இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நேற்றைய தினம் (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பல தேர்தல் தொகுதிகளினுடைய முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது மாத்தறை மாவட்டத்தினுடைய முழுமையான தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன.
மாத்தறை தேர்தல் மாவட்ட வாக்கு எண்ணிக்கை விபரம் வருமாறு ,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,52,217
ஐக்கிய மக்கள் சக்தி – 72,740
தேசிய மக்கள் சக்தி – 37136
ஐக்கிய தேசிய கட்சி – 7631
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 6,59,587
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 5,00,957
செல்லுபடியான வாக்குகள் – 4,78379
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 22578
இந்த நிலவரங்களின்படி அதிகப்படியான வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியுள்ளது.