வடக்கில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக வன்னியில் மீள்குடியமர்ந்த மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். வீடுகள் அழிவுற்ற நிலையில் தங்கள் காணிகளில் கூடாரங்களை அமைத்து வசித்து வருபவர்களும், கூரைகள் கதவுகளற்ற நிலையில் சேதங்களுடன் காணப்படும் சுவர்களுக்குள் தங்கியிருக்கும் மக்களும் இம்மழை காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தற்போது இடைக்காலத்தில் பெய்யும் மழையினால் இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மாதங்களில் பருவ மழை பெய்யத்தொடங்கும் இப்பாதிப்புகள் அதிகமாகவிருக்கும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அழிவுற்ற வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடுகளை அமைக்கு பணிகளும் சேதமுற்ற வீடுகளை புனரமைப்பதற்கான உதவிகளும் மிகவும் தாமதமாகி வருகின்றமையினால் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் தங்கள் சிறு பிள்ளைகளோடு என்ன செய்வதென்று தெரியாமலுள்ளனர்.
பலர் கடன்பட்டு அல்லது தங்கள் நகைகளை விற்று வீடுகளைப் புனரமைக்கின்ற போது அவ்வாறு புனரமைக்கப் படுகின்ற வீடுகளுக்கு உதவிகள் வழங்கப்பட மாட்டாது என உதவி புரியும் நிறுவன உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.