நீரேந்து பகுதிகள் உட்பட மேல், மத்திய, சப்ரகமுவ, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இடியும் கடும் காற்று வீசும் எனவும் காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
கடும் காற்று வீசியதன் காரணமாக நிக்கவெரட்டிய பகுதியில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. வீட்டு கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதோடு சில இடங்களில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வரட்சியான காலநிலை காணப்பட்டதால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதிகளில் போதியளவு மழை பெய்து வருவதாக காலநிலை அவதான நிலையம் கூறியது.
தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கடும் காற்று வீசும் அபாயம் உள்ளது எனவும் அறிவிக்கப்படுகிறது.