அக்குரஸ்ஸ கொடபிட்டிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் மஹிந்த விஜேசேகரவுக்கு வழங்கப்பட்டிருந்த செயற்கை சுவாசம் அகற்றப்பட்டுள்ள போதிலும், அவரது உடல் நிலை குறித்த சரியான தகவலை வெளியிட முடியாது என கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.
அமைச்சரது தலையின் இடது பக்கத்தில் பலமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு நான்கு மணி நேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, அமைச்சர் மஹிந்த விஜேசேகரவைப் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குத் திடீரென விஜயம் செய்திருந்தர். அமைச்சரின் உடல் நிலைமைகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, உறவினர்களுக்கு ஆறுதலும் கூறினார்.