அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்

ஊடக அடையாள அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் அவர்களை நேற்று இரவு 8.30 மணியளவில் கைதுசெய்தனர். இவர் ‘மாற்றம்’ பத்திரிகையின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பொரலை கொட்டா வீதியில் வைத்து அவரை இராணுவத்தினர் கைதுசெய்தனர். அப்போது தன்னை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஆவணங்களை பாதுகாப்பு தரப்பிடம் சமர்ப்பித்தும் அவைகளை இராணுவத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோன்று அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையைக் காட்டிய போதும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து இராணுவத்தினர் பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொரலை பொலிஸ் நிலையம் அவரை விசாரணைக்குட்படுத்தி சரிகண்ட போதும் குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் கட்டாயத்தால் ஊடகவியாலாளர் எஸ்.எம். நஜீம் பொரலை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டார்.

இதனையடுத்து ‘மாற்றம்’ பத்திரிகையின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையம் வந்து நிபந்தனைகளின் அடிப்படையில் இரவு 10.30 மணியளவில் விடுவித்துள்ளனர்.

ஊடக அடையாள அட்டை பாதுகாப்புத்தரப்பிடம் காட்டிய போதும் பாதுகாப்புத்தரப்பினர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்தாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டதாக ஊடகவியலாளர் எஸ்.எம். நஜீம் தெரிவித்தார். 

வருண் காந்தி குற்றவாளி – வேறு வேட்பாளரை நிறுத்த பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

20-varun-ganthi.jpgமத உணர்வைத் தூண்டும் வகையில் வருண் காந்தி பேசியது உண்மையே என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவரை தேர்தலில் நிற்க பாஜக தலைமை அனுமதிக்கக் கூடாது என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி. உ.பி. மாநிலத்தில் உள்ள தனது தாயாரின் தொகுதியான பிலிபித்தில் போட்டியிடுகிறார்.

சமீபத்தில் அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக, துவேஷமாக பேசினார். கைகளை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்று அவர் பேசியது மத வெறியைத் தூண்டும் வகையில் அமைந்தது. இதையடுத்து வருண் காந்தி மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் கூறின. இதுதொடர்பான சிடிக்களும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தன் மீதான புகார்களை மறுத்தார் வருண் காந்தி. தனது பேச்சு திரிக்கப்பட்டு விட்டதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வருண் காந்தி மீதான புகார்களை தேர்தல் ஆணையம் ஆராய்ந்தது. இதன் இறுதியில், வருண் காந்தி மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியது உண்மையே என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தனது 10 பக்க உத்தரவில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது: இம்மாத தொடக்கத்தில் வருண் காந்தி பிலிபித் தொகுதியில் பேசிய பேச்சுகள், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான மிகவும் தரக்குறைவான, முற்றிலும் ஏற்க முடியாத பேச்சுகளாக உள்ளன.

மத உணர்வை தூண்டும்வகையில் பேசிய அவர், இந்த தேர்தலில் வேட்பாளராக நிற்க தகுதி அற்றவர். அவர் கோர்ட்டால் தண்டிக்கப்படாத சூழ்நிலையில், அவர் போட்டியிட சட்டப்படி தடை விதிக்க முடியாது என்று தெரியும். எனவே, வருண்காந்தியின் பேச்சில் உள்ள கருத்துகளை அங்கீகரிக்கவில்லை என்று பா.ஜனதா கூறி இருப்பதால், அக்கட்சி நடப்பு பாராளுமன்ற தேர்தலுக்கு வருண்காந்தியை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

வருண் காந்தி குற்றவாளி என்று மட்டுமே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் கோர்ட் மூலமாக அவர் இன்னும் குற்றவாளி என்று சொல்லப்படாததால் அவருக்கு போட்டியிட தடை விதிக்கப்படவில்லை. அதேசமயம், அவரை நிறுத்தக் கூடாது என பாஜகவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், எந்த விதியின் கீழ் தேர்தல் ஆணையம் அறிவுரை கூறியிருக்கிறது என்று தெரியவில்லை. இது ஒரு அறிவுரைதான், உத்தரவு அல்ல என்று கூறினார்.

புலிகளின் ஆட்பதிவுத் திணைக்களம் படையினர் வசம்

wanni_pic.jpgகடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இரணைப்பளை பிரதேசத்தை கைப்பற்றிய படையினர் அங்கு புலிகளின் தலைவரினால் திறந்து வைக்கப்பட்ட தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலமைக் காரியாலயத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த ஆட்பதிவுதிணைக்களத்தை திறந்து வைத்த பிரபாகரன் முதலாவது அடையாள அட்டையை தானே உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கைப்ற்றப்பட்டுள்ள தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து வன்னி குடியிருப்பாளர்கள் பற்றிய சகல தகவல்களையும் படையினர் பெற்றுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி முதல் 50 ஆயிரம் சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை!

_mullai_1.jpgகடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த சனிக்கிழமை வரையில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இருந்து 50,000 சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்து 1164 பொது மக்களோடு மொத்தம் 50 ஆயிரம் பொது மக்கள் கடந்த ஜனவரி முதல் வந்து சோந்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் உணவும் வைத்திய சிகிச்சைகளும் வழங்கப்பட்ட பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில தினங்களில் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார். 

புதுமாத்தளன் பிரதேசத்தில் காயமுற்ற 494 பேர் நேற்று புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்

navy_rescue_civil.jpgமுல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருதரப்பினரதும் தாக்குதலால் காயமடைந்த 494 பேர் நேற்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மூலம் புல்மோட்டை இந்திய வைத்தியர்களின் சிகிச்சை முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த சுமார் 4000க்கும் மேற்பட்டோர் புல்மோட்டைக்கும் திருகோணமலைக்கும் ஏற்கனவே அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் வவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மூலம் 13 ஆவது முறையாக ஏற்றிவரப்பட்ட இக்குழுவில் 152 ஆண்களும் 216 பெண்களும் 126 சிறுவர்களும் அடங்கியிருந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

த.தே.கூட்டமைப்பு – ஜனாதிபதி எதிர்வரும் வியாழனன்று சந்திப்பு

tna.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவிருக்கின்றார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக இதற்கான அழைப்பை இன்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அனுப்பி வைத்துள்ளது.

அலரி மாளிகையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம் பெறும் என்றும் அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு தமக்கு கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் “நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடவே இந்தச் சந்திப்பு என அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக எமது கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி ஆராய்ந்து முடிவு எடுக்கும்”  என்று கூறினார்.

காயமடைந்தோர் மத்தியில் ஆயிரக்கணக்கான அவயவங்களை இழந்தோர் – “சண்டே ரைம்ஸ்’

pullmottaiindiadoctors1.jpgஇலங் கையின் வட, கிழக்கு கடற்கரையில் (முல்லைத்தீவு) காப்பாற்றப்படுவதற்காக காயமடைந்தோர் மத்தியில் ஆயிரக்கணக்கான அவயவங்களை இழந்தோர் காத்திருப்பதாக உதவி வழங்கும் அமைப்புகளை மேற்கோள் காட்டி “சண்டே ரைம்ஸ்’ சனிக்கிழமை தெரிவித்திருக்கிறது.  இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த தமிழ் குடும்பங்கள் ஷெல் தாக்குதல்களுக்கு  அஞ்சி புதுமாத்தளன் கடற்கரையில் வெளியேறுவதற்காக காத்திருக்கின்றனர்.

அப்பகுதியிலிருந்து கடந்தவாரம் காயமடைந்த 460 பேரையும் அவர்களின் குடும்பத்தவர்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றியுள்ளது. இந்த நடவடிக்கைக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓசன்’ கப்பலுக்கு உள்ளூர் மீனவர்களின் மர டிங்கிப்படகுகள் மூலம் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றி வருவதற்காக சனிக்கிழமை இரவு மீண்டும் கப்பல் அப்பகுதிக்கு திரும்பிச் செல்லவிருந்தது.

“நிலமை மிகவும் கவலைக்கிடமானது. தேவையிலும் பார்க்க மிக குறைந்த மட்டத்திலேயே ஆட்களை வெளியே அப்புறப் படுத்தக் கூடியதாக உள்ளது. யார் அதிகளவு காயமடைந்தவர்கள், எவர் சிறியளவு காயமடைந்திருக்கிறார்கள் என்றும் நாம் தீர்மானிக்க வேண்டியுள்ளது’ என்று இலங்கையிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதி சோபி ரோமனன்ஸ் கூறியள்ளார்.

ஷெல், விமானத் தாக்குதல்களாலும் அல்லது மருத்துவ பராமரிப்பு இல்லாமலும் அல்லது உணவு, தண்ணீர் இல்லாமலும் பொதுமக்கள் பலியாவதாக உதவி நிறுவனங்கள் கூறியுள்ளன. அப்பகுதியிலிருந்த இறுதியான ஆஸ்பத்திரியும் மூடப்பட்டுவிட்டது.

புதுமாத்தளனில் ஒரேயொரு மருந்தகத்தில் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகிறது. அங்கு காயமடைந்தவர்கள் தடித்த போர்வைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். மரக்கிளைகளில் கட்டப்பட்டு மருந்து ஏற்றப்படுகிறது. கடற்கரை வழியாக வெளியேற முயற்சிப்போர் தொகை கடந்த வாரம் அதிகரித்திருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

மோதல் பகுதியிலிருந்து வெளியேறிய பொதுமக்களில் சிலர் வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பைச் சேர்ந்த ஹியூகஸ் ரொ போர்ட்ஸே அங்குள்ள ஒரேயொரு வெளிநாட்டு மருத்துவ நிபுணராவார். 960 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் அவர்களில் அநேகமானோர் ஷெல், நிலக்கண்ணி, துவக்குச்சூடு என்பவற்றால் காயமடைந்தவர்கள் என்றும் அவர் சண்டே ரைம்ஸுக்கு கூறியுள்ளார். மூன்று வயது பிள்ளை முதல் ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் காயமடைந்து சிகிச்சையளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். ரயில் சேவை. பூர்வாங்கப் பணிகள் இன்று ஜனாதிபதியால் ஆரம்பம்

mahinda-rajapaksha.jpgயாழ்ப்பா ணத்துக்கான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (23) ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்படுகின்றன. இதன் போது வடக்கிற்கான ரயில் சேவையை திரும்பவும் ஆரம்பிப்பதற்கென தேசிய செயலகமொன்றும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.

கொழும்பு- யாழ்ப்பாணத்துக்கிடையிலான யாழ் தேவி ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கென தேசிய மட்டத்தில் சகல மக்களினதும் பங்களிப்பு பெறப்படவுள்ளது. பொதுமக்களின் உதவியுடன் 34 ரயில் நிலையங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளதோடு யாழ். ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகளை அம்பாந்தோட்டை மக்களும் கிளிநொச்சி ரயில் நிலையத்தை அமைக்கும் பணிகளை மாத்தறை மக்களும் பொறுப்பேற்கவுள்ளனர்.

இதேவேளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் அனுமதிச் சீட்டுக்கள் விற்பனை செய்தவன் மூலம் வடக்கு ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான நிதி திரட்டப்பட உள்ளது. ஒரு டிக்கெட்டுக்கு 400 ரூபா அறவிடப்படவுள்ளது.  யாழ் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட பின் இந்த அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி யாழ். செல்ல அனுமதி வழங்கப்படும். அனுமதிச்சீட்டு விநியோகத்தையும் ஜனாதிபதி இன்று (23) ஆரம்பித்து வைப்பார்.

இரணைப்பாலை முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டில்

army-s-l.jpgபுலிகளின் முக்கிய தளமாக விளங்கிய புதுக்குடியிருப்பு இரணைப்பாலை முழுவதையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். இரணைப்பாலை கைப்பற்றப்பட்டதன் மூலம் புலிகளின் புலனாய்வுத்துறை தலைவரின் முக்கிய தளம், அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த அவர்களது இறுதி பிரதான நடவடிக்கைத் தலைமையகத்தையும் படையினர் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் தற்பொழுது அவர்களை 25 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் வெற்றிகரமாக முடக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு ஏ-35 வீதியின் ஒன்றரை கிலோ மீற்றருக்கு மேற்பட்ட பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள பாதுகாப்புப் படையினர் தற்பொழுது ஏ-35 பிரதான வீதியூடாகவும் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகளின் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மான், கடற் புலிகளின் தலைவர் சூசை ஆகியோர் உட்பட முக்கிய தலைவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த அதி சொகுசுகளைக் கொண்ட வீடுகள், உட்பட பாதுகாப்பு அரண்களையும் படையினர் இங்கு கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய இரணைப்பாலை பிரதேசம் முழுவதையும் புலிகள் தங்களது அதி உயர்பாதுகாப்பு வலயங்களில் நன்றாக பயன்படுத்திவந்துள்ளதற்கான சகல தடயங்களும் காணப்படுவதாக வன்னி கள முனையிலுள்ள படை வீரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இரணைப்பாலை பிரதேசத்திலிருந்து செய்மதி தொலைத்தொடர்பு கருவிகள், அதி நவீன தொலைத் தொடர்பு உபகரணங்கள் உட்பட பல முக்கிய பொருட் களும், அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ள படையினர் உழவு இயந்திரம், வான், கப் வண்டி உட்பட ஏழு வாகனங்களை படையினர் இந்த நடவடிக்கையின் போது நிர்மூழமாக்கியுள்ளனர்.

இரணைப்பாலை பிரதேசம் முழுவதையும் நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினர் பலமுனைகளில் நடத்திய தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் சுட்டிக் காட்டினார்.

புலிகளிடம் எஞ்சியுள்ள சிறிய பிரதேசத்தை முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளில் இராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, 58 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, 55 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா ஆகியோர் தலைமையிலான மூன்று படைப் பிரிவுகளும் இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான படையினரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் விமான விபத்தில் சிக்கி 17 பேர் பலி

tour.jpgஅமெரிக் காவின் மேற்கு மாகாணமான மான்டனாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் சிறார்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த விபத்து நேரிட்டது. இதுகுறித்து பெடரல் விமான நிர்வாக செய்தித் தொடர்பாளர் மைக் பெர்குஸ் கூறுகையில், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜாலி டிரிப் ஆக குழந்தைகள் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நினைக்கிறோம். ஆனால் அது சோகத்தில் முடிந்துள்ளது. ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம் கலிபோர்னியாவின் ஆரோவில் நகரிலிருந்து கிளம்பி, மான்டனாவின் போஸ்மன் நகருக்கு வந்து கொண்டிருந்தது. தரையிறங்குவதற்கு முன்பு ஹோலி கிராஸ் கல்லறையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

போஸ்மன் நகருக்கு வரும் திட்டத்தை கடைசி நேரத்தில் விமானி மாற்றியிருக்கிறார். போஸ்மனுக்குப் பதிலாக பட் நகருக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார் என்றார். விமானம் விழுந்த வேகத்தில் அது தீப்பிடித்து எரிந்தது. விமானம் தலைகுப்புற விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். கல்லறை வளாகத்தில் உள்ள மரங்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.