி படகின் கோரக்கொலைகளை கண்டு தானே ஒரு இனம் பொங்கி எழுந்தது. அரசின் கொடுமைகளையும் இராணுவத்தின் அடவடித்தனங்களையும் அட்டுழீயங்களையும் மறைக்கவும் மறக்கவும் வைத்தது தான் உங்கள் நடவடிக்கைகள்.
    பஞ்சமாபாதகங்கள் எல்லாவற்றையும் செய்தவர்கள் பாலியல் மட்டும் தவிர்த்து நின்றார்களாம். சொல்லுவதற்கே வெட்கமாக இல்லை. சமூகம் விழிப்படையாமல் ஒரேமாதிரி இருந்துவிடுமென நினைப்பதும் உங்கள் இன்னொரு கனவுதான். உங்கள் கடந்தகாலத்தைவிட வரப்போகும் காலத்தில் தான் உங்களில் அக்கறை கொண்டிருக்கிறோம். நீங்கள் உங்கள் நிழல்களில்லிருந்து கூடத் தப்பமுடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    Reply
  • palli
    palli

    மதிவதனி கூட பிரபாவின் தாகத்தை தீர்பதற்க்காகதானே தூக்கபட்டார், அதன்பின் மாற்றபட்டார், மறுக்கபட்டார், கெ,,,,,,,,, இப்படி எத்தனையோ பட்டாருக்கு மத்த்யில் தனது உன்மை காதலை எண்ணி வேதனையும் பட்டிருப்பார்தானே, இது தலமையின் சங்கமாம்;
    தமிழ்செல்வன் சிரிப்பாலேயே வில்லதனம் செய்தது கூடவா தெரியாது, நிதர்சனம் தொலைக்காட்ச்சியின் பலரது தூக்கத்தை கெடுத்த அந்த நிலாவை ஆம்ஸ்ரோங் போல் காலடிவைத்து வள்ளலாய் வருங்கால முதல்வராய் இப்படி சகாக்கள் சன்னதம் ஆடி அரைமனதுடன் அமைதியானது அந்த நிலா; இப்படி பலதை சொல்லலாம், ஏன் நம்மட அம்மானின் கதையை கேட்டுபாருங்கோ; பல்லிக்கு டெம்பதான் வாய் கொழுப்பு;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    கிட்டரின் கிடுக்குப் பிடியை மறக்க முடியுமா?? கிட்டருக்கு கால் போன காரணமே வேறு?? ஆனால் அதை மாற்றியக்கச் சதி என புரளி கிளப்பி, மூடி மறைக்க அவர்கள் எடுத்த பிரயத்தனத்தை மறக்க முடியுமா?? தலை தாலி கட்டுகையில் மதி வயிற்றில் 4 மாதச் சிசு. எல்லாம் ஊருக்கத் தான் உபதேசம்……….

    Reply