5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவு வெளியானது – லோகேஸ்வரன் முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.

031009logeswaran.gifஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. யாழ். வட்டுக்கோட்டை தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் ஸ்ரீகர்ஷன் 192 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் இலங்கையில் முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.

சிங்கள மொழிமூலம் 196 புள்ளிகளைப் பெற்று அம்பாந்தோட்டை ருஹரிணு விஜயபா மகா வித்தியாலய மாணவன் கே. ஏ. பிரமோத் டில்ஷான் முதலாவது இடத்தையும் பிடித்துள்ளார். வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த சச்சிதானந்தம் கெளரீசன் என்ற மாணவன் 191 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில்(தமிழ் மொழி மூலம்) இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தப் பாடசாலையில் 58 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் 82 மாணவர்களும், சைவப்பிரகாசா மகளிர் மாகாவித்தியாலயத்தில் 42 மாணவர்களும், தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 34 மாணவர்களும், நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் 10 மாணவர்களும், பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் 6 மாணவர்களும் , சிதம்பரபுரம் சிறிநாகராஜா வித்தியாலயத்தில் 5 மாணவர்களும் , செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 4 மாணவர்களும் , தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் 3 மாணவர்களும் , இயங்கராவூர் , தாலிக்குளம் ஆகிய பாடசாலைகளில் தலா 2 மாணவர்களும் இந்தப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 2 லட்சத்து 98,000 மாணவர்கள் தோற்றினர். இவர்களுள் 31,000 பேரே சித்தியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

மாவட்டங்களுக்குரிய வெட்டுப்புள்ளிகள் வருமாறு:

கொழும்பு, கம்பஹா, களுத்துறை / கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல், கேகாலை தமிழ் மொழிமூலம் 141 புள்ளிகள். சிங்கள மொழிமூலம் – 144 புள்ளிகள்

நுவரெலியா தமிழ் – 137 சிங்களம் 138
வவுனியா – தமிழ் 136 சிங்களம் 136
அம்பாறை – தமிழ் 139 சிங்களம் 139
திருகோணமலை – தமிழ் 138 சிங்களம் 139
புத்தளம் – தமிழ் 137 சிங்களம் 139
அநுராதபுரம் – தமிழ் 138 சிங்களம்139
பொலன்னறுவை – தமிழ் 140 சிங்களம் 139
பதுளை – தமிழ் 138 சிங்களம் 139
மொனராகலை – தமிழ் 135 சிங்களம் 138
மன்னார் – தமிழ் 139
இரத்தினபுரி – தமிழ் 134 சிங்களம் 141
மட்டக்களப்பு – தமிழ் 139

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • பல்லி
    பல்லி

    எத்தனையோ ஆயிரம் லோகேஸ்வரன்கள் எம்மிடத்தில் தறுதலை கூட்டத்தால் காணாமல் போய்விட்டனர்;

    Reply
  • Vannikkumaran
    Vannikkumaran

    வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் யாராவது சித்தியடைந்துள்ளார்களா? என்பதை அறிந்து தேசம் பிரசுரிக்குமா?
    ஏனெனில் அம்மாணவர்களின் புலமைப்பரிசு பரீட்சைக்கு லிட்டில் எய்ட் மூலமாக தேசம் நிறைய உதவிகளை வழங்கி அந்த மாணவர்களையும் ஊக்குவித்து உதவி செய்தது. புத்கங்கள் வழங்கியது. அதில் யாராவது சித்தியடைந்திருந்தால் அதற்க்காக தேசத்திற்கு காலத்தினால் செய்த உதவிக்காக எனது பாராட்டுக்களையும் நன்றியறிதலையும் தெரிவிக்கிறேன்.

    அன்புடன்
    வன்னிக் குமரன்

    Reply
  • mano
    mano

    மாணவனின் பெயர் சிறிஹர்சன்> லோகேஸ்வரன் தந்தையின் பெயர்.

    Reply
  • புன்னியாமீன்
    புன்னியாமீன்

    //வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் யாராவது சித்தியடைந்துள்ளார்களா? – வன்னிக் குமரன்//

    வவுனியா இடைத்தங்கல் முகாம் மாணவர்களின் பெறுபேறுகள் 6ம், அல்லது 7ம் திகதிகளில் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

    முடிவு வெளிவந்ததும் சித்தியடைந்த அனைத்து மாணவர் விபரமும் தேசம் நெற்டில் முழுமையாக வெளியிடப்படும்.

    புன்னியாமீன்

    Reply
  • பல்லி
    பல்லி

    நன்றி புண்ணியமின் உங்கள் சேவைக்கு;

    Reply