மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பாக நான்கிற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. விடுதலைப்புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளதாக படையினரும் பொலிஸாரும் தெரிவிக்கும் நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த விசாரணைகளை நடத்தும் நான்கிற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் குழுக்களும் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை நடத்துவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.டபிள்யூ.பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளை நடத்துவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவுப் பொலிஸாரது (சி.ஐ.டி.) ஒத்துழைப்பைக் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்தத் தாக்குதல் நடைபெற்ற போது அதனை நேரில் பார்த்ததாக கூறப்படுவோரிடம் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்னர் அப்பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் வந்ததாகவும் அதிலிருந்தவர்களின் வயிற்றுப் பகுதி சந்தேகத்திற்கிடமாயிருந்ததாகவும் அதைப் பார்த்துவிட்டு அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே அதுபற்றி பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மறித்த போது அதில் ஒன்று அங்கு நிறுத்தப்படவே மற்ற மோட்டார் சைக்கிள் அப்பால் சென்ற சில செக்கன்களில் பாரிய குண்டுச் சத்தம் கேட்டதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விஷேட பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் பல்வேறு தரப்புகளிடமும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
kumar
பிரபாகரனின் ……………………………… ஆக அவரது சுயநலத்ததுக்காக எங்ஙள் ஒட்டு மொத்த சமூகத்தையும் பலிக்கடாவாக ஆக்கி வைத்துக் கொண்டு இருக்கிரார். ஏமாந்து விடாவீர்கள் தமிழர்களே