பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு வந்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரிட்டனிலிருந்து விமானத்தில் வந்திறங்கிய யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவநேசன் (வயது 30) என்பவரே பெரிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இவர் 12 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோரியிருந்தார் எனவும். இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இவரை நாடு கடத்துவதற்காக ஒரு வருடத்திற்கு முன்னர் இவர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் இலங்கைக்குத் திரும்பிச் செல்வதில் எதுவித பிரச்சனைகளும் இல்லை எனவும், இவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம் இவருக்கு வாக்குறுதி வழங்கியிருந்ததாம். இதனையடுத்து இவர் இலங்கைக்குத் திரும்பிச்செல்ல சம்மதித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.