யாழ்ப்பா ணத்துக்கான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (23) ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்படுகின்றன. இதன் போது வடக்கிற்கான ரயில் சேவையை திரும்பவும் ஆரம்பிப்பதற்கென தேசிய செயலகமொன்றும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.
கொழும்பு- யாழ்ப்பாணத்துக்கிடையிலான யாழ் தேவி ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கென தேசிய மட்டத்தில் சகல மக்களினதும் பங்களிப்பு பெறப்படவுள்ளது. பொதுமக்களின் உதவியுடன் 34 ரயில் நிலையங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளதோடு யாழ். ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகளை அம்பாந்தோட்டை மக்களும் கிளிநொச்சி ரயில் நிலையத்தை அமைக்கும் பணிகளை மாத்தறை மக்களும் பொறுப்பேற்கவுள்ளனர்.
இதேவேளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் அனுமதிச் சீட்டுக்கள் விற்பனை செய்தவன் மூலம் வடக்கு ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான நிதி திரட்டப்பட உள்ளது. ஒரு டிக்கெட்டுக்கு 400 ரூபா அறவிடப்படவுள்ளது. யாழ் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட பின் இந்த அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி யாழ். செல்ல அனுமதி வழங்கப்படும். அனுமதிச்சீட்டு விநியோகத்தையும் ஜனாதிபதி இன்று (23) ஆரம்பித்து வைப்பார்.
பார்த்திபன்
இந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு சிலர் கவலைப்பட போகினம்.