சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

பெருந்தோட்டப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டுத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

sri-lanka-upcountry.jpgநுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தோட்டப்பகுதி பாடசாலை மாணவர்களின் நலன் கருதி கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

பொகவந்தலாவை தெரேசியா, கிலானி மோறார் ஆகிய தோட்டங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

தொழிலாளர் தேசிய சங்கத்தின் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் கடந்த வருடம் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு உசாத்துணை நூல்களை நாம் வழங்கிய போது பெரும் வரவேற்புக் கிடைத்தது. உயர்தர மாணவர்கள் மேலதிக அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் வழங்கிய இந்நூல்கள் தமக்குப் பெரும் பயனை அளித்ததாக எமக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய கல்வி மேம்பாட்டுத்திட்டங்களை நாம் எவ்வித அரசியல் தொழிற்சங்கப் பேதங்களுமின்றியே மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறு நூல்களை வழங்கும் திட்டத்தினை இவ்வருடமும் நாம் மேற்கொள்ளவுள்ளோம். இதற்குப் பாடசாலை அதிபர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

இன்று வறுமையினால் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதில் கூட மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத மாணவர்களின் எண்ணிக்கை தோட்டப்பகுதிகளில் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவுவதற்கு தொழிலாளர் தேசிய சங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதோடு மலையகத்தின் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான உதவிகள் மலையக மக்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவியாக அமையும்.

இந்திய மருத்துவ குழு திருகோணமலை சென்றுள்ளது

india-dr.jpgஅமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் இலங்கை வந்துள்ள இந்திய மருத்துவ உதவிக் குழு திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையைச் சென்றுள்ளது.  இலங்கையின் வடக்கே இடம்பெற்றுவரும் மோதல்களினால் இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கான மருத்துவ வசதிகளை வழங்குவது 52 பேர் கொண்ட இந்திய மருத்துவ குழுவின் நோக்கம்.

எட்டு விசேட மருத்துவர்கள், சத்திர சிகிச்சை நிபுணர்கள் உட்பட சகல ஆளணி வசதிகளைக் கொண்டு சுயமாக இயங்கக்கூடியது இந்த மருத்துவக்குழு என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழு தன்னுடன் சகல மருத்துவப் பொருட்கள் முதற்கொண்டு, சத்திரசிகிச்சை உபகரணங்கள் வரையான சகல வசதிகளையும் எடுத்துவந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆளணி உபகரணங்கள் யாவும் சுமார் 20 லொறிகளில் ஏற்கனவே புல்மோட்டைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அநேகமான இவ்வார இறுதிக்கு முன்பதாக இவர்கள் தம்முடைய சேவையை ஆரம்ப்பிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. டாக்டர் வசந்த்குமார் தலைமையிலான இந்த இந்திய மருத்துவக்குழு இன்று காலை புல்மோட்டைக்குப் புறப்படுமுன்னதாக கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் இலங்கை சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்களை வரவேற்று வழியனுப்பிவைத்தார்.

இந்த நிகழ்வின் போது இந்தியாவினால் வழங்கப்பட்ட சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவப் பொருட்களையும் இந்தியா இலங்கைக்கு வழங்கியது. இந்தக் குழு ஒரு மாத காலத்திற்கே இங்கு தங்கியிருக்குமென்று தற்போதைக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றாலும் தேவைக்கேற்ப காலம் நீடிக்கப்படலாம் என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

பொதுமக்கள், அதிமுக்கியஸ்தர்கள் பங்குபற்றும் கூட்டங்களுக்கு பாதுகாப்பு முன் அனுமதி கட்டாயம்

udaya_nanayakkara_.jpgபொது மக்கள் பங்குபற்றும் பொது வைபவங்கள், பொதுக் கூட்டங்களுக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிமுக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை பாதுகாப்பு அமைச்சு நேற்று முதல் அமுல்படுத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்ற அதேசமயம் அதன் உள்ளூர் ஏற்பாட்டாளர்கள் அந்தக் கூட்டம் தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய மீலாதுந் நபி விழாவின் போது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து அரசாங்கமும், பாதுகாப்பு அமைச்சும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியையும், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கும் பட்சத்தில் அந்த வைபவம் சிறப்பாக நடைபெற்று முடிவதற்குத் தேவையான போது பாதுகாப்புகளை வழங்க முடிவதுடன், இது போன்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் பேரழிவுகளிலிருந்து முன் கூட்டியே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.

தமிழ், சிங்கள புத்தாண்டை எதிர்நோக்கியுள்ள அதேசமயம் அதனையொட்டிய பல்வேறு முக்கிய சமய நிகழ்வுகள், விளையாட்டு வைபவமும் இடம்பெறவுள்ளன. இதன் போதும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¤லுகல்லே தெரிவித்தார்.

தேசிய மட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள், அமைச்சர்கள் மற்றும் அதி முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு மாத்திரமின்றி பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடும் கூட்டம் மற்றும் நிகழ்வுகளின் போதும், ஊர்வலங்களின் போதும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

வன்னி மனிதாபிமான படை நடவடிக்கைகள் மூலம் புலிகள் முற்றாக முடக்கி விடப்பட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்துள்ள புலிகள் இது போன்ற தாக்குதல்களை நடத்தி பதற்ற நிலைமைகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கலாம். இவற்றைக் கருத்திற் கொண்டும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் வகையிலேயே இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இடிமின்னலுடன் பலத்த காற்று வீசும்; நிக்கவெரட்டியவில் 10 வீடுகள் சேதம்

climate.jpgநீரேந்து பகுதிகள் உட்பட மேல், மத்திய, சப்ரகமுவ, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இடியும் கடும் காற்று வீசும் எனவும் காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

கடும் காற்று வீசியதன் காரணமாக நிக்கவெரட்டிய பகுதியில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. வீட்டு கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதோடு சில இடங்களில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வரட்சியான காலநிலை காணப்பட்டதால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதிகளில் போதியளவு மழை பெய்து வருவதாக காலநிலை அவதான நிலையம் கூறியது.

தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கடும் காற்று வீசும் அபாயம் உள்ளது எனவும் அறிவிக்கப்படுகிறது.

இணையத்தளங்கள், பத்திரிகைகளை அழித்தொழித்துவிடும் சாத்தியம்

computer.jpgபத்திரிகை கள் இணையத்தளத்தில் தமது பதிப்புகளை வெளியிடும் நிலைமைக்கு தம்மை மாற்றிக்கொள்ளாவிடின் நாளடைவில் அழிந்தொழிந்துவிடும் சாத்தியமுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் பேராசிரியரான அலன் நையிற்றால் நடத்தப்பட்ட இணையத்தளமூடான ஆய்வொன்றின் பிரகாரம் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு தொடர்பாக பேராசிரியர் அலன் நைற் தெரிவிக்கையில்; இருநூறுக்கும் மேற்பட்ட முதலாண்டு ஊடகவியல் மாணவர்கள் சர்வதேச ரீதியிலான இந்த இணையத்தள ஆய்வில் செய்தித்தாள் வாசிப்பது தொடர்பான தமது கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

இந்த இளம் ஊடகவியலாளர்கள் 21 வயதிற்கு குறைவானவர்களாக இருப்பதுடன் அவர்களில் 90 வீதமானோர் பத்திரிகை வாசிப்பதை விரும்பவில்லை. ஆனால் ஊடகவியலாளர்களாவதற்கு விரும்புகின்றனர். அத்தொகையில் 60 வீதமானவர்கள் வாரத்திற்கு ஒருதடவையோ அல்லது அதற்குக் குறைவாகவோ பத்திரிகை வாசிக்கின்றனர்.

ஆனாலும் 95 வீதமானவர்கள் செய்திகள் தொடர்பில் ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். ஆனால் இவர்களுக்கு வர்த்தகத் தொலைக்காட்சிச் சேவைகளின் செய்திகளே மூலமாக உள்ளதுடன் 50 வீதமானோர் ஒரு நாளைக்கு ஒருதடவையேனும் தொலைக்காட்சிச் செய்தியை பார்க்கின்றனர்.  தொலைக்காட்சிச் செய்திச் சேவைக்கு அடுத்தபடியாக இணையத்தளங்களூடான செய்தியினை இம்மாணவர்கள் விரும்பிப்பார்க்கின்றதுடன் கூகுள் (Google) நைன்ஸ்மென் (Ninesmen) பேஸ்புக் (Face book) விக்கி பீடியா (wikipedia) ஆகிய தளங்கள் பிரபலமானவையாகவும் உள்ளன.

computer.jpgஇதன் மூலம் ஊடகவியல் கற்கைநெறியைப் பயிலும் மாணவர்கள் கூட பத்திரிகைகளை வாசிப்பதில்லைபென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடி, இணையத்தளங்களில் பிரசுரிப்பதற்கான விளம்பர வருமானங்களின் இழப்பு ஆகியவற்றால் பத்திரிகைக்குள்ள அச்சுறுத்தலைவிட இவ்விடயம் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது.

இந்நிலையில் ஊடகவியலாளர்களே எதிர்காலத்தில் பத்திரிகைகளை வாசிக்காவிடில் பத்திரிகைகளை வாசிப்பது யாரென அலன் நைற் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் வீஜேசேகரவின் உடல்நிலை குறித்து எதுவும் கூற முடியாது : தேசிய வைத்தியசாலை பணிப்பாளர்

mahinda-wijayaratna.jpgஅக்குரஸ்ஸ கொடபிட்டிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் மஹிந்த விஜேசேகரவுக்கு வழங்கப்பட்டிருந்த செயற்கை சுவாசம் அகற்றப்பட்டுள்ள போதிலும், அவரது உடல் நிலை குறித்த சரியான தகவலை வெளியிட முடியாது என கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.

அமைச்சரது தலையின் இடது பக்கத்தில் பலமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு நான்கு மணி நேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, அமைச்சர் மஹிந்த விஜேசேகரவைப் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குத் திடீரென விஜயம் செய்திருந்தர். அமைச்சரின் உடல் நிலைமைகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, உறவினர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

ஒபாமாவும், கார்டன் பிரவுனும் தன்னை தொலைபேசியில் பாராட்டினார்கள் என்று ஜெயலலிதா சொல்லிக் கொள்ளவில்லை. – கருணாநிதி அறிக்கை

jayalalitha.jpg இலங்கை பிரச்சனைக்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார்.  உண்ணாவிரதம் முடிந்ததும் ஜெயலலிதா ’2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது வேடிக்கை பார்த்த மத்தியஅரசு, நான் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று அறிந்தவுடன், அதே நாளில் இலங்கைத் தமிழர்களுக்கு 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் விமானம் மூலம் அவசரம் அவசரமாக அனுப்பியுள்ளது’ என்று தெரிவித்தார்.இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை  வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது வேடிக்கை பார்த்த மத்திய அரசு என்று கூறும் ஜெயலலிதா, 2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? 2008-ம் ஆண்டிலிருந்து தூங்கி விட்டு, இப்போது தேர்தல் வருகிறது என்றதும், அவசரம் அவசரமாக 2009 ஆம் ஆண்டிலேதானே அவரே உண்ணாவிரதம் இருக்க முன் வந்திருக்கிறார்.
 
karunanithi.jpgஅது மாத்திரமல்ல, ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் என்றவுடன், உடனடியாக 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தயார் செய்து, விமானமும் ஏற்பாடு செய்து அன்றைய தினமே ஒரு அரசின் சார்பில் அனுப்புவது என்பது சாத்தியக் கூறான காரியமா? ஜெயலலிதா இவ்வாறு தன்னால்தான் என்று கூறிக் கொள்வது நல்ல நகைச்சுவையாக இல்லையா?

இதற்கு முன்பே இலங்கைப் பிரச்சினைக்காக மத்திய வெளி உறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு ஒரு முறை வந்ததும், அதன் பிறகு அனைத்துக் கட்சி தலைவர்கள் என் தலைமையில் டெல்லி சென்று பிரதமரைப் பார்த்து, பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து,

அவர் இலங்கை செல்வதில் தாமதம் ஏற்பட்டதால், தமிழகச் சட்டபேரவையில் இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் நானே ஒரு தீர்மானத்தை முன் மொழிந்து அனுப்பிய பிறகு, பிரணாப்முகர்ஜி இலங்கைக்கு சென்றதும், அதன் பிறகு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதும்-எல்லாமே எப்படி நடந்தது?

அவருடைய உண்ணாவிரதத்திற்குப் பிறகு தான் மத்திய அரசு செயல்பட்டது என்றால் இவ்வளவு காரியங்களும் நடக்க யார் காரணம்? ஜெயலலிதா ஓய்வெடுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது தானா? மேலும் ஜெயலலிதா அவரது அறிக்கையில் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டதன் காரணமாக-மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு இந்த உதவியை இப்போதாவது செய்திருக்கிறது என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டிருக்கிறார்.
 
மத்திய அரசுதான் நேற்றைய தினம் மருந்து பொருட்களை அனுப்பியது. தமிழக அரசின் சார்பில் ஜெயலலிதா தூங்கிக் கொண்டிருந்த நாட்களில் – 2008-ம் ஆண்டு நவம்பர் திங்களிலேயே முதல் கட்டமாக 2000 டன் எடையுள்ள அரிசி, பருப்பு, டீத்தூள், சர்க்கரை போன்ற உணவுப் பொருட்கள், குளிக்கும் சோப்பு, துவைப்பதற்கான சோப்பு, பற்பசை, வேட்டி, கைலி, சேலை, பெண்கள் அணி யும் ஆயத்த ஆடை, துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகிய நிவாரணப் பொருட்கள் சுமார் 80 ஆயிரம் குடும்பங் களுக்கு வழங்குவதற்காக தனித்தனியே சிப்பங்களாக அனுப்பி வைக்கப்பட்டதே, அதற்கெல்லாம் ஜெயலலிதா தான் காரணமா? இவர் மார்ச் 2009-ல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு, உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிந்து கொண்டு செய்யப்பட்டக் காரியமா?
 
ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமே செய்யாமல் இருந்தபோது தான் 22-2-2009 அன்று பிரதமருக்கு நான் அவசரக் கடிதம் எழுதினேன்.

அந்தக் கடிதத்தில், இலங்கையில் தற்போது நிலைமை மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அனைவரும் உடனடியாக மறுவாழ்வு உதவிகள் செய்ய வேண்டும். மனிதாபிமான அடிப்படையிலாவது இலங்கைக்கு உடனடியாக மத்திய அரசு மருத்துவ உதவிகளை அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
மத்திய அரசு எடுக்கும் இவ்வகை நடவடிக்கைக்கு தமிழக அரசு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிடவும், அனுபவ மிக்க மருத்துவர்களையும் தேவையான மருந்து பொருட் களையும் மருத்துவ உபகரணங்களையும் அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறது என்று எழுதியுள்ளேன். அது ஏடுகளிலும் வந்துள்ளது.
 
இன்னும் சொல்லப்போனால் இந்த 2000 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்டு, கப்பலிலே செல்லக் காத்திருந்த நேரத்தில் நானே நேரில் சென்று இவைகளையெல்லாம் பார்த்தேன்.

அப்போது செஞ்சிலுவை சங்கத்தின் பன்னாட்டுக் குழுமத்தின் அலுவலர் தாமஸ்ரீஸ் என்பவரும், மத்திய அரசின் வெளி உறவுத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஐ.எம்.பாண்டேவும், தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் உடன் இருந்தார்கள்.

அந்த நிவாரணப் பொருட்களை நேரில் பார்த்த தாமஸ் ரீஸ், அந்தப் பொருட்கள் எல்லாம் நல்ல தரமுடன் உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து, அந்தச் செய்தி அப்போதே ஏடுகளில் வெளி வந்தது.
 
இந்த நிவாரணப் பொருட்கள் 100 கண்டெய்னர்களில் சுங்க அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின் ஏற்றப்பட்டு 13.11.2008 அன்று இரவு சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, 15.11.2008 அன்று காலை 7 மணி அளவில் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது.

அந்தப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்ததோடு மாத்திரமல்லாமல், அவைகள் முறையாகவும், ஒழுங்காகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட தொடர்ந்து மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, அவர்கள் இலங் கையிலே உள்ள இந்தியத் தூதரகத்தோடு தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை யெல்லாம் செய்து – அந்தப் பொருட்கள் முறையாக விநி யோகிக்கப்படுவதாகவும், தமிழர்கள் அதனைப் பெற்றுச் செல்கிறார்கள் என்றும் ஏடுகளில் எல்லாம் செய்தி வந்தபோது ஜெயலலிதா எந்த உலகத்திலே இருந்தார்?

யாழ்ப்பாணம் பிஷப் டாக்டர் தாமஸ் சவுந்தரநாயகம் எழுதிய கடிதத்தில், இந்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்ட பொட்டலங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைத்தது. ஒரு வாரத்திற்குத் தேவையான பொருள்கள் அதில் இருந்தன. சயைலுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன.

தமிழக மக்களிடமிருந்து போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் வந்த இந்த நன்கொடை பொருள்களை இலங்கைத் தமிழர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

தமிழகத்திலிருந்து மக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காக அனுப்பப்பட்ட துணிகளைக் கொண்ட லாரிகள் வரிசையாகச் சென்று கொண்டிருந்ததை நானே நேரில் கண்டேன். கடைகளின் மூலமாக வாங்குவதற்கு வசதியற்ற நிலையிலே உள்ள மக்களுக்கு இவை அனைத்தும் மிகவும் தேவையானவையாகும் என்று தெரிவித்து நாளேடுகளில் வந்ததை ஜெயலலிதா எப்போதும் போல படிக்கவில்லையா?
 
இலங்கை தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதற்கு தமிழக மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், உலக அளவில் வரவேற்பு இருப்பதைக் கண்டு கருணாநிதி கதி கலங்கி ஆடிப்போயிருப்பதையே அவருடைய அறிக்கை உணர்த்துகிறது. -ஜெயலலிதா

ஆம். கதி கலங்கித்தான் போய் விட்டேன். உலக அளவில் வரவேற்போம். முதலில் இப்படித்தான் உலகஅளவில் தனக்கு விருது கொடுப்பதாக ஒரு புரளியைக் கிளப்பினார். நல்ல வேளை, ஒபாமாவும், கார்டன் பிரவுனும் தன்னை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள் என்று சொல்லிக் கொள்ளவில்லை.

ஏதோ இரண்டு இடங்கள் நாடாளுமன்றத்தேர்தலில் கிடைக்கும் என்பதற்காக இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும், விடு தலைப்புலிகள் பற்றி ஜெயலலிதாவிற்கு நேர் எதிரான கொள்கையுடைய வைகோவும் அந்த உண்ணா விரதத்தை வரவேற்று விட்டார்கள் என்றதும், உலகமே வரவேற்கிறதாம். நான் கதிகலங்கி விட்டேனாம். என் செய்வது? “கதாநாயகி நடிகை”காமெடி நடிகையாக ஆகிவிட்டார். கஷ்டகாலம்.
 
உண்டியல் மூலம் வசூலான நிதி அனைத்தும் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வசூலான மொத்தப் பணத்திற்கும் வரைவோலை எடுக்கப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்படும். -ஜெயலலிதா அறிக்கை.
 
அமெரிக்காவிலிருந்து யாரோ வரைவோலை அனுப்பினார்கள் என்றும், யார் அனுப்பியது என்றே தனக்கு தெரியாது என்றும், இருந்தாலும் அதனை தன் கணக்கிலே வரவு வைத்துக் கொண்டதாகவும் உலகத்திற்கு சொன்ன யோக்கிய சிகாமணி அல்லவா ஜெயலலிதா- தனிப்பட்ட ஒரு நபரோ, ஒரு நிறுவனமோ வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய செஞ்சிலுவை சங்கம் மூலமாக மத்திய அரசின் அனுமதியில்லாமல் எந்தத் தொகையும் அனுப்ப இயலாது என்ற உண்மையைக்கூட தெரிந்து கொள்ளாமல், இவர் அறிக்கை விடுத்து உண்டியல் வசூல் செய்துள்ளார்.

எப்படியோ போகட்டும். நாம் அரசின் சார்பாக தொகையாக கூட அல்ல, வரைவோலை மூலமாக நிதி திரட்டிய போது, அதனை ஏதோ என் குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டதாக அறிக்கை விட்டு விட்டு, தற்போது அவரே உண்டியல் வைத்து நிதி சேர்ப்பது முறைதானா என்றுதான் நாம்  கேட்டிருந்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

நான்கிற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணை

sri-lanka-police.jpgமாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பாக நான்கிற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. விடுதலைப்புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளதாக படையினரும் பொலிஸாரும் தெரிவிக்கும் நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த விசாரணைகளை நடத்தும் நான்கிற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் குழுக்களும் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை நடத்துவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.டபிள்யூ.பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளை நடத்துவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவுப் பொலிஸாரது (சி.ஐ.டி.) ஒத்துழைப்பைக் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தத் தாக்குதல் நடைபெற்ற போது அதனை நேரில் பார்த்ததாக கூறப்படுவோரிடம் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்னர் அப்பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் வந்ததாகவும் அதிலிருந்தவர்களின் வயிற்றுப் பகுதி சந்தேகத்திற்கிடமாயிருந்ததாகவும் அதைப் பார்த்துவிட்டு அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே அதுபற்றி பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மறித்த போது அதில் ஒன்று அங்கு நிறுத்தப்படவே மற்ற மோட்டார் சைக்கிள் அப்பால் சென்ற சில செக்கன்களில் பாரிய குண்டுச் சத்தம் கேட்டதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விஷேட பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் பல்வேறு தரப்புகளிடமும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டணங்களை குறைக்காவிடின் தனது வாடிக்கையாளரை இழக்க வேண்டிய நிலை ரெலிகொம் சேவைக்கு ஏற்படலாம் – தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

lorries1.jpgஸ்ரீலங்கா ரெலிக்கொம் தனது வாடிக்கையாளரில் சிலரை இழக்க வேண்டிய நிலை சிலசமயங்களில் ஏற்படலாமென அதன் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொலைபேசி அழைப்புக்கான கட்டண அறவீட்டில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வரிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடுமென தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நிலையான தொலைபேசி அழைப்புக்காக இவ்வருடம் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட 10 சதவீத வரி அதிகரிப்பு மற்றும் தேச நிர்மாணத்துக்காக பெப்ரவரி முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சதவீத வரி அதிகரிப்பும் வாடிக்கையாளரை மிகவும் பாதித்துள்ளதாக ரெலிக்கொம் சேவைகள் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் உடனடியாக தனது தொலைபேசி அழைப்புக் கட்டணங்களைக் குறைக்காவிடின் ஏனைய தொலைபேசி சேவைகளுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்படுமென தொழிற்சங்கத்தின் தலைமைச் செயலாளர் பி.எஸ்.பி.ஜெயசுந்தர தெரிவித்தார்.

தற்போது வாடிக்கையாளரை கவரும் வகையில் பல தொலைபேசி நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் தனது தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை குறைக்காவிடின் எதிர்காலத்தில் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படுமென அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிர்வாகமும் அதன் தொழிற்சங்கங்களும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தன.

ஆனால், தொலைத் தொடர்புகள் ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழு இக்கட்டண குறைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

வாடிக்கையாளரைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் ரெலிக்கொம் தனது கட்டணங்களைக் குறைப்பதற்கான தீர்மானத்தினை எடுக்கும் சந்தர்ப்பத்தில் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிவிப்பு எவ்வித பிரயோசனமும் இல்லாத ஒரு தீர்மானமாகும்.

இந்தப் போக்கு தொடர்ச்சியாக அனுமதிக்கப்படுமாயின் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் வீழ்ச்சி அடைவதை தடுக்க முடியாது போய்விடுமெனவும் ஜெயசுந்தர மேலும் தெரிவித்தார்.

நபிகளாரின் முன்மாதிரி எமக்கு எடுத்துக்காட்டாகும் – மீலாத் தின செய்தியில் பிரதமர்

pmsrilanka.jpg‘சமாதானத்தின் பக்கம் முழுமை யாகத் திரும்புங்கள்’ என்ற அல்- குர்ஆனின் கட்டளைக்கு ஏற்ப சகோதர த்துவத்துடனும், சமாதானத்துடனும் வாழ்ந்து காட்டிய முஹம்மத் (ஸல்) அவர்களின் முன்மாதிரி எமக்கோர் எடுத்துக் காட்டாகும் என பிரதமர் ரத்ன சிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மீலாதுன் நபி விழாவின் நிமித்தம் விடுத்துள்ள செய்தியிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அச்செய்தியில் மேலும் கூறப்பட்டிரு ப்பதாவது:- இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் மாற்று மதத்தலைவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வது சமாதானமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ வழி வகுக்கும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நீங்கி அமைதி, சமாதானம் ஏற்படவென முஸ்லிம்கள் இந்நாளில் பிரார்த்த னையில் ஈடுபட வேண்டும். முஹம்மத் (ஸல்) அவர்களின் வழி காட்டல்களை எடுத்து நடப்பதன் மூலம் மனிதா பிமானமும் சுபீட்சமும் நிறைந்த ஒரு நாட்டை கட்டியெழு ப்ப முடி யும் என்றும் அச் செய்தியில் தெரிவித்துள்ளார்.