இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நேற்றைய தினம் (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சில தேர்தல் தொகுதிகளினுடைய முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது காலி மாவட்டம் ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 42497
ஐக்கிய மக்கள் சக்தி – 8628
தேசிய மக்கள் சக்தி – 2349
ஐக்கிய தேசிய கட்சி – 1332
இதனடிப்படையில் காலி மாவட்டம் ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.