பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது போல உருவாக்கப்படும் விம்பங்களில் உண்மையில்லை என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வந்து அமைச்சரானால் மறுநாள் காலை நினைப்பதெல்லாம் நடந்து விடாது. இன்று நம் நாட்டில் டொலர்கள் இல்லை. 2025ஆம் ஆண்டில் கடனை செலுத்த 29 பில்லியன் டொலர் தேவை.
கோட்டாபயவின், மஹிந்தவின் அரசாங்கமோ அல்லது பசில் நாடாளுமன்றத்துக்கு வந்ததால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்றிருக்காமல், நாட்டு மக்களுக்கு முதலில் பிரச்சனைகளை தெரிவிக்க வேண்டும். அப்படி கூறினால், இந்த பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை மக்களிடம் கேட்க முடியும். ஏனென்றால் நாம் அனைவரும் இதை எதிர்கொள்ள வேண்டும். எவரேனும் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக கூறினால், அப்படியில்லை. உண்மை நிலைமை இதுதான் – என்றார்.
2020 Parliament election results
2020 Parliament election results
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்தேர்தலின் முடிவுகளுடைய அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி என்பவற்றுக்கு தேசியப்பட்டியல் ஆசனங்கள் ஒன்று வீதம் கிடைத்திருந்தது. இந்நிலையில் தேசியப்பட்டியல் சார்பாக இரண்டு கட்சிகளும் யாரை பாராளுமன்றம் அனுப்ப உள்ளனர் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இண்டு கட்சிகளுடைய தேசியப்பட்டியல் வேட்பாளர் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செல்வராசா கஜேந்திரன் தேசிய பட்டியலில் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றையதினம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அம்பாறை – நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் சார்பில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலிருந்து ,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – அங்கஜன் ராமநாதன்
இலங்கை தமிழரசு கட்சி – சிவஞானம் சிறிதரன்,எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – டக்ளஸ் தேவானந்தா
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – சீ.வி. விக்னேஸ்வரன்.
திருகோணமலை.
இலங்கை தமிழரசு கட்சி – இரா.சம்பந்தன்.
வன்னி
இலங்கை தமிழரசு கட்சி – சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், எஸ். ஜெயராஜலிங்கம்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – குலசிங்கம் திலீபன்
மட்டக்களப்பு.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)
இலங்கை தமிழரசு கட்சி – சாணாக்கிய ராகுல், கோவிந்தன் கருணாகரன்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – எஸ். வியாழேந்திரன்,
கொழும்பு
ஐக்கிய மக்கள் சக்தி – மனோ கணேசன்.
கண்டி
ஐக்கிய மக்கள் சக்தி – வேலு குமார்
நுவரெலியா
ஐக்கிய மக்கள் சக்தி – பழனி திகம்பரம், வேலுச்சாமி ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன்.
பதுளை
ஐக்கிய மக்கள் சக்தி – வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமார்
ஆகியோர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்களால் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.
இதே நேரத்தில் முன்னைய நாடாளுமன்றங்களில் இருந்த அதே நேரம் புதிய நாடாளுமன்றங்களில் ஆசனங்களை இழந்த தமிழ் வேட்பாளர்களுடைய பெயர் விபரங்கள் வருமாறு …
01. யாழ். தேர்தல் மாவட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சி
- தலைவர் – மாவை சேனாதிராசா
- ஈஸ்வரபாதம் சரவணபவன்
ஐக்கிய தேசியக் கட்சி
- விஜயகலா மகேஷ்வரன்
02. வன்னி மாவட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சி
- சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா
- எஸ். சிவமோகன்
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
- சிவசக்தி ஆனந்தன்
03. திகாமடுல்ல மாவட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சி
- கவிந்தன் கோடீஸ்வரன்
ஐக்கிய மக்கள் சக்தி (ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
- மொஹமட் நசீர்
- எம்.ஐ.எம்.மன்சூர்
தேசிய காங்கிரஸ்
- எம்.மொஹமட் இஸ்மாயில்
அகில இலங்கை தமிழர் மகா சபை
- விநாயகமூர்த்தி முரளிதரன்
04. மட்டக்களப்பு மாவட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சி
- ஞானமுத்து ஶ்ரீநேசன்
- சீனித்தம்பி யோகோஸ்வரன்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
- அலி ஸாஹிர் மௌலானா
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
- அப்துல்லாஹ் மஹ்ரூப்
இவர்களே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளின் உறுப்பினர்களாகவுள்ளனர்.
2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான திருகோணமலை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,
ஐக்கிய மக்கள் சக்தி
எஸ்.எம் தௌபீக் – 43, 759
இம்ரான் மஹ்ரூப் – 39,029
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கபில நுவன் அத்துகோரல – 30, 056
இலங்கை தமிழரசு கட்சி
ஆர்.சம்பந்தன் – 21, 422
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
சிவனேசதுறை சந்திரகாந்தன் – 54,198
இலங்கை தமிழரசு கட்சி
சாணக்யா ராஹுல் – 33,332
கோவிந்தன் கருணாகரன் – 26, 382
ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன
சதாசிவம் வியாழேந்திரன் – 22,218
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அஹமட் செய்னுலாப்தீன் நசீர் – 17,599
அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சிக்கு 3 ஆசனங்களும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவற்றிற்கு தலா 1 ஆசனம் வீதம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி
சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்
எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்
தர்மலிங்கம் சித்தார்த்தன் – 23,840 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
டக்லஸ் தேவனந்தா – 32,146 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
கஜேந்திர குமார் பொன்னம்பலம் – 31,658 வாக்குகள்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
சி.வி விக்னேஸ்வரன் – 21,554 வாக்குகள்
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜக்க்ஷ தனது டுவிட்டர் தளத்தில் தமிழ் மொழியில் பதிவு செய்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் என்னால் முன்வைக்கப்பட்ட “சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கையை மீண்டும் ஒரு முறை உங்கள் சக்தியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வன்னி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டவண்ணமுள்ளன.
அதன் அடிப்படையில் வன்னி தேர்தல் மாவட்டத்தினுடைய விருப்பு வாக்கு நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சிக்கு 3 ஆசனங்களும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றிற்கு தலா 1 ஆசனம் வீதம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் வன்னி மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,
ஐக்கிய மக்கள் சக்தி
ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி
சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்
செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்
யோகராஜலிங்கம் – 15,190 வாக்குகள்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் முழுமையாக வெளியாகி இருக்கின்றன.
அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது.
அதேபோல் ரணிலை பின்னுக்குத்தள்ளி சஜித் தனது வெற்றியை பதிவுசெய்துள்ளார்.
இந்த நிலையில் தமது கருத்தை சஜித் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில்
ஜனநாயக மற்றும் வளமான நாட்டிற்காக சமகி ஜன பாலவேகாவுக்கு (ஐக்கிய மக்கள் சக்தி) அச்சமின்றி வாக்களித்த அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி. என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.