மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள கிளிசொச்சிப் பகுதிகளில் மக்களை ஏமாற்றி நிதி சேகரிக்கும் நபர்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தென்னிலங்கையிலிருந்து வரும் சில சிங்களம் பேசும் நபர்கள் அநாதைப் பிள்ளைகளுக்கு நிதி சேகரிப்பதாக சில ஆவனங்களைக் காட்டி பணம் பெற்று வருகின்றனர்.
வீடுகளில் ஆண்கள் இல்லாத வேளைகளில் மொழி தெரியாத பெண்கள் இவர்கள் காட்டும் ஆவணங்ளை நம்பி அல்லது, பயம் காரணமாக பணத்தைக் கொடுத்து வருகின்றனர். கடந்த சிலதினங்களாக கிளிநொச்சி வீடுகளுக்கு வந்த நபரொருவர் தென்னிலங்கையிலுள்ள அநாதை விடுதி ஒன்றிற்கு நிதி சேர்ப்பதாகவும், அதற்கான அனுமதியை படையினர் தந்துள்ளதாகவும் தெரிவித்து, கையெழுத்திட்ட சில ஆவணங்களைக் காட்டி பணம் சேகரித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.