இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நேற்றைய தினம் (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட ஆரம்பித்த நேரம் முதல் தற்போது வரையாக அறிவிக்கப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளுடன் முன்னிலை வகிக்கும் அதே நேரம் இரண்டாவது இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் காணப்படுகின்றன.