தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவிருக்கின்றார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக இதற்கான அழைப்பை இன்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அனுப்பி வைத்துள்ளது.
அலரி மாளிகையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம் பெறும் என்றும் அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு தமக்கு கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் “நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடவே இந்தச் சந்திப்பு என அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு தொடர்பாக எமது கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி ஆராய்ந்து முடிவு எடுக்கும்” என்று கூறினார்.
பார்த்திபன்
//இந்தச் சந்திப்பு தொடர்பாக எமது கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி ஆராய்ந்து முடிவு எடுக்கும்” என்று கூறினார்.//
பேசாமல் வன்னிலிருந்து உத்தரவு கிடைத்ததும் தீர்மானிப்போம் என்று சொல்லியிருக்கலாம். அதுசரி வெளிநாட்டுச் சுற்றுலாவிலை நிக்கிற கூத்தமைப்பினர் உந்தச் சந்திப்பிலை கலந்து கொள்ளுவினமோ??
பல்லி
பார்த்திபன் இந்த 22 கூதாடிகைளையும் ஒன்று சேர்க்கவே பலகட்ட பேச்சு வார்த்த்தை செய்ய வேண்டும். இதில் யாருமே சம்பந்தர் சொல்லை (தலைவர்) கேட்ப்பதில்லையென சம்பந்தர் வருத்தபட்டாராம். இதில் சம்பந்தர் தனி ஒரு குழு. சேனாதியுடன் சிலர். கஜேந்திரனுடன் ஒரு சிலர். தொடர்பில்லாமல் பலர். கோவில் மாடாய் (தாந்தோன்றிதனமாய்) சிவாஜிலிங்கம். இவர்களை ஒன்று சேர்க்க ஜெனிவா வரை பேச்சுக்கள் நடத்தபட வெண்டும். அதில் பல்லியும் கலந்து வேடிக்கை பார்க்க வேண்டும் (உளவல்ல) வேடிக்கைதான்.
santhanam
இவைக்கு விசா மறுப்பாம் வணங்கா மண்ணில் ஏறிபோய் திருகோமலையில் இறங்கபோகினாமாம்.
murugan
அடைக்கலம் செல்வமும் மாவை சேனாதியும் அரசியல் தஞ்சம் கோரிவிட்டார்கள். அவர்களுக்கு இனி இலங்கை எதற்கு?