முல்லைத்தீவு சாலைப் பிரதேசத்தில் படையினருடனான மோதலில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர் ஒருவரிடமிருந்து உலக உணவுத்திட்ட நிறுவனம் வழங்கிய அதி உயர்ந்த போஷாக்கு கொண்ட பீ.பி. 100 பிஸ்கட் பெக்கட் ஒன்றை படையினர் கண்டெடுத்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இவரிடமிருந்து ரி. 56 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்களும் மூன்று வரைபடங்களும் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26.01.2008 இல் மதவச்சி சோதனை முகாமில் வவுனியா நோக்கிச் சென்ற லொறியொன்றில் தேடுதல் நடத்திய பொலிஸார் 39000 கிலோ கிறேம் அதி உயர்ந்த போஷக்கு கொண்ட பீ.பி. 100 பிஸ்கட் பெக்கட்டுக்களைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அனுப்பப்பட்ட பிஸ்கட் தொகைகள் புலிகளைச் சென்றடைந்திருக்கலம் என்ற சந்தேகம் இப்பேது ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.