காலம் சென்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சு சிறிசபாரத்தினத்தின் தாயார் சுந்தரம்பிள்ளை ராஜலட்சுமி ஓகஸ்ட் 21ல் காலமானார். இவரின் இறுதிக் கிரியைகள் 23.08.2010 காலை 11 மணி அளவில் 31/11 ஸ்டேட் பேங்க் காலனி இரண்டாவது தெரு விருகம்பாக்கம் சென்னை 92 (சாலிக்கிராமம் 17ஏ 12ஸ்ரீ பேருந்து நிலையம் அருகில்) நடைபெறும்.
1925 செப்ரம்பர் 22ல் பிறந்த இவர் சுந்தரம்பிள்ளை அவர்களை மணந்து கொண்டார். இவர் ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம், சு. கந்தசாமி (டாக்டர் கந்தா), திருமதி ஜெ பாக்கியம் , சு. செல்வரெத்தினம், திருமதி தி ஜெயராணி ஆகியோரின் தாயாராவார்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின் பிள்ளைகள் பெற்றோரின் இறுதிக் கிரியைகளை முன்னெடுக்கும் நிலை தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின் மாற்றமடைந்து பெற்றோர் பிள்ளைகளின் இறுதிக் கிரியைகளை நடாத்தும் நிலை உருவானது. ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் உட்பட ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் யுவதிகளை அவர்களது பெற்றோரே அடக்கம் செய்யும் துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது.
