இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நேற்றைய தினம் (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் மணக்கெடுக்கப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சில தேர்தல் தொகுதிகளினுடைய முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது வன்னி தேர்தல் மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு ,
இலங்கை தமிழரசுக்கட்சி – 22492
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 8307
ஐக்கிய மக்கள் சக்தி – 6087
ஐக்கிய தேசியக் கட்சி – 517
ஈழமக்கள் ஜனநாயக கட்சி- 3694
வன்னி தேர்தல் மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின்படி, இலங்கை தமிழரசு கட்சி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.