எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

செல்போன் மூலம் துப்பு துலங்கியது; நால்வரின் படங்களும் வெளியீடு

20090302.jpgபாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலில் மொத்தம் 12 தீவிரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தாக்குதலுக்கு முன்பு தீவிரவாதிகள் பயன்படுத்திய செல்போன் எண் ஒன்று பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதைவைத்து துப்பு துலக்கி இருக்கிறார்கள் பாகிஸ்தான் பொலிஸார்.

அந்த செல்போன் ரஹீம் யார்கான் என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை பொலிஸார் பிடித்துச் சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர் தவிர மேலும் 9 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் குவெட்டா நகரைச் சேர்ந்தவர்கள். 3 பேர் லாகூரையும், 2 பேர் கராச்சியையும் சேர்ந்தவர்கள்.

இது பற்றி மூத்த பொலிஸ் அதிகாரி ஹபிபூர் ரகுமான் கூறும் போது, “நாங்கள் லாகூரிலும் பக்கத்து மாவட்டங்களிலும் சோதனை நடத்தி சிலரை கைது செய்து இருக்கிறோம். அவர்களைப் பற்றிய விவரங்களை இப்போது வெளியே சொல்ல முடியாது. ஆனால் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன” என்றார். லாகூரில் உள்ள மாணவர் விடுதி ஒன்றில் பொலிஸார் சோதனை நடத்தினார்கள். அங்கு இரத்தக்கறை படிந்த ஆடைகள் கிடைத்தன. இது தீவிரவாதிகள் ஆடை என்று கருதுகின்றனர்.

எனவே இந்த தாக்குதலில் மாணவர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மாணவர்கள் சிலரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் முடிந்த பிறகு தீவிரவாதிகள் இங்கு சிறிய நேரம் தங்கியிருந்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஒருவர் கமராவில் பதிவு செய்து இருந்தார். இந்த படம் ஏற்கனவே வெளியானது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கமராவில் இந்த காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாதிகள் துப்பாக்கியுடனும் சாவகாசமாக நடந்து வருவதும், தாக்குதல் நடத்துவதும் தெளிவாக பதிவாகி இருக்கிறது.

தாக்குதல் முடிந்த பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்கின்றனர். அதுவும் கேமராவில் பதிவாகி உள்ளது. 12 தீவிரவாதிகள் தான் தாக்குதல் நடத்தியதாக கருதப்பட்டது. இதை கேமராவில் பதிவாகி இருக்கும் படங்களை பார்க்கும் போது 14 தீவிரவாதிகள் தாக்குதலில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது.

கோரமின்றி சபை 5 தடவை ஒத்திவைப்பு

srilanka-parliament.jpgபாராளு மன்றத்தில் நேற்று (05) சபை நடவடிக்கைகள் இடம்பெற்ற போது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் பிரசன்னமாகி இராததால் காலை முதல் மாலை வரை ஐந்து தடவை கோர மணி ஒலிக்கச் செய்யப்பட்டது. இதில் அரை மணி நேரத்திற்குள் நான்கு தடவை ஒலி எழுப்பப்பட்டது. வரிக்கட்டளைச் சட்ட மூலங்கள் மீதான விவாதத்தில் ஐ. தே. க. எம்.பி., ரவி கருணாநாயக்க உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அவ்வேளையில் சபையில் கோரத்துக்கான உறுப்பினர்கள் இருக்கவில்லை. இது குறித்து சபைக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் ரவிகருணாநாயக்க எம். பி. சுட்டிக்காட்டினார். இதனையடுத்து கோர மணி ஒலிக்கச் செய்யப்பட்டதும், ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் சிலர் வருகை தந்தனர். ரவி எம்.பி. உரையைத் தொடர்ந்த சில நிமிட நேரத்திற்குள் மீண்டும் எம். பி.க்கள் சபையிலிருந்து வெளியேறினர். இதனால் மீண்டும் மணி ஒலித்தது. எனினும் எம்.பிக்கள் சபைக்குள் வருவதும் போவதுமாய் இருந்தனர். இதனால் ஐந்து தடவைகள் கோர மணி ஒலிக்க வேண்டியதாயிற்று.

கோர மணி ஒலித்ததும் முகத்தைச் சுளித்துக் கொண்டு வந்த சில ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், ரவி கருணாநாயக்க எம். பி.யிடம் குறுக்குக் கேள்விகளைக் கேட்டு அவரை குடைந்தெடுத்தனர். அமைச்சர்கள் பலர் இருந்தும் எதிர்க்கட்சியினரின் கருத்துக்களைச் செவிமடுப்பதற்கு சபையில் எவரும் இல்லையே என ஐ. தே. க. எம்.பிக்கள் சுட்டிக் காட்டினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, ‘எமக்கு சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்குப் 10 நிமிடங்கள் போதுமானது. எதிர்க்கட்சியினருக்காகவே விவாதம் நடத்தப்படுகிறது. எனவே, எதிர்க்கட்சியினர் அல்லவா சபையில் இருக்க வேண்டும் என்றார். அதேநேரம், ‘ரவி கருணாநாயக்க எம்.பியின் உரையைக் கேட்க ஐ. தே. க. வினரே விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் சபையில் இல்லை’ என்று மேலும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது. வரிக் கட்டளைச் சட்ட மூலங்கள் ஐந்தும் சபையில் நிறைவேற்றப்பட்டன. இரண்டு கட்டளைச் சட்டங்கள் வாக்கெடுப்பின் மூலமாகவும், ஏனைய மூன்றும் வாக்கெடுப்பு இல்லாமலும் நிறைவேற்றப்பட்டன.

பாரிஸில் இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளுக்கும் எதிரான கண்டனப் போராட்டம் : த ஜெயபாலன்

Wanni_Warஊர்வலம் : சனி 07 / 03 / 2009 நேரம் மாலை 15:00
இடம் : Place Georges Pompidou
Métro : Rambuteau, Hôtel de Ville ou Les Halles

மார்ச் 7ல் பாரிஸில் இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் கண்டிக்கும் கண்டனப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாரிஸில் இடம்பெற்ற கண்டனப் போராட்டங்கள் அனைத்தும் புலி ஆதரவு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. ஆனால் மார்ச் 7ல் நடைபெறவுள்ள கண்டனப் போராட்டம் Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரான்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளான FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) ஆகியனவும் இந்தக் கண்டனப் போராட்டத்திற்கான தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி உள்ளன. தமிழர்களல்லாதவர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ்வகைப் போராட்டம் அண்மைக் காலத்தில் இப்போதே பாரிஸில் இடம்பெறுகிறது. இவ்வகையான போராட்டங்கள் லண்டனில் Committie for Workers International இனால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு பரிஸில் உள்ள மாற்றுக் கருத்து அரசியல் ஆர்வலர்களும் பிரான்ஸ் இடதுசாரி ஆர்வலர்களும் இணைந்து உருவாக்கிய அமைப்பு. இவர்கள் தொழிற்சங்கம் போன்றே தமது செயற்பாட்டைக் கொண்டு உள்ளனர். இவர்கள் உணவகத் தொழிலாளர்களுக்கான போராட்டங்கள் வதிவிட உரிமைக்கான போராட்டங்களை தமிழர்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்காக மேற்கொண்டு உள்ளனர்.

இக்கண்டனப் போராட்டம் தொடர்பாக  Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு வெளயிட்டுள்ள அறிக்கையில் எல்ரிரிஈ; என்ற சந்தேகத்தில் அல்லது தமிழர்கள் என்பதற்காக இலங்கை அரசாங்கம் ஆட்கடத்தல், எழுந்தமானமான கைதுகள், தடுத்து வைத்தல்கள், சித்திரவதைகள், கூட்டுப்படுகொலைகள் என்பனவற்றை மேற்கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

அதே அறிக்கையில் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுத தந்திரோபாயங்களால் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தி தாங்களே அம்மக்களின் ஏகபிரதிநிதிகளாக செய்றபடுவதாகவும் மற்றைய தமிழ் அரசியல் அமைப்புகளை இல்லாதொழித்து உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இலங்கையில் உள்ள ஏனைய ஆயுதக் குழுக்களும் இந்த அறிக்கையில் கண்டிக்கப்பட்டு உள்ளது. EPDP, PLOTE, TELO, TMVP ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசின் இராணுவத்தினருடன் இணைந்து செயற்டுவதாகவும் இவர்கள் கடத்தல் கப்பம் என்று வன்முறையில் ஈடுபடுவதாகவும் இது நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. (இந்த அறிக்கையைக் கீழே காணலாம்.)

Comite’ De de’fence Social – சமூகப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்டனப் போராட்டத்தில் பின்வரும் கோசங்களை முன்வைப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

– இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
– இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுகந்திரம் வழங்கு!
– அராஐகம் படுகொலைகள் காணாமல்போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
– பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
– பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
– பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!

._._._._._.

Crisis in Sri Lanka

The Government of Sri Lanka launched a major military offensive in the month of September 2008 against the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Since the separatist campaign launched by the LTTE against the government in 1972, the conflict has claimed tens of thousands of lives.

The government forces have long oppressed the Tamil population through massacre, raids, arbitrary detention and torture of thousands for mere suspicion of being a Tiger sympathiser or even for just being a Tamil.

The Tamils are safe nowhere in Sri Lanka. They are victims of segregation worthy of Apartheid. The slightest movement is controlled; all Tamils are obliged to get registered in police stations and military camps.

Meanwhile, the tigers with their strong arm tactics have kept the tamil population under their control claiming exclusive representation of the community working for their emancipation. They have eliminated all other representatives of the Tamil political organisation.

The “Tigers” forcibly recruit adults and children alike for their armed struggle. Since 1990, the Tigers have imposed a blockade on the populations of the areas under their control and those who have to crossover are obliged to leave their family members as hostage.

The situation has worsened for the civilians since the government launched its offensive in the month of September 2008.

The blockade has condemned civilians who are caught in the cross-fire Those who manage to escape are held in virtual concentration camps which could be termed the lawless areas where the military eliminates any individual who is a suspect.

To date, hundreds of refugees have disappeared. A safety zone has been created, too small to contain populations which is in the conflict are (approx. 500,000 people), which suffers from both the blockade of the “Tigers” and the artillery bombardment and those from air force.

The situation is further complicated by the fact that other Tamil paramilitary groups, including the EPDP, PLOTE, TELO, TMVP, (militia formed by former members of the Tigers)… are collaborating with the Sri Lankan army and bully the people through acts of extortion, of violence and abductions of children — all with the blessing of the Sri Lankan State.

We demand:

•End of massacre in Sri Lanka!
•Freedom for all oppressed peoples of Sri Lanka!

We call for the solidarity, support and relief from the entire French population, associations, trade unions and politicians.

We seek your participation at the rally to be held
On Saturday, 07 March 2009
This event will start at 15:00 Place Georges Pompidou, Paris.

அவைக்காற்றுக் கழகத்தின் மரணத்துள் வாழ்வு ஒரு அலசல் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Balendra_Kநாடகம் : மரணத்துள் வாழ்வு
நெறியாள்கை : க பாலேந்திரா
நடிப்பு: மனோகரன் மனுவேற்பிள்ளை, க பாலேந்திரா, ஆனந்தராணி பாலேந்திரா
பிரிதியாக்கம் : சி சிவசேகரம் மனோகரன் மறுவேற்பிள்ளை

இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீதியோரத்தில் ஸ்ரீலங்கா படையினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களில் ஒருவராக இருந்து பின்னர் விடுதலையாகி லண்டன் வந்து வழமையான குடும்ப சக்கரத்தில் ஈடுபடுகிறார் மாலினி. மாலினியின் கணவர் உலகமறிந்த ஒரு மனித உரிமைவாத சட்டத்தரணி (தமிழ் சட்டத்தரணி).

கொடுமையான சித்திரவதைகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் பலியாகி அந்த மனவடுக்களுடன் மனஉளைச்சலுடன் துன்பப்படும் மாலினி நாளடைவில் ஒரு உணர்வற்ற நடைபிண வாழ்க்கையை முன்னெடுக்கிறாள். மாலினியின் நிலமை இப்படி பரிதாபகரமாக இருக்க, அவரின் கணவர் ஸ்ரீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க முனையும் ஒரு சர்வதேச சட்ட நிபுணர்கள் குழுவின் முக்கிய சட்டத்தரணியாக சர்வதேச நீதி உலகில் பவனிவருகிறார். வாகனம் பழுதுபட்டு வீதியோரத்தில் நிற்க தமிழ் சட்டத்தரணிக்கு எதேட்சையாக உதவி செய்கிறார் ஒரு தமிழ் டொக்டர் ராஜரட்ணம்.

இந்த டொக்டர் ராஜரட்ணம் தான் கதையின் கிளைமாக்ஸ்…….. இவர் தான் சிங்கள இராணுவத்தினரால் மாலினி பாலியல் வன்செயலுக்கு உட்படுவதற்கு  உடந்தையாக இருந்தவர். அத்துடன் மாலினியை வன்முறைக்கும் உட்படுத்தியவர். மாலினியின் கணவரின் கார் பழுதுபட உதவிக்கு வந்த இந்த டொக்டர் ராஜரட்ணம் சட்டத்தரணியுடன் சேர்ந்து தண்ணியடிக்க வீட்டுக்கு வந்து மாலினியிடம் அகப்பட்டுக் கொள்கிறார். மாலினியின் அடிமனதில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வேதனைகள் இங்கிலாந்தில் கடற்கரையோரத்தில் உள்ள வீட்டில் துப்பாக்கி சண்டைகளாக வெடிக்கின்றன. ஆப்பிழுத்த குரங்கின் கதை போல வீட்டினுள் மாட்டிக் கொள்கிறார் டொக்டர் ராஜரட்ணம்.

உலக மனித உரிமை சட்டவாதியின் மனைவி வீட்டினுள் துப்பாக்கியை ஒழித்து வைத்திருந்து அட்டகாசம் பண்ணும் சம்பவங்களும், தலைவிரி கோலமாக துப்பாக்கியுடன் திரியும் மனைவியுடன் சமரசம் செய்யும் உலகம் தெரிந்த தமிழ் சட்டவாதியும், ஸ்ரீலங்கா இராணுவத்தில் வைத்தியராக இணைந்திருந்து தமிழ் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் தமிழ் வைத்தியரும், வீதியில் உதவி செய்ய வந்து மாட்டிக் கொள்ளும் டொக்டர் ராஜரட்ணமும்………… இங்கிலாந்து வீட்டில் இடம்பெறும் இச்சம்பவங்கள் யதார்த்தத்திற்கு முற்றும் விலகி நிற்கின்றன.

ஓர் நியாயமான யதார்த்தமான கருவை யதார்த்தமற்ற சம்பவங்கள் நியாயப்படுத்த தவறியதால் கரு அடிபட்டுப் போனது போன்ற உணர்வு தென்படுகின்றது.

ஒலி, ஒளி, நடிப்பு வழமைபோல் உயர்தரத்தில் இருந்தாலும் இப்படைப்பை கதைச் சூழ்நிலைகளும் சம்பவங்களும் நியாயப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்தக் காரணத்தால் க பாலேந்திராவின் ஏனைய நாடகங்களில் இருந்த தாக்கம் மரணத்தில் வாழ்வு நாடகத்தில் இருக்கவில்லை என்றே கூறவேண்டும்.

தண்ணி அடித்து நியாயம் பேசும் நடுத்தர வயது லண்டன் தமிழ் வைத்தியர், மனைவியை சமாதானப்படுத்துவதையே முழுநேர தொழிலாக வைத்திருக்கும் தமிழ் சட்டத்தரணி…………… லண்டனில் உள்ள சகஜ நிலமையை மனக்கண் முன் கொண்டு வருகிறது. மாலினியாக நடித்த ஆனந்தராணியின் நடிப்பு தரமாக இருந்தாலும் அந்த திறமையை பாத்திரம், சம்பவங்கள் நியாயப்படுத்தவில்லை.

ஓர் ஆழமான அரசியல் நியாயத்தை கூற முற்பட்ட இந்த படைப்பு யதார்த்தமற்ற கற்பனைகளால் மூழ்கடிக்கப்பட்டதைப் போன்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது. 

இலங்கை அணிமீதான தாக்குதல் வெட்கக் கேடானது : இம்ரான்கான்

imran-khan.jpgஇலங்கை கிரிக்கெட் அணியினர் மீது லாகூரில் வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் குறித்து தான் மிகுந்த கவலையும் வெட்கமும் அடைவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வி ஒன்றின் போதே அவர் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும், அவர் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை அணிக்குப் பாகிஸ்தானில் வைத்து அளிக்கப்பட்ட பாதுகாப்பு போதுமானதாக இல்லை. பல்வேறு தீவிரவாத அச்சுறுத்தல்கள் லாகூரில் இருந்தமையை கருத்திற் கொண்டு இலங்கை அணிக்கான பாதுகாப்பை அரசாங்கம் மேலும் பலப்படுத்தியிருக்கவேண்டும் ” என்றார்.

பாடசாலையில் காதலர்தினம் கொண்டாடிய அதிபரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

love.jpg எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள மத்திய கல்லூரியில் காதலர் தினத்தை கொண்டாடியதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இங்குள்ள கல்வி அலுவலகம் முன்பாகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒழுக்கமுள்ள மாணவ சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய அதிபர் மாணவர்களிடையே காதலைத் தூண்டிவிட்டு அவர்களின் கல்வியைப் பாழாக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இக்கல்லூரியில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது தொடர்பாக கல்வியமைச்சும் விசாரணைகளை நடத்திவருகிறது.

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரிடம் வித்தியாதரன் ஒப்படைக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் யாப்பா தெரிவிப்பு

anura_priyadarshana_yapa.jpgபுலிகள் கொழும்பில் விமானத் தாக்குதல் நடத்திய சமயம் புலிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் வித்தியாதரன் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, ஓர் ஊடகவியலாளர் என்ற ரீதியில் வித்தியாதரன் கைது செய்யப்படவில்லை. புலிகளுடன் தொலைபேசித் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே கைதானார்.

ஊடகவியலாளர்களுக்கு அரசு பூரண சுதந்திரம் வழங்கியுள்ளது. அவர் என்னிடமும் ஜனாதிபதியிடமும் கேள்விகள் கேட்டுள்ளார். எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஊடகவியலாளர்களை அரசு கௌரவத்துடன் நடத்துகின்றது. அவர் கடத்தப்பட்டதாகவும் வெள்ளை வேனில் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டவை அனைத்தும் வெறும் கற்பனைகளே.

வித்தியாதரன் நிரபராதி என விசாரணையில் தெரிய வந்தால் அவர் விடுவிக்கப்படுவார். குற்றவாளியாக இருந்தூல் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து 387 சிவிலியன்கள்கப்பல் மூலம் திருமலைக்கு

vanni-injured.gif முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் நோய்வாய்ப்பட்ட மற்றும் அநாதரவான நிலையிலிருந்த 387 பேர் நேற்றிரவு கிறீன் ஓஷன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என பாதுகாப்பு அமைச்சசு அறிவித்துள்ளது.

நோய்வாய்ப்பட்ட 57 பேரும், காயமடைந்துள்ள 87 பேரும், இரு கர்ப்பிணிகளும் மற்றும் அநாதரவான நிலையிலிருந்த 162 பேருமே இவ்வாறு திருமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அரச குறுந்தகவல் செய்திச் சேவை ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

gid_mobitel_agreement.jpgஅரசாங்க தகவல் திணைக்களமும் இலங்கை டெலிகொம் மொபிடெல் நிறுவனமும் இணைந்து மொபிடெல் தொலை பேசிப் பாவனையாளருக்கு குறுந்தகவல் மூலம் செய்திகளை வழங்கும் சேவையொன்றை ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான உடன்படிக்கை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா முன்னிலையில் இன்று கைச்சாத்திடப்பட்டது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டவும் மொபிடெல் நிறுவனத்தின் தலைவி லீஷா டி சில்வா சந்திரசேனவம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஆவணங்களை கைமாறிக்கொண்டனர். அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பா கையடக்கத் தெலைபேசியை இயக்கி  இந்த சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

அரசாங்கம், அபிவிருத்தித்திட்டங்களின் முன்னேற்றம், அமைச்சுக்கள், திணைக்களங்கள் உட்பட அரச நிறுவனங்கள் ஆகியவற்றில் மக்களைக் கவரும் விசேட தகவல்கள் இந்தச்சேவையின் மூலம் வழங்கப்படவுள்ளன. தேசிய கையடக்க தொலைபேசி சேவையை வழங்கும் டெலிகொம் மொபிடெல் நிறுவனத்தடன் இணைந்து விசேட தகவல்களையும் தேர்தல் முடிவுகளையும் குறுத்தகவல்கள் மூலம் பாவனையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை மகிழ்ச்சிக்குரியதென அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இலங்கை மொபிடெல் நிறுவனத்தின் தலைவி லீஷா டி சில்வா சந்திரசேன கருத்துத் தெரிவிக்கையில்,உடனுக்குடன் செய்திகளை பாவனையாளர்களுக்கு வழங்குவதில் செயற்திறன் மிக்க சேவையாக இதனைக் குறிப்பிடலாம் எனக் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்துடன் இணைந்து வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகள் இச்சேவையினூடாக வழங்கப்படபோது மக்களிடமிருந்து பொரும் வரவேற்புக் கிடைத்ததாகவும் இனிவரும் தேர்தல்களின்போது இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

எஞ்சிய 45 ச.கி.மீ. பிரதேசத்தையும் அவதானத்துடன் மீட்க ஆலோசனை – இராணுவத் தளபதி

sarath_fonseka.jpgஇராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர் அதிகாரிகள் நேற்று வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். விசேட ஹெலி மூலம் வவுனியாவைச் சென்றடைந்த இராணுவத் தளபதியை வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடை பெற்ற விசேட கலந்துரையாடலின் போது வன்னியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை இராணுவத் தளபதி கள தளபதிகளிடம் கேட்டறிந்துள்ளார். அதிகூடிய முன்னெச்சரிக்கையுடன் புலிகளிடம் எஞ்சியுள்ள 45 சதுர கிலோ மீற்றர் பரப்பையும் மீட்டெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேசமயம், படையினரின் போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக யாழ்-கண்டி ஏ-9 வீதி திறக்கப்பட்டுள்ள போதிலும் புலிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் எந்தவித தாக்குதல்களையும் நடத்தாத வகையில் அந்த வீதி ஊடாக செல்லும் படையினரின் வாகன தொடரணிக்குத் தேவையான போதிய பாதுகாப்பை வழங்குமாறு இராணுவத் தளபதி இந்த விஜயத்தின் போது உத்தரவிட்டுள்ளார்.