இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நேற்றைய தினம் (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சில தேர்தல் தொகுதிகளினுடைய முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது மாத்தறை மாவட்டத்தினுடைய பல தேர்தல் தொகுதிகளினுடைய முடிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளன. அவற்றினுடைய நிலவரம் வருமாறு…
மாத்தறை – கம்புருபிட்டிய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 45,783
ஐக்கிய மக்கள் சக்தி – 7,512
தேசிய மக்கள் சக்தி – 3,749
ஐக்கிய தேசிய கட்சி – 614
மாத்தறை – மாத்தறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 43,260
ஐக்கிய மக்கள் சக்தி – 10,410
தேசிய மக்கள் சக்தி – 7,730
ஐக்கிய தேசிய கட்சி – 1,125
மாத்தறை – தெனியாய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 51,681
ஐக்கிய மக்கள் சக்தி – 11,619
தேசிய மக்கள் சக்தி – 4,332
ஐக்கிய தேசிய கட்சி – 1,783
மாத்தறை – ஹக்மனை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 52,245
ஐக்கிய மக்கள் சக்தி – 8,701
தேசிய மக்கள் சக்தி – 3,777
ஐக்கிய தேசிய கட்சி – 936
இதுவரை வெளியாகியுள்ள மாத்தறை மாவட்டத்தினுடைய தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதிக்கமே தொடர்கின்றது.