எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள மத்திய கல்லூரியில் காதலர் தினத்தை கொண்டாடியதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்குள்ள கல்வி அலுவலகம் முன்பாகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒழுக்கமுள்ள மாணவ சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய அதிபர் மாணவர்களிடையே காதலைத் தூண்டிவிட்டு அவர்களின் கல்வியைப் பாழாக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இக்கல்லூரியில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது தொடர்பாக கல்வியமைச்சும் விசாரணைகளை நடத்திவருகிறது.