இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது லாகூரில் வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் குறித்து தான் மிகுந்த கவலையும் வெட்கமும் அடைவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வி ஒன்றின் போதே அவர் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும், அவர் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கை அணிக்குப் பாகிஸ்தானில் வைத்து அளிக்கப்பட்ட பாதுகாப்பு போதுமானதாக இல்லை. பல்வேறு தீவிரவாத அச்சுறுத்தல்கள் லாகூரில் இருந்தமையை கருத்திற் கொண்டு இலங்கை அணிக்கான பாதுகாப்பை அரசாங்கம் மேலும் பலப்படுத்தியிருக்கவேண்டும் ” என்றார்.