2010 ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலையும் மார்ச்சில் பாராளுமன்றத் தேர்தலையும் அரசாங்கம் நடத்தவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல், ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில்;
ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் ஊடகங்களுடன் அரசாங் கத்துக்கு எந்தவொரு பிணக்குமி ல்லை.
ஊடகவியலாளர்களை அழிப்பதோ அல்லது அதனூடாக இலாபம்பெறுவதோ அரசின் நோக்கமல்ல. உரிய சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்தி பத்திரிகைப் பேரவையை தொடர்ந்து செயல்படுவதற்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கம்.