காலம் சென்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சு சிறிசபாரத்தினத்தின் தாயார் சுந்தரம்பிள்ளை ராஜலட்சுமி ஓகஸ்ட் 21ல் காலமானார். இவரின் இறுதிக் கிரியைகள் 23.08.2010 காலை 11 மணி அளவில் 31/11 ஸ்டேட் பேங்க் காலனி இரண்டாவது தெரு விருகம்பாக்கம் சென்னை 92 (சாலிக்கிராமம் 17ஏ 12ஸ்ரீ பேருந்து நிலையம் அருகில்) நடைபெறும்.
1925 செப்ரம்பர் 22ல் பிறந்த இவர் சுந்தரம்பிள்ளை அவர்களை மணந்து கொண்டார். இவர் ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம், சு. கந்தசாமி (டாக்டர் கந்தா), திருமதி ஜெ பாக்கியம் , சு. செல்வரெத்தினம், திருமதி தி ஜெயராணி ஆகியோரின் தாயாராவார்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின் பிள்ளைகள் பெற்றோரின் இறுதிக் கிரியைகளை முன்னெடுக்கும் நிலை தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின் மாற்றமடைந்து பெற்றோர் பிள்ளைகளின் இறுதிக் கிரியைகளை நடாத்தும் நிலை உருவானது. ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் உட்பட ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் யுவதிகளை அவர்களது பெற்றோரே அடக்கம் செய்யும் துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது.
kamal
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
palli
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பல்லி குடும்ப கண்ணீர் துளிகள்;
Haran
எமது சிறி அண்ணாவின் தாயார் ஆத்மசாந்திக்காக பிராத்திக்கிறேன்
சில வருடங்களுக்கு முன்பு யாழ் போயிருந்தபோது சிறிஅண்ணாவின் தாயாரை பார்க்க போயிருந்தேன் என்னை துருவி துருவி கேள்விகள் கேட்டுவிட்டு உவன் எப்ப எப்படி துலைந்து போறான் எண்டதை பாத்துவிட்டுத்தான் நான் கட்டை ஏறுவேன் என்று சொல்லி நிலத்தில இருந்த மண்ணை அள்ளி கோயில் பக்கமாக எறிந்நு நீங்கள் சாமி தெய்வங்கள் என்று இருந்தால் பதில் சொல்லுங்கோ அதற்க பிறகு நான் கோயிலுக்கு வருவேன் என்று சத்தமாக சொன்னார் மனம் வெந்தபடியே தான் இருப்பதாகவும் சிறிசபாவை மட்டுமல்ல பல ரெலோ போராளிகளையும் நினைத்து. இலங்கை இராணுவம் கொன்றிருந்தால் நான் இவ்வளவு கலைப்படமாட்டேன் என்றும் அழுது அழுது கதைத்தார் கதைப்போம் பேசுவோம் என்று கேட்கவும் கொன்றார்கள் என்று சொல்லி சொல்லி அழுதார்.
பல வருடங்களாக தாயார் வீட்டுக்கு வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து வந்துள்ளார். இவை எனது மனதைவிட்டு அகலாத நினைவாக உள்ளது
தாசன்
“……1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுந்தரம் கொலை செய்யப்பட்ட வேளையில் தமிழ் நாட்டில் என்னோடு தங்கியிருந்த நாகராஜா, சுந்தரத்திற்கு அஞ்சலித் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிடுகிறார். அப்போது ரெலோ இயக்கத்தைச் சார்ந்த சிறீ சபாரத்தினம், பிரபாகரன் ஆகிய இருவரும் நாகராஜாவைக் கொலைசெய்வதற்காகக் கடத்தி சென்ற சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வேளையிலும் பிரபாகரன் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே செயற்பட்டார்…..”
ஹரன் அவர்களே. அத்தாய்க்கு சிறீ சபாரட்ணம் செய்த மேலே சொல்லப்பட்ட விடயம் தெரியாது இருக்கலாம். அது அவரின் குற்றமல்ல. ஆனால் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். துண்டுப்பிரசுரம் வெளியிட்டதற்கே சிறீ கடத்திக்கொலை முயற்சியா?
நானும் சிறீயின் ஊர்தான். சொல்லப்போனால் ஒரே ரோட் எனவும் சொல்லலாம்.
nantha
ஸ்ரீ சபாரத்தினம் உறவுக்காரனான கோப்பாய் எம் பி ஆலால சுந்தரத்தையும், உடுவில் எம்பி தர்மலிங்கத்தையும் போட்டுத்தள்ளியது இந்த தாய்க்குத் தெரியாமல் இருக்க நியாயமில்லை. தவிர இதுவரையில் இந்த டெலோ இயக்கம் அந்தக் கொலைகளுக்கான அரசியல் காரணத்தை முன் வைக்கவுமில்லை. புலிகளைபோலவே “எங்களுக்குத்” தெரியாது என்று கைவிரித்தார்கள்.
தாசன்
“….தவிர இதுவரையில் இந்த டெலோ இயக்கம் அந்தக் கொலைகளுக்கான அரசியல் காரணத்தை முன் வைக்கவுமில்லை….”
எல்லாம் இந்தியா என்கின்ற நண்பனின் வழிகாட்டல் எனச்சொல்கிறார்கள், உண்மையோ யாமறியோம். கொலைகளுக்கு ‘அரசியல்’ காரணம் சொன்னால் சரியாகிவிடுமா? அப்போ எல்லோரிடமும் காரணம் ஒன்றிருக்குமே? அவ்வாறாயின் நந்தா அவற்றை ஏற்றுக்கொள்வார் என நினைக்கிறேன்.நன்றி!
Haran
//என்னோடு தங்கியிருந்த நாகராஜா – சுந்தரத்திற்கு அஞ்சலித் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிடுகிறார். அப்போது ரெலோ இயக்கத்தைச் சார்ந்த சிறீ சபாரத்தினம் பிரபாகரன் ஆகிய இருவரும் நாகராஜாவைக் கொலைசெய்வதற்காகக் கடத்தி சென்ற சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வேளையிலும் பிரபாகரன் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராகவே செயற்பட்டார்….
நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். துண்டுப்பிரசுரம் வெளியிட்டதற்கே சிறீ கடத்திக்கொலை முயற்சியா?//தாஸன்
தாசன் சிறியுடன் பிரபா என்று இருந்ததில் பிரபாவை எடுத்துவிட்டு சிறியை மட்டும் போட்டு உங்க பின்னூட்டத்தின் வீரம் தெரிகிறது.
இந்த ஜயர் இன்னும் எத்தனையோ பொய்களை அவிட்டுவிடவுள்ளார் இதற்கு ஒரு இணையத்தளமும் இடம் கொடுத்துள்ளது பிரபாகரன் ரெலோவில் இருக்கும்போதும் தான் தனியான இயக்கம் நடத்துவது போன்றே நடந்துள்ளார். ஆனால் சிறியும் பிரபாவும் இருவருமாக சேர்ந்து எங்கும்போவதில்லை பிரபாவுடன் ஒரே ஒரு சம்பவத்தில் மட்டும் நீர்வேலி வங்கி கொள்ளையில்தான் சிறிசபா சேர்ந்து இருந்தார்
ஜயர் சொல்லுவது பொய் பிரபாகரனுக்கு போராளிப்பட்டம் கொடுக்க மற்றவர்களின் தோழில் பாயவிடுகிறார் தனது குரங்கை
//ஸ்ரீ சபாரத்தினம் உறவுக்காரனான கோப்பாய் எம் பி ஆலால சுந்தரத்தையும், உடுவில் எம்பி தர்மலிங்கத்தையும் போட்டுத்தள்ளியது இந்த தாய்க்குத் தெரியாமல் இருக்க நியாயமில்லை. தவிர இதுவரையில் இந்த டெலோ இயக்கம் அந்தக் கொலைகளுக்கான அரசியல் காரணத்தை முன் வைக்கவுமில்லை. புலிகளைபோலவே “எங்களுக்குத்” தெரியாது என்று கைவிரித்தார்கள்// நந்தா
பொபி தாஸ் இன்னும் எத்தனையோ ரெலொ கொலைகளையும் முன்வைத்திருக்கலாம் -ஆனால் இங்கு இந்த தாயின் நினைப்பையே தெரியப்படுத்தினேன்.
இந்த தாய் பயங்கரவாதத்தில் சம்பந்தப்படவில்லையே. இதை நான் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் முள்ளிவாய்க்காலில் நடந்த அத்தனை கொலைகளுக்கும் மன்னிப்பு கேட்பாரா என்று நான் கேட்டேனா?
nantha
தாசன்:
‘அரசியல் காரணமொன்றை” சொல்லிவிட்டால் கொலை நியாயமாகிவிடும் என்ற கருத்தில் நான் அதனைச் சொல்லவில்லை. ஒரு காரணத்தை (போலியோ, உண்மையோ) சொல்ல முடியாதவர்கள்தான் இந்த இயக்கத்து செம்மல்கள். வெறும் அடியாட்கள் கும்பலகாவே நடந்து கொண்டனர். இவர்கள் முதலில் “போர்” தொடுத்தது தமிழ் மக்களுடனேயே என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
1980 இல் “செட்டியின்” கொலை ஸ்ரீ சபாரத்தினத்தின் வீட்டிலேயே பேசப்பட்டது. குட்டிமணியும், பிரபாகரனும் அந்தக் கொலையை செய்தார்கள். செட்டி பிரபாகரனுக்கு “குரு” மாத்திரமல்ல பல வங்கிக் கொள்ளைகளில் பிரபாகரன், ஸ்ரீ சபாரத்தினம் ஆகியோருக்காக ஈடுபட்டவனும் என்பது உண்மை. நீர்வேலி வங்கிக் கொள்ளைக்கு “வர முடியாது” என்ற காரணத்துக்காகவே செட்டியை கொன்றனர். அந்த நாட்களில் செட்டி “மீன்” வியாபாரம் செய்து வாழ்ந்து கொண்டிருந்தார். இந்த “தமிழ்” விளையாட்டுக்களை விட்டுவிட்டு இருந்த செட்டிக்கு அந்தக் கதி. செட்டிக்கும் இரண்டு குழந்தைகள் அப்போது இருந்தார்கள். இரண்டாவது குழந்தையின் “முப்பத்தொன்று” சடங்கிலன்று செட்டியை வாசலுக்கு கூப்பிட்டு கொன்று விட்டு ஓடிப்போனார்கள். பின்னாட்களில் செட்டியின் தம்பியை கண்டவுடன் பிரபாகரன் மாத்திரமல்ல இந்த ஸ்ரீ சபாரத்தினத்தின தாய் கூட ஒளிந்துகொண்டது எனக்கு நன்கு தெரியும்!
ஆலாலசுந்தரத்தின் வீட்டில் “அடுகிடைபடுகிடையாக” இருந்த டெலோகள் கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னால் மெதுவாக தங்கள் நடமாட்டத்தை நிறுத்திகொண்டமை எனக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. அதனை ஆலால சுந்தரம் அவர்களிடம் குறிப்பிட்ட பொழுது ” சீ! அவங்களுக்கு நான் எவ்வளவு உதவி செய்திருக்கிறேன்” என்று சந்தேகப்பட மறுத்த அவர் ஆறு நாட்களின் பின்னர் கொல்லப்பட்டது குறிப்பிடத்ததக்கது.
அப்பொழுது அங்கு எஞ்சிருந்த இந்தக் கூட்டணி எம்பிமாரை எதற்குக் கொல்ல வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இந்த இருவராலும் இயக்கங்களுக்கு “தொல்லை” என்பதே காரணம். ஜேஆர் குண்டு போடுவதும் பொதுமக்கள் கொல்லப்படுவதும், இந்த இரண்டு எம்பிமாரும் கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கு “நஷ்ட” ஈடு பெற்றுக் கொடுப்பதும் சகஜமாக இருந்த வேளையில் “இயக்கங்கள்” மீது மக்களுக்கு பயங்கர வெறுப்பே நிலவியது. ஜேஆருடன் அப்போதே “கள்ளக் காதல்” தொடர்பு கொண்டிருந்த புலிகள் எவரும் இந்தக் குண்டு வீச்சுக்களில் கொல்லப்படவில்லை என்பது எப்படி என்பது பற்றி ஆராய்ந்த பொழுது, குண்டு வீசும் தகவல்கள் புலிகளுக்கு முன்னரே கிடைத்து வந்தது என்பது மாத்திரமல்ல “மக்கள் கொல்லப்பட வேண்டும்” என்ற கருத்து அரசுக்கும், இயக்கங்களுக்கும் தேவையானதாக இருந்தது என்ற உண்மையும் வெளிவந்தது.
யாரோ ஒரு எசமானுக்கு சேவகம் செய்தது புலிகள் மாத்திரமல்ல, ரெலோவும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இறந்தவர்கள் எல்லாம் “பரிசுத்த” ஆத்மாக்கள்” அல்ல.
எனது பாடசாலை நண்பன் “நாகராஜாவை” நினைவு படுத்தியமைக்கு நன்றி!
தமிழ்வாதம்
அய்யரின் அந்தச் செய்தி சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட உண்மை. சுந்தரம் கொலைக்கு நாகராசா வெளியிட்ட துண்டுப் பிரசுரம் தொடர்பாக, TELO இயக்கம் கடத்தியது உண்மை. இந்தச் செய்தி இந்தியாவிலிருந்து வந்த விசுவானந்த தேவனால்(NLFT)உடனடியாக தமிழ் அரசியல் சமுகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. பல்வேறுபட்ட அழுத்தங்களால் மட்டுமல்ல, TELO தலைமை, கொலைக்கருவியை பிரபாகரனை இயக்க உத்தர விட்டதும் நாகராசா தப்பியதற்கான காரணங்கள். நாகராசாவின் அரசியல் மௌனிப்பை எழுதி வாங்கி விட்டு, அவருக்கு உயிர்ப்பிச்சை வழங்கப்பட்டது.
பிற்குறிப்பு: எந்தவொரு பெற்றோரின் விருப்பத்துடன், ஆரம்பகாலங்களில், பிள்ளைகள் இயக்கங்களில் சேரவில்லை. இதில் பெற்றோரை வம்புக்கிழுப்பது சரியாகப் படவில்லை.
பல்லி
//இந்த ஜயர் இன்னும் எத்தனையோ பொய்களை அவிட்டுவிடவுள்ளார் இதற்கு ஒரு இணையத்தளமும் இடம் கொடுத்துள்ளது //
இதில் எனக்கும் உடன்பாடுதான்; ஜயரை விமர்சிக்க வேண்டும்; ஜயர் சொல்லுவதில் ஒரு பத்துவீதம் மட்டுமே உண்மையாக இருக்கும் என பலர் சொல்லி கேட்டுள்ளேன்;
தமிழ்வாதம்
பல்லி! எது உண்மை, எது பொய்யென நீங்கள் (பலர் சொல்லக் கேட்டு) எழுதலாமே!
uruththiran
ஜயர் இவ்வளவு காலமாக ஏன் தன்னைப்பற்றி விமர்சனம் செய்யவில்லை?? இப்போ மற்றவர்களைப்பற்றி எழுதுகிறார்…. இவரைப்பற்றி பல விமர்சனங்கள் உண்டு. அதில் முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்டவர், மாற்று இயக்கத்தவர்களின் கொலைகளில் சம்பந்தப்பட்டவர் என்பவை குறிப்பிடத்தக்கது.
தமிழ்வாதம்
//…அதில் முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்டவர், மாற்று இயக்கத்தவர்களின் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்….// uruththiran on August 25, 2010 3:31 pm
ஆதாரம் வைக்கப்பட வேண்டுமே எண்ணப்பாடு உங்களுக்கு எங்கே போயிற்று?
பல்லி
ஜயரின் பாகம் அனைத்தையும் படித்தால் தெரியும் ஜயர் ஒரு ஆதரவற்ற புலியென; ஜயர் என்னமாய் கதைவுடுகிறார், ஜயா தேசத்தில் வந்துவிட்டாரல்லவா?? பார்க்கலாம்; தமிழ்வாதம் உங்கள் ஆசை கண்டிப்பாக நிறைவேறும், அமைதி அமைதி;
vanthiyadevan
பெற்றோரின் விருப்பத்துடன், பிள்ளைகள் இயக்கங்களில் சேரவில்லை. இதில் பெற்றோரை வம்புக்கிழுப்பது very bad.
nantha
பெற்றோருக்குத் தெரியாமல் பல பிள்ளைகள் இயக்கங்களுக்கு ஓடியது உண்மை. ஆனால் “பிள்ளைகளின்” கையில் பணம் புரளத் தொடங்கியதும் பல பெற்றோர்கள் அந்தப் பிள்ளைகளிடம் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்று ஒரு கேள்வியே கேட்காமல் பிள்ளைகளுக்காக வக்காலத்து வாங்கும் கோஷ்டியாகவே மாறினார்கள். அந்தக் கொள்ளைப் பணத்தில் அவர்களும் அம்பாளிக்கத் தொடங்கினார்கள். ஸ்ரீ சபாரத்தினம் மாத்திரமல்ல, பல இயக்க செம்மல்களின் குடும்ப வரலாறு இதுவே.
BC
அய்யரின் கட்டுரை இரண்டு, முன்று படித்திருக்கிறேன். நான் அறிந்தவரை முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்டவர், மாற்று இயக்கத்தவர்களின் கொலைகளில் சம்பந்தப்பட்டவர் என்பது பொய். அவர் மத, சாதி அடையாளங்களை துக்கி எறிந்தவர். அவரின் கட்டுரையால் பிரபாகரனின் புனிதவிம்பம் உடைகிறது என்று புலி பக்தர்கள் கவலை கொள்வதும் தெரியும்.
பல்லி
//ஆதாரம் வைக்கப்பட வேண்டுமே எண்ணப்பாடு உங்களுக்கு எங்கே போயிற்று?//
இதே கேள்வியை ஜயரிடம் கேட்டதுண்டோ,?? ஜயர் இந்த பாகம் ஒன்றிலும் தான்விட்ட தவறுகளை சொல்லவில்லை; அப்படியாயின் இவர் என்ன சமையல் வேலைக்கா அமைப்பில் சேர்ந்தார், அனைத்து ரகசியங்களும் தெரிகிறதே அதனால் கேட்டேன்; இவர் எத்தனை வருடம் இயக்கத்தில் இருந்திருப்பார்?? 30 வருட இரத்த கறையை காவியமாக சொல்லுவதுக்கு, ஜயரின் பாகம் அனைத்திலும் பிரபாகரனே நாயகன், மற்றவர்கள் இடையிடையே வந்து போகிறார்கள்;
தொடரும் பல்லி,
siva
பல்லி கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.
//சம்பவங்களை நினைவிலிருந்தே எழுதுவதால் இனியொரு வாசகர்களின் பின்னூட்டங்களிலிருந்தும், என்னோடு முன்பிருந்தவர்களுடனான உரையாடலின் மூலமும் செழுமைப்படுத்திக் கொள்கிறேன். // என்று ஜயர் குறிப்பிட்டுள்ளது நகைப்புக்கிடமானது. ஒன்றோடொன்று முரண்படும் முகமிலிகளின் கருத்துக்களில் ஜயர் எதனை சரியென எடுத்து கட்டுரையை “செழுமை”ப்படுத்துகிறார் என கருத்தெழுதின யாருக்காவது தெரியுமா? எதன் அடிப்படையில் எக்கருத்து சரியென முடிவெடுக்கிறார் என யாருக்காவது தெரியுமா?
தமிழ்வாதம்
விடுதலைப் போராட்ட வளர்ச்சியில் அய்யரைப்பற்றி, அநேகருக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதீத குற்றச் சாட்டை, சம்பவங்களின் தொகுப்பினை வெளிக்கொணரும் ஒரு மனிதனில் வீசுகிற போது, அதைத் தாங்கிப் பிடிக்கிறவர்களுக்கு தார்மீகப் பொறுப்பு வேண்டும். ’30 வருட இரத்தக் கறையின் காவியம்’ விசையுந்தி பிடித்தவர்களுக்கு மட்டுமல்ல, விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இரண்டு, மூன்று கட்டுரை படித்த BC க்கு கிடைத்தது ஞானம்; 24யும் படித்த பல்லிக்கு இளக்காரமாப் படுவது சமையல் வேலையா? அய்யரின் தானறிந்த சம்பவங்களை விட, கேள்வி ஞானத்தில் எழுதுகிறவையே ‘செழுமைப்படுத்த’ வேண்டியவை
nantha
ஐயர் அல்லது தாசன் அல்லது தேசம் நெற்றில் எழுதுபவர்கள் யாருடனும் அறிமுகம் கிடையாது. ஆயினும் “ஐயர்” என்பவர் தன்னைப் பற்றிச் “சுய விமர்சனம்” செய்யவில்லை என்று குற்றம் சாட்டும் சிலர் “தங்களின்” இயக்க அனுபவங்களை அல்லது செய்த அடாவடிகளைப் பற்றி மூச்சு விடாமல் மற்றவர் யார் என்றும் அவர் தன்னைப் பற்றி விமர்சனம் எழுதவில்லை என்று அங்கலாய்ப்பதன் அர்த்தம் என்ன?
அந்த “ஐயர்” விமர்சகர்கள் தாங்கள் “உலகமறிந்த” தலைவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்களா?
ஜெயராஜா
ஜயர் எழுதுவது போல இன்னும் நிறையப்பேர் எழுதலாம். ஆரம்பகால உறுப்பினர்கள் இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்கள். அதேபோல வரதராஜப் பெருமாளும் எழுதலாம். அவருக்கும் நிறைய விடயம் தெரியும்.
மொத்தத்தில் உன்னதமான இளைஞர்களின் கனவுகளை நாசமாக்கிய வெறிபிடித்த கூட்டம் தங்களுக்குள் தாங்களாகவே அடிபடுவது தெரிகிறது. அதேபோல்த்தான் கேபியின் பேட்டியும். இவை சொல்லுகிற மாதிரி நிறையக் காலம் தலையில் மிளகாய் அரைக்க முடியாதென்பதும் இவ்வளவு காலமும் தமிழர் தலையில் மிளகாய் அரைத்ததை ஞாபகப்படுத்துகிறது. இதற்குள் இந்திய வெள்ளை வேட்டிகள் பேட்டிகள், மறுஅறிக்கைகள், etc……. ஒரு உண்மை மட்டும் தெளிவு. தாங்களாகவே தங்களுக்குள் நடந்த பண மோசடியில் இருந்து கொலை, கொள்ளை வரை கூறும்போது இந்த ஆர்ப்பரிக்கும் கூட்டம் கொஞ்சம் ஓடி ஒளிவது தெரிகிறது. மொத்தத்தில் இந்தக் கூட்டம் பெரிய செத்தவீடொன்றை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
palli
//ஐயர் அல்லது தாசன் அல்லது தேசம் நெற்றில் எழுதுபவர்கள் யாருடனும் அறிமுகம் கிடையாது.// nantha
இருக்கலாம் ஆனால் இவர்களால் அழிக்கபட்டவர்களின் உறவுகளாய் இருக்கலாமல்லவா?? கொழும்பையே நம்பி வாழ்க்கை நடத்திய உங்களுக்கு இது புரிய வாய்ப்பில்லைதான், ஆனாலும் உங்களைபோல் ஜயரையும் இந்த பல்லி இனம்காட்டும்;
//தங்களின்” இயக்க அனுபவங்களை அல்லது செய்த அடாவடிகளைப் பற்றி மூச்சு விடாமல் மற்றவர் யார் என்றும் அவர் தன்னைப் பற்றி விமர்சனம் எழுதவில்லை என்று அங்கலாய்ப்பதன் அர்த்தம் என்ன?//
இது உங்களுக்கு பொருந்தாதா??
நாம் ஒன்றும் ஜயருக்கு அடாவடி செய்யவில்லை; அவரது மூலகதைக்கு திரைகதை என்னும் முற்றுபுள்ளி வைக்கவே முனைகிறோம்;
//விடுதலைப் போராட்ட வளர்ச்சியில் அய்யரைப்பற்றி, அநேகருக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை.// tamilvathm
இதனாலேயே கேட்டேன் சமையல் வேலையா செய்தார் என?
//ஒரு மனிதனில் வீசுகிற போது, அதைத் தாங்கிப் பிடிக்கிறவர்களுக்கு தார்மீகப் பொறுப்பு வேண்டும்.//
இது ஜயருக்கு இருந்தால் சுந்தரத்தை கொன்றது யார்? எதுக்காக? யாரது உத்தரவில்? பதில் தர சொல்லுங்க;
//விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.//
பல்லியை கேட்டால் ஜயர் கூட இதில் ஒன்றுதான்,
//இரண்டு, மூன்று கட்டுரை படித்த BC க்கு கிடைத்தது ஞானம்//
மிகுதியையும் பி சி வாசிப்பார் என நினைக்கிறேன், அப்போது பல்லியின் நிலையில் அவரும் வருவார் என நினைக்கிறேன்;
//24யும் படித்த பல்லிக்கு இளக்காரமாப் படுவது சமையல் வேலையா? //
மீண்டும் எனது பின்னோட்டத்தை வாசிக்கவும், தப்பில்லை,
//அய்யரின் தானறிந்த சம்பவங்களை விட, //
ஜயர் தான் நேரடியாக பார்த்ததாக வாக்குமூலம் கொடுப்பதே இங்கு பிரச்சனை;
//அந்த “ஐயர்” விமர்சகர்கள் தாங்கள் “உலகமறிந்த” தலைவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்களா?//nantha
இல்லை இல்லை எமது கீராமத்து கதை எமக்கும் தெரியும் என்பதில் என்ன வெக்கம்;
//ஆரம்பகால உறுப்பினர்கள் இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்கள்.// jeyarajah
இதை ஜயர் மனதில் கொண்டு மிகுதி பாகங்களை கொண்டு செல்வதே நாகரிகம்;
//வரதராஜப் பெருமாளும் எழுதலாம். அவருக்கும் நிறைய விடயம் தெரியும். //
உன்மைதான்:
பல்லியும் தொடரும்;;;
nantha
“கொழும்பை” நம்பி நான் வாழ்ந்தேனாம். இதென்ன… எனக்குத்தெரியாமல் நான் எப்போ கொழும்பை நம்பி!… என்னை இனம் காட்டி விட்டதாகப் பல்லி என்ன புதுக் கதை?
மேலும் இலங்கையில் சகல தமிழர்களும் கொழும்பை நம்பித்தான் சீவிக்கிறார்கள். மாவோ, மண்ணெண்ணையோ, சீனியோ எல்லாம் கொழும்பூடாகவே வடபகுதிக்கு வருகிறது. சிலவேளை பல்லிக்கு வேறு வழிகளில் வந்துதான் பல்லி குடும்பம் சீவனம் நடத்தினார்களோ தெரியவில்லை. அந்த வழி எது என்றும் சொன்னால் மற்றவர்களும் பின் பற்ற உதவியாக இருக்கும்!
nantha
//மொத்தத்தில் இந்தக் கூட்டம் பெரிய செத்தவீடொன்றை நடத்தி முடித்திருக்கிறார்கள்.//
ஜெயராஜின் கருத்தில் எனக்கு 100 சதமானம் உடன்பாடு உண்டு. அந்நியர்களின் சகவாசம்,அவர்களின் பணம் என்பவற்றுக்காக ஒரு தலை முறையையே நாசம் பண்ணிய அசுர வித்துக்கள் இன்னமும் “தாங்கள்” தமிழ் மக்களுக்கு போராடுவதாக கதையளப்பது சகிக்க முடியவில்லை!
LUCKY
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்
பல்லி
//கொழும்பை” நம்பி நான் வாழ்ந்தேனாம்.// இதில் என்ன சந்தேகம்?? ஜனாதிபதியின் கடிதத்தை வாசிக்கும் அளவுக்கு அன்றே அரசின் அன்புக்குரியவரெனில் இப்போது சொல்லவும் வேண்டுமா??(நீங்க தந்த தகவல்தான்;)
// என்னை இனம் காட்டி விட்டதாகப் பல்லி என்ன புதுக் கதை?// 100ற்று காணக்கான பின்னோட்டம் அத்தனையும் இனம் மதம் என எழுதினீர்களே ஆக நந்தா யார் என்பதும் அவரது கொள்கை என்ன என்பதும் இதுவரை புரியாமல் இருக்க தேசம் வாசகர்கள் என்ன ஒருபேப்பர் படிப்பவர்களா??
//மாவோ, மண்ணெண்ணையோ, சீனியோ எல்லாம் கொழும்பூடாகவே வடபகுதிக்கு வருகிறது.//
இது மூன்றுமே நந்தாவுக்கு ரதானம்; இந்த மூன்றும் இல்லாமல் வாழ்ந்த அனுபவம் பல்லிக்கு உண்டு;
//சிலவேளை பல்லிக்கு வேறு வழிகளில் வந்துதான் பல்லி குடும்பம் சீவனம் நடத்தினார்களோ தெரியவில்லை. //
அதுதான் உங்களுக்கு தெரியுமே கள்ளகடத்தல்காரருடன் பல்லி நட்பாய் இருப்பதான் நந்தாவே வாக்குமூலம் கொடுத்தீர்களே?? உங்களிடம் கருத்தில்லை என்னும் கடுப்பில் பல்லியின் குடும்பத்தையும் உதவிக்கு இழுப்பது தெரிகிறது, ஆனால் இதெல்லாம் பல்லிக்கும் பல்லி குடும்பத்துக்கும் பளகி போச்சு;
//அந்த வழி எது என்றும் சொன்னால் மற்றவர்களும் பின்பற்ற உதவியாக இருக்கும்// உழைப்பு உழைப்பு,
nantha
அரசுக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு மாதாமாதம் காசோலை வருகிறது என்ற கருத்துப்பட பல்லி எழுதுவது வெறும்
பாமரத்தனம். அடுத்ததாக கொல்லப்பட்ட டாக்டர் ராஜசுந்தரம் அவர்களிடமிருந்தே அந்தக் கடிதத்தை படித்தேன் என்று கூறியிருக்கிறேன். அதனை திரிபுபடுத்தி ஜனாதிபதிக்கு வந்த கடிதங்களையெல்லாம் படிக்கும் செல்வாக்கு எனக்கு உள்ளதாகப் கூறுவது வெறும் யாழ்ப்பாணத்து பெட்டிக் கலாச்சாரம்! சந்ததியாரிலிருந்து உமாமகேஸ்வரன் வரை அந்தக் கடிதத்தைப் பார்த்துள்ளனர். திரிபுபடுத்தல், “அள்ளி” விடுதல் என்பன தமிழ் தேசிய போராட்டத்தின் உச்சாணிக் கொள்கைகள் ஆயிற்றே! பல்லியால் விட முடியுமா என்ன?
பாதிரிகளின் கபடத்தனங்களை மறைத்து அவர்கள் புலிகளோடு சேர்ந்து செய்த கொள்ளைகள், கொலைகளை மறைத்து அவர்களுக்கு சேவகம் செய்ய நந்தாவுக்கு பிடிக்காது. ஆனால் பல்லிக்கு அது பிடித்தமான கலை! அதற்கு இனம், மதம் என்பன தேவையில்லை.
கள்ளக் கடத்தல்காரர்களை “ஏறிவந்த ஏணிகள்” என்று புகழ்ந்து விட்டு “நான் அவனில்லை” என்று பல்லி ஒளிந்து கொள்ள முற்பட்டது “தேசம்” வாசகர்கள் சகலரும் அறிந்த உண்மை! பல்லிக்கு தமிழ் எழுதுவதில் சில வில்லங்கம் இருப்பது தெரிகிறது. வாக்குமூலம் கொடுத்தது பல்லி. மறுத்ததும் பல்லி. நந்தாவுக்கு ஞாபக மறதி கிடையாது.
தேசம் வாசகர்களிடையே “பல்லி” போல ஒருபேப்பர் பத்திரிகைக்கு எழுத தகுதியுள்ள ஆள் வேறு எவரும் இல்லை என்றே கருதுகிறேன்!
பல்லி
//தேசம் வாசகர்களிடையே “பல்லி” போல ஒருபேப்பர் பத்திரிகைக்கு எழுத தகுதியுள்ள ஆள் வேறு எவரும் இல்லை என்றே கருதுகிறேன்!//
இருக்கட்டும் அதற்கான விடையை காலம் சொல்லும்:
//அரசுக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு மாதாமாதம் காசோலை வருகிறது என்ற கருத்துப்பட பல்லி எழுதுவது வெறும்
பாமரத்தனம். // அப்படியா ரி பி சி யில் இருந்து ஈழநாசம்வரை என்ன வருகுதாம்?? கிண்டாதையுங்கோ நாறிவிடும்;
// ராஜசுந்தரம் அவர்களிடமிருந்தே அந்தக் கடிதத்தை படித்தேன் என்று கூறியிருக்கிறேன். // டாக்டர் யாருக்கு எழுதிய கடிதம் என்பதே பிரச்சனை; டாக்டர் உஙளிடம் காட்ட வாய்ப்பில்லை அது பல்லிக்கு தெரியும்; அதனால் தங்களுக்கு அந்த கடிதத்தை காட்டியது யார்??
//அதனை திரிபுபடுத்தி ஜனாதிபதிக்கு வந்த கடிதங்களையெல்லாம் படிக்கும் செல்வாக்கு எனக்கு உள்ளதாகப் கூறுவது வெறும் யாழ்ப்பாணத்து பெட்டிக் கலாச்சாரம்!// வாதம் செய்ய முடியாவிட்டாலோ அல்லது தெரியாவிட்டாலோ பலர் செய்யும் முதலுதவிதான் யாழ்வாதம்; இழம்பிள்ளை வாதமே காணாமல் போனபின் இந்த வாதங்களுக்கு ஓய்வு கொடுக்கபடாதா?
//சந்ததியாரிலிருந்து உமாமகேஸ்வரன் வரை அந்தக் கடிதத்தைப் பார்த்துள்ளனர்…// சாட்சிக்கு ஆத்மாக்களா?? சூப்பர் தொடருங்கள்….
//அள்ளி” விடுதல் என்பன தமிழ் தேசிய போராட்டத்தின் உச்சாணிக் கொள்கைகள் ஆயிற்றே! பல்லியால் விட முடியுமா என்ன?// இருப்பினும் இந்த விடயத்தில் அனைவரும் நந்தாவிடம் பயிற்சி எடுப்பதே சிறந்தது, அள்ளி விடுவது சுயதொழில் புராணம் பாடுகிறார் நந்தா,
//பாதிரிகளின் கபடத்தனங்களை மறைத்து அவர்கள் புலிகளோடு சேர்ந்து // மீண்டும் நந்தாவுக்கு வயித்துவலி ஆரம்பம்;
நந்தா என் பின்னோட்டத்துக்கு உங்கள் பதில் இல்லை; ஆனால் பல்லியின் காலை வாருவதற்க்கான பதில் மட்டுமே உங்க பின்னோட்டம்; இருப்பினும் நாகரிகம் கருதி அதுக்கான பதிலை என் அறிவுக்கு எட்டியாபோல் சொல்லியுள்ளேன்,
தொடரும் பல்லி;;;
nantha
டாக்டர் ராஜ சுந்தரம் என்னமோ பல்லிக்கு “உறவினர்” என்ற பாணியில் பல்லி மீண்டும் ஒரு “அள்ளிவிடல்” நடத்துகிறார்! பல்லிக்கு அந்தக் கடிதக் கதையே தெரியவில்லை. டாக்டர் ராஜசுந்தரம் எழுதிய கடிதம் அல்ல அது. அவருக்கும் காந்தீயத்துக்கும் எதிராக கத்தோலிக்க பாதிரிகளும், முன்னை நாள் வவுனியா பாஉ சிவசிதம்பரமும் சேர்ந்து அனுப்பிய “பெட்டிசம்” என்பது பல்லி வழக்கம் போல மறந்து போன விஷயம். அடுத்தது அவர் கடித்தத்தை என்னிடம் காட்ட வாய்ப்பில்லை என்று பல்லி கூறுவதைப் பார்த்தால் பல்லிதான் அவருடைய உறவினரோ அல்லது நண்பரோ? பல்லி போன்றவர்களிடம் காட்ட வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை!
எழுதியதை அரை குறையாக படித்து “பாதிரி” என்றவுடன் எகிறிக் குதிக்கும் பல்லிக்கு “விஷயம்” புரிய பல வருடங்கள் செல்லும்!
palli
//டாக்டர் ராஜசுந்தரம் என்னமோ பல்லிக்கு “உறவினர்” என்ற பாணியில் பல்லி மீண்டும் ஒரு “அள்ளிவிடல்” நடத்துகிறார்// அப்படி இல்லை ஆனால் ஏன் அவர் பல்லிக்கு தெரிந்தவராய் இருக்ககூடாது, நந்தாவுக்கு வட்டுகோட்டையில் இருந்து வாதிக்கான்வரை தெரியும் போது; வவுனியாவில் இருந்த டாக்டரை பல்லி தெரிவது கடினமோ..??
//பல்லிக்கு அந்தக் கடிதக் கதையே தெரியவில்லை.//
திருமணத்தில் (பகலில் கூட) அருந்ததி வெள்ளி காட்டுவார்கள் மணமக்களும் கண்டோம் என தலை ஆட்டுவார்கள். அதில் பல்லிக்கு உடன்பாடு இல்லை புரிகிறதா நந்தா?? இந்த கடிதமும் ஒரு அருந்ததி வெள்ளிதான்;
// டாக்டர் ராஜசுந்தரம் எழுதிய கடிதம் அல்ல அது. அவருக்கும் காந்தீயத்துக்கும் எதிராக கத்தோலிக்க பாதிரிகளும்,//
30வருடத்துக்கு முன்பே இதை சொல்லியிருக்கலாமே; சம்பந்தபட்டவர்கள் இறந்தபின் சொல்வதுக்காய் பொறுமை காத்தீர்களோ??
// முன்னை நாள் வவுனியா பாஉ சிவசிதம்பரமும் சேர்ந்து அனுப்பிய “பெட்டிசம்” என்பது பல்லி வழக்கம் போல மறந்து போன விஷயம்.//
அவரும் உயிருடன் இல்லை என்னும் நம்பிக்கையில் சொல்லுவது தெரிகிறது ;
// அடுத்தது அவர் கடித்தத்தை என்னிடம் காட்ட வாய்ப்பில்லை என்று பல்லி கூறுவதைப் பார்த்தால் // இல்லாத கடிதத்தை எப்படி காட்ட முடியும்??
காந்தியத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் அவர்களை சந்திப்பதில் ஒன்றும் பெரிய கஸ்றம் இல்லை, நந்தாவுக்கு தேவையாயின் அவர்களை அறிமுகம் செய்யலாம் ;
//பல்லிதான் அவருடைய உறவினரோ அல்லது நண்பரோ?// இரண்டுமே இல்லை காந்தியத்தை நேசித்தவன் அம்முட்டுதான்;
//எழுதியதை அரை குறையாக படித்து/ இதைதானே சந்திரராஜா உங்களுக்கு சொல்லுகிறார் பின்னோட்டத்தை கவனமாக படித்துவிட்டு மற்றய
பின்னோட்டத்துக்கு தயாராகுங்கள் என,
//“பாதிரி” என்றவுடன் எகிறிக் குதிக்கும் பல்லிக்கு “// கண்டிப்பாக காரணம் ஒரு சமூகத்தை அவமதிக்கும் எண்ணத்துடன் தாங்கள் வரும்போது அதை சுட்டி காட்ட வேண்டியது ஒரு மனிதனாய் பல்லியின் கடமைதானே?? உங்கள் பிரிவினைவாதம் கேரளாவில் பஸ் ஏறி விமானத்தில் வத்திக்கான் வரை சென்று இன்று கப்பலில் சவுதிக்கு வந்துள்ளது, இதை பல்லி மட்டும் சொல்லவில்லை மனிதநேயம் உள்ள பலர் சொல்லுகிறார்கள்?
// “விஷயம்” புரிய பல வருடங்கள் செல்லும்!// பரவாயில்லை ஆனால் புரியும் என தாங்களே சாறிதழ் தந்துவிட்டீர்கள்? ஆனால் தங்களுக்கோ அதுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்பதுதான் பல்லியின் பலன்;
தொடரும் பல்லி;;
nantha
பல்லிக்கு நான் சந்தித்த நபர்கள் உயிருடன் இல்லை என்பதால் “சாட்சி” சொல்ல வரமாட்டார்கள் என்ற நம்பிக்கை அலை மோதுகிறது. ராஜசுந்தரம் போன்றவர்கள் உயிரோடு இருந்தால் கூட பல்லி போன்றவர்களுக்காக தேசம் நெட்டில் எழுத வரமாட்டார்கள்.
அதுசரி. புளட் இயக்கக்காரர்களில் உயிரோடு உள்ளவர்களை பல்லி தேசம் நெட்டில் எழுத வைத்து எனது தகவலை “பொய்” என்று நிரூபிக்க முடியாதுள்ளது எதனால் என்று புரியவில்லை! இது பல்லிக்கு நான் விடும் சவால்! டாக்டர் ராஜசுந்தரத்தொடு பழகிய “புளட்” காரர்களைக் கொண்டு வந்து பல்லி எழுதாத வரையில் பல்லி இதுபற்றி கதைக்க தேவையில்லை! அப்படி வருபவர்கள் எவராயினும் நந்தாவுக்குத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள்!
தவிர அப்படிக் கடிதம் இல்லை என்பது இந்துக்களை பாதிரிகள் “சாத்தான்கள்” என்று கதறும் கதையே!
//“பாதிரி” என்றவுடன் எகிறிக் குதிக்கும் பல்லிக்கு “// கண்டிப்பாக காரணம் ஒரு சமூகத்தை அவமதிக்கும் எண்ணத்துடன் //
பாதிரிகள் எப்போது “ஒரு சமூகம்” ஆனார்கள்? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்! தமிழ் சமூகம், சிங்கள, முஸ்லிம், என்று சமூகங்கள் உண்டு. அதென்ன “பாதிரி” சமூகம்?
தமிழீழ பிரிவினை தேவை என்று தொடங்கிய பல்லி போன்றவர்கள் இப்போது “பிரிவினை” என்பது …. ஐயகோ!