வன்னிப் பிரதேசத்தில் பெற்றோரின் பராமரிப்பற்ற நிலையில் உள்ள 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண அளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரவித்துள்ளார். கிளிநொச்சி. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட இச்சிறுவர்கள் வடமாகாணத்திலுள்ள அங்கீகாரம் பெற்ற நான்கு சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட 1200 சிறுவர்களும் எதிர்வரும் september மாதத்திலிருந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நான்கு சிறுவர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளனர். 12 வயதுக்கட்பட்ட இச்சிறுவர்களின் பாராமரிப்புச் செலவிற்கான நிதியை வடமாகாணசபையின் ஊடாக ஒதுக்கத் தீர்மானித்துள்ளதாக வடமகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
(படத்திலுள்ள குழந்தைகள் மார்ச் 2010ல் படம் எடுக்கப்பட்ட போது 10 மாதங்களையே கடந்திருந்தன. இக்குழந்தைகள் யுத்தத்தின் காரணமாக அனாதரவானவர்கள். தற்போது வவுனியாவில் உள்ள சிறி அகிலாண்டேஸ்வரி அருளகத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான உதவிகளை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.)
இது இவ்வாறிருக்க. வன்னியில் நடைபெற்ற போரினால் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறார்களின் தொகை மேலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.