‘சமாதானத்தின் பக்கம் முழுமை யாகத் திரும்புங்கள்’ என்ற அல்- குர்ஆனின் கட்டளைக்கு ஏற்ப சகோதர த்துவத்துடனும், சமாதானத்துடனும் வாழ்ந்து காட்டிய முஹம்மத் (ஸல்) அவர்களின் முன்மாதிரி எமக்கோர் எடுத்துக் காட்டாகும் என பிரதமர் ரத்ன சிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மீலாதுன் நபி விழாவின் நிமித்தம் விடுத்துள்ள செய்தியிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அச்செய்தியில் மேலும் கூறப்பட்டிரு ப்பதாவது:- இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் மாற்று மதத்தலைவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வது சமாதானமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ வழி வகுக்கும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நீங்கி அமைதி, சமாதானம் ஏற்படவென முஸ்லிம்கள் இந்நாளில் பிரார்த்த னையில் ஈடுபட வேண்டும். முஹம்மத் (ஸல்) அவர்களின் வழி காட்டல்களை எடுத்து நடப்பதன் மூலம் மனிதா பிமானமும் சுபீட்சமும் நிறைந்த ஒரு நாட்டை கட்டியெழு ப்ப முடி யும் என்றும் அச் செய்தியில் தெரிவித்துள்ளார்.