யாழ். குடாநாட்டில் எங்காவது குற்றச்செயல்கள் நடைபெற்றால் அங்கு உடனடியாக பொலிஸ் வாகனம் வந்து நிற்கக் கூடியதான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக வசதிகள் கொண்ட ‘பொலிஸ் கார்’ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களைத் தடுப்பாதற்காக இந்நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் குற்றச்செயல் நடைபெற்றாலும் அந்த இடத்திலிருந்து பொது மக்கள் 0213210827 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவித்தால் அந்த இடத்திற்கு பொலிஸ் கார் வந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.