வணங்கா மண்!!! : ஈழமாறன்

Vanni_Missionகப்பல் ஓட்டிய தமிழன்
பின் ஒருநாள்
ஓமந்தைச் சாவடியில்
கப்பம் புடுங்கிய தமிழன்
தொப்புள் கொடி உறவின் பெயரால்
பத்துப் பதினைஞ்சு
வீடு வாங்கிய தமிழன்

முன் ஒருநாள்
புரட்சியின் பெயரால்
கோயிலெல்லாம்
நகை எடுத்தவன்
தண்டவாளம் ஈறாக
கிண்டி எடுத்தவன்
கதிகால் தொடங்கி
கக்கூஸ் கதவுவரை
களவும் எடுத்தவன்

கவி படைத்தவன்
அண்ணையின் பெயரில்
அர்ச்சனை செய்தவன்
பிறிதொரு பொழுதில்
களவாய் கடவுச்சீட்டுச் செய்து
கென்யா ஊடாக
ஜரோப்பா சென்று
ஆமி அடிக்கிறான்
புலி பச்ச மட்டை வெட்டி
பளார் என்றடிக்குது
வீடு எரிஞ்சு போச்சு
கிடந்த தோடும் களவு போச்சு
நாடு திரும்பிப் போனால்
என்னை நாயைப் போல் சுடுவார் என்று
பொய்யாய் சொன்னவன்
அதன் பேரில் அடைக்கலமும் கேட்டவன்.
தங்கையை கூப்பிட்டான்
தம்பியை கூப்பிட்டான்
மாமா மாமி மச்சாள் என்று பின்
வரிசையாய் அழைத்தபின்

மாவீரர் விழாச்சென்று
போர்வீரம் கதைத்தவன்
சந்திரிகாவுடன் கலவி வைக்க
அண்ணைக்கும் ஆசை
இந்த கிளட்டு சிங்கத்திற்கும்
ஆசையென்று அரங்கிலை முழங்க
விசிலடித்தவன்
அன்றிரவே விஸ்கியும் அடித்தவன்.

ஜஞ்சாறு வருசம் கழிச்சு
தெருவில் நின்ற காருடன்
கோட்டுச் சூட்டையும் போட்டு
போட்டோ எடுத்தவன்
எடுத்த கையோடு
எக்கச் சக்கமா புரட்டும் சேர்த்து
கடிதமும் போட்டவன்
வடிவான பொம்பிளை ஒன்று
அனுப்பவும் சொன்னவன்.
வன்னிலை வேண்டாம்
கொஞ்சம் நகரமாய் பாருங்கோ
இங்கிலிசு தெரிஞ்சிருந்தா
இன்னும் கொஞ்சம் நல்லது
சாதி கவனம்
சமயத்தையும் விசாரியுங்கோ
வாற செலவு அவளோடை
வந்த பிறகுமிகுதி என்று
வரிசையாய் சொன்னவன்

வந்திறங்கிய கையோடு
கலியாணம் ஒருநாள்
பின் வேறு ரிசப்சன் மறுநாள்
பிறந்த நாள் ஒருநாள்
31ம் சடங்கெண்டு ஒருநாள்
படுத்தது தவிர்த்து
பிள்ளை குடுத்தது தவிர்த்து
மற்றன எல்லா நாளுக்கும்
விழா எடுத்தவன்
கொஞ்சம் விலாசம்
காட்டினவன்

கொலிடே போனவன்
குடிச்சுத் தினம்
கும்மாளம் போட்டவன்
அரைகுறைப் பயிற்சியில்
அரங்கேற்றம் செய்தவன்
அப்பப்ப வன்னி சென்று
அண்ணைக்கருகில் நின்று
போஸ் கொடுத்தவன்
கொடுத்தெடுத்த படம்
காட்டி அண்ணையோட
குளோஸ் என்று சொன்னவன்
வெள்ளைப் புறாக் கட்டினவன்
கட்டி வந்ததில் வீட்டைக் கொஞ்சம்
நீட்டியும் கட்டினவன்

வருகிற வழியிலை
துடைக்கப் பேப்பரும் கேட்டவன்
வள்ளியும் கந்தனும்
சுப்பனும் பேத்தியும்
பங்கரில் இருக்கையில்
லண்டனில் பிள்ளையும் பெத்தவன்
புரச்சியின் பெயரிலை
கொள்ளையும் அடித்தவன்
கொள்கையின் பெயரிலை
இன்னும் நாலைஞ்சு வீடும்
வாங்கினவன்

மன்னாரில் சாகையில்
மதுவிலை கிடந்தவன்
அண்ணை உள்ளுக்கை விட்டடிப்பார் என்று
மனிசியுடன் தினம் தோறும்
மயக்கத்திலும் கிடந்தவன்
மூதூரில் சனம் சாக
வைவுக்கு முத்தம் கொடுத்தவன்
பேசாலை ஈறாக
பெருவாரி சனம் சாக
பராரிக் கனவோடு
சொகுசாக வாழ்ந்தவன்

ஆனையிறவு போய்
அழிவார் கதைகேட்டு
வன்னிச் சனத்தின்ரை
ஆடுமாடு போய்
பால மோட்டை போய்
படுகாட்டுக் குளம் போய்
படுத்திருந்த பாய் கூடப் போய் துலைஞ்சு
நாசமறுப்பார் செய்த வேலையாலை
நாதியற்ற வன்னிச் சனம்
இருந்ததெல்லாம் இழந்து
மிருகமாய் அலைஞ்சு
கருங்காலி மரத்தின் கீழே
உறங்காமல் உண்பதற்கோ
ஒரு பருக்கை உணவில்லாமல்
திண்ணையும் போய்
பின்வளவு தென்னையும் போய்
புள்ளையும் போய்
புதுவிளாம் குளமும் போகையிலே
கட்டவுட் கட்டினவன்
அண்ணைக்கு பனையுயரக்
கட்டவுட் கட்டினவன்
சாவை நிறுத்துவோம்
வாருங்கள் ஊர்வலம் என்று
தெருவுக்கு கூட்டி வந்து
அண்ணையைக் காப்பாத்த
பதாகை சுமந்தவன்

ஊர்வலத்திலே உல்லாசம் கண்டவன்
பெல்ஜியம் சென்று
துள்ளிக் குதித்த பின்னே
பானம் அருந்தி
சான்ட்விச்சு சாப்பிட்டு
ஏப்பம் விட்டவன்
இளம் பெட்டையளை பார்த்து
மோப்பமும் விட்டவன்.
கோச்சிலை அப்பிடி இப்பிடி
சேட்டையும் விட்டவன்
இளசுகளுக்கு பிக்கினிக்
காட்டவும் செய்தவன்.

காரை முள்ளுக் குத்த
யங்கம் முள்ளு கீறிபாய்ந்த காயம்
உடல் கடுக்க
சிங்களம் ஏவிய செல்
சிங்கனைக் கொன்று
அவன் தங்கையைக் கொன்று
மங்கையின் உடல் தின்று
உடன் கிடந்த தங்கமாம்
ஆறுமாத சிறுமியை பிழிந்தெடுத்து
கோடியில் நின்ற
மாடாடு மரமெல்லாம்
முறித்தெடுத்து
கருப்பட்ட முறிப்பிலே வீழ்ந்து வெடிக்கையில்
நாயே நீ எங்கிருந்தாய்
கற்சிலை மடுவிலே
நெடுங்கேணித் தெருவிலே
புளியங் குளத்திலே
புதுவிளாங்குளத்திலே
அழிந்து சனம்
அழுது ஓலம் விட்டு
விடுங்கடா எங்களை
வே மக்களே என்று சொல்ல
பொல்லால் அடித்து
காலால் போட்டுதைத்து
மாத்தளனில் என் மகளை
மாடாய் அடித்தவனை
மாவீரன் என்று சொல்லி
மார்தட்டிக் கொண்டாடியவன்

கட்டினவள் கதறியழ
பால் மணம் மாறாத பச்சிழம் பாலகன்
கையில் கொண்டு
கரிப்பட்ட முறிப்பு போக
கனகராயன் குளம் போக
முறுகண்டி போக
முழங்காவில் போக
வற்றாப் பழை போக
தண்ணீர் ஊற்று விழ
தண்ணியிலை இருந்தவன்

தன்குறி விறைக்க
சந்தோசம் கொண்டவன்
புதுக்குடியிருப்பு மூலைக்கை
வன்னிச் சனம் சாகைக்கை
கால் சிதறக் கை முறிந்து
தண்ணிகூட இன்றிச் சனம் மாழேக்கை
ஆண்குறி விறைப்பேறி
அனுபசிச்சுக் கிடந்தவனுக்கு
அண்ணைக்கு அனுப்புவதற்கு
அள்ளிக் கொடுங்கள் என்று
வணங்கா மண்
பேர் போட்டு
வருவான் வாசலுக்கு

கேட்டு வையுங்கள்
மட்டக்களப்புச் சனத்தின் உயிர்
மசிரைவிடக் குறைவா
திருகோணமலைச் சனங்கள்
எருமையினப் பிறப்பா
மன்னாரில் செத்தவர்கள்
செல்லாத காசா
மிகுதி வன்னியிலை செத்ததெல்லாம்
மரமேறும் விலங்கா
இவரெல்லாம் சாகையிலை
இரவெல்லாம் கலவிசெய்தீர்
இப்ப அண்ணைக்கு
இருப்புக்கு இடம்வேண்டும்
வணங்கா மண் புலுடாவா
நாயே
வணங்கா மண் புலுடாவா என்று.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

71 Comments

  • vithusha
    vithusha

    அழிவு இல்லாமல் எந்தப் போராட்டமும் வென்றது கிடையாது. தலைவரின் பதிலடி விரைவில் கிடைக்கும்போது ஈழமாறன் போன்றவர்களின் சாயம் வெளுக்கும்.

    Reply
  • ruban
    ruban

    ஈழமாறன் முன்பேதும் இயக்கத்தில் இருந்திருக்கிறீர்களா? அடி ஒவ்வொன்றும் ஆட்லறி போல இருக்கு

    Reply
  • george
    george

    wonderful,its amazing. where is our big brothr? Can he run as well as he done in the fast.
    where is our big brother and his brothrs?
    where they hiding? thala can you hear me?

    Reply
  • vanaththi
    vanaththi

    விதுசா இப்படித் தான் தலைவர் உள்ளுக்கை வரவிட்டு அடிப்பார் என்று சனங்கள் எல்லாம் தலைவரின் உள்ளுக்கை வரவிட்டு அடிப்பை பாக்க வெளிக்கிட்டதால் தான் இப்ப எல்லாரும் கப்பல் விட வெளிக்கிட்டவை இது போததா? இன்னும் தமிழன் என்ன சொல்ல அப்படியே இருக்கிறான் சின்னப்பிள்ளைத் தனமாய்.

    Reply
  • Naan
    Naan

    புலுடாவா endraal enna?

    Reply
  • Kathir
    Kathir

    Dear Maran ,You have done very well and included all the real stroy of the LTTE finamies and their stooges but you have only missed the temple business or hindu businees of the finamies.Some of them they have build from the money which is collected from our selfish and politically ingnorant people and some of them are snatched from the people which are build by the general tamil or Indian masses who have been living in the western countries.

    Why cant you write on the poor people who are self-immolated in Tamil Nadu.It is a great tragedy which is continuing in Tamil Nadu and is encouraged by the culprits like Ramathas,Vaico,CPI,Naxalites and others. You know very well that up to now not a sigle ordinary man from the North or East Srilanka have done this foolish act.

    Reply
  • padamman
    padamman

    இலங்கை அரசின் அடிதாங்கமுடியமல் தலைவரின் இடக்கை நிபந்தனையர்ர பேச்சுக்கு தயார் என்று கெஞ்சுகின்றர் இன்னும் தலைவர் பதிலடி கொடுப்பார் என்று விதுசா கணவு கானுகின்றிர் தலைவர் தன்னை யாரும் வந்து காப்பாற்ரமாட்டார்கள் என்று இருக்கும் போது அடிப்பார் பிடிப்பார் என்று சின்னப்பிள்ளைத்தனமாக இல்லையா?

    Reply
  • murugan
    murugan

    “அழிவு இல்லாமல் எந்தப் போராட்டமும் வென்றது கிடையாது”

    இனியென்ன அழிய இருக்கிறது விதுசா? அழிவென்றால் என்ன என உணர்ந்து தான் சொல்லுகிறீரா? சமூக உணர்வுள்ள ஒருவரால் இப்படியெல்லாம் எழுத முடியாது. உங்களுக்கு விடுமுறைக்கு போக தமிழ் ஈழம் வேணும். ஆயத்தமாய் இருங்கோ தலைவர்…….. வைத்திருப்பார்.

    Reply
  • புலவன்
    புலவன்

    அன்று- கப்பல் ஓட்டிய தமிழன்
    இன்று- கப்பல் விடும் தமிழன்

    வணங்கா மண்ணே நீ
    சுணங்காது செல்வாயா!
    கடைசி மண் காக்கவல்ல
    தலை வன்னவண் உயிர் காக்க!!

    மருந்தும் மாவும்
    சிரியலும் சீரகமும்
    துணியும் தூளும்
    உனக்கோ நாம் சேர்த்தோமதை
    ஊருலகே யறியுமதை!

    கடைசி மண் எங்கள் முல்லைமண்
    காடையர் செல்கண்டு சிவந்தமண்
    அந்த மண் எங்கள் சொந்த மண்
    ஆளும் தலையிடம் செல்லுமெம் வணங்கா மண்!!!

    இன்னல்கள் நமக்கென்ன புதிதா?
    ஈழ மாறன் நமக்கென்ன சவாலா??
    கொண்ட கொள்கை தவறா தலைவா
    கொன்றொழி எமதுறவை தவறா

    வாசலி லெதிரி வருமுன்
    வந்து நிற்கும் உன்முன் வணங்கா மண்!!!

    Reply
  • vithusha
    vithusha

    எல்லோரும் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். புலிகள் பலயீனப்படும் போது கொக்கரிப்பதும் பின் அவர்கள் நிமிர்ந்து நிற்க்கும் போது வாலைச் சுருட்டிக் கொள்வதும் எல்லோருக்கும் தெரிந்ததே. புலிகள் மோசமானவர்கள் என்றால் ஏன் புலம் பெயர் மக்களில் 99 வீதமானவர்கள் ஆதரவளிக்கிறார்கள். ஈழமாறன் போன்ற அரச ஆதரவுகளுக்கு……………………………….

    Reply
  • Nadchathiran chevinthian.
    Nadchathiran chevinthian.

    வீதி நாடகம் போல இந்த அதிரடிக்கவிதை அற்புதமானது. ஈழமாறன் உங்கள் மாவீரர் தின உரைக்கும் இக்கவிதைக்கும் எனது பாராட்டுக்கள்.

    நமது தேசியத்தலைவரை பாடியும் பல கவிதைகள் இயற்றவேண்டும் ஈழமாறனே.

    Reply
  • பல்லி
    பல்லி

    விதுசா 99 உங்களுக்கு பிடித்த எண்ணா?? சரி பரவாயில்லை. நம்ம தேசத்தில் தாங்கள் ஒருவீதம்தான் மக்கள் பற்றி சிந்திப்பவர்கள் 99 வீதம். இது பல்லியின் கணக்கல்ல பின்னோட்டத்தை பார்த்து விதுசாவும் புரிந்து கொள்ளலாமே.

    Reply
  • பல்லி
    பல்லி

    ஈழமாறன் காசி அண்ணன் கோபிக்க போகிறார். இருப்பினும் பாராட்டுக்கள். ஆனாலும் முக்கியமான தமிழனை விட்டு விட்டியள். தலைகீழாய் புலி கொடி பிடிக்கும் தமிழன். மறக்காமல் அடுத்த வாட்டி சேத்து போடுங்கோ.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஈழமாறன் இயல்பான பதிவு. உண்மைகளை அப்படியே போட்டுடைத்து விட்டீர்கள். எனியும் தலை பதிலடி கொடுப்பார் என்று எண்ணும் விதுசா போன்றவர்களுக்கு இப்பதிவு கடுப்பேத்தத் தான் செய்யும்.

    Reply
  • மாயா
    மாயா

    சனம் சாகுதெண்டு சொன்னப்ப
    சனமும் சாகாமல்
    சன்னமும் படாமல்
    தமிழீழம் வராதெண்டவங்க
    ஒப்பாரியோட
    முகவரியையும் தந்துள்ளது
    கவிதை
    அருமை

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    welldone eelamaran
    please you must continue

    Reply
  • Rajai
    Rajai

    ஆகா.. ஆகா அர்புதம்.. அர்புதமன வரிகள்.. அந்த விரல்க்ளுக்கு ஒரு தங்க மோதிரம் போடணும்யா..

    Reply
  • vithusha
    vithusha

    இதில் கடுப்பேற எதுவும் இல்லை. நான் போராட்டம் ஒன்றே தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு தரும் என்று நம்புகிறேன். அதற்கு அரச ஆதரவுகளுடன் சேர்ந்து நின்று ஆகப் போவத ஒன்றும் இல்லை. புலிகள் மட்டுமே அதைச் செய்யக் கூடிய தகுதி உடையவர்கள்

    Reply
  • akilan
    akilan

    இங்கு இருப்பாவர்கள் கட்டாயம் ஆதரவு கொடுக்கதத்தானே வேணும் இல்லா விட்டால் புலிகளை எப்போதோ அழித்திருப்பார்கள் இங்கு உள்ளவர்கள் அங்கு போய் என்ன செய்வது மாடு மேய்பதா? அதற்கு தான் இவர்கள் ஆதரவு சும்மா அங்கு உள்ள மக்கள் மீது இல்லை.

    Reply
  • Maha
    Maha

    ஈழமாறன்
    நட்சத்திரன் தேசியத் தலைவர் என்று சொன்னது பிரபாகரனை அல்ல. அவருடைய தேசியத் தலைவர் சேரனைத் தான். தவறா எடுத்துப் போடாதேயுங்கோ.
    மகா.

    Reply
  • thurai
    thurai

    //எல்லோரும் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். புலிகள் பலயீனப்படும் போது கொக்கரிப்பதும் பின் அவர்கள் நிமிர்ந்து நிற்க்கும் போது வாலைச் சுருட்டிக் கொள்வதும் எல்லோருக்கும் தெரிந்ததே. புலிகள் மோசமானவர்கள் என்றால் ஏன் புலம் பெயர் மக்களில் 99 வீதமானவர்கள் ஆதரவளிக்கிறார்கள்//

    உலகில் மனிதரிற்கு பலனுள்ள பயிர்கழும், மரங்கழும் அரிது. பலனுள்ள பயிர்களை வளர்த்தெடுப்பதும் அரிது. புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழர் வாழ்க்கை ஒட்டுண்ணி வாழ்வே. யாரோ கட்டியெழுப்பிய மண்ணில் சுக வாழ்வு வாழ்வோரே நாம். புலிகள் இலங்கையின் அழிவில் லாபம் அடைபவர்கள. அவர்களின் புலத்தின் ஆதரவாளர்கழும் அதே குணம் கொண்டவர்களே.

    துரை

    Reply
  • murugan
    murugan

    “முல்லைத்தீவில் புலிகள் ஒரு மிகச் சிறிய நிலப்பரப்பில் முடக்கப்பட்ட நிலையில், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க ஸ்கென்டிநேவின் நாடொன்று விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.”

    அரசியல் தஞ்சம் கூட வழங்கப்படக் கூடாது. புலித் தலைவர்கள் தப்பிப் பிழைக்க விடப்பட்டால் தமிழினம் நிம்மதியாய் எப்பவும் வாழமுடியாது.

    Reply
  • murugan
    murugan

    ஆரம்ப நாட்களில் தமிழ் மக்கள் சொன்னார்கள் பெடியள் பிடிச்சுத் தருவாங்கள் ஈழத்தை. பிறகு இந்தியா பிடிச்சுத் தரும் என்றார்கள். பிறகு பிரபாகரன் என்றார்கள். இப்ப வன்னியில் உள்ளவர்கள் தான் ஈழத்தைப் பிடிக்கவேணும் என்கிறார்கள். இதை சொன்னவர்கள் சொல்பவர்கள் எல்லாம் எட்ட நின்று கொண்டுதான் உசுப்பி விட்டார்கள். அப்படிப் பட்டவர்களே புலம் பெயர்ந்து கொடிகாவிக் கொண்டு திரிபவர்கள். அவர்களுள் விதுசாவும் ஒருவர். அவ்வளவே. புலம் பெயர்ந்தவர்களுக்கு விடுமுறைக்கு போய் அங்கு கஸ்ரப்படுகிற மக்களை புதினம் பார்த்து விலாசமடித்து விட்டு வர ஒரு நாடு -தமிழ்ஈழம் வேண்டும். இதுக்குள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிந்த கூப்பிட்டால் பேசப் போகக் கூடாது என புலம்பெயர்ந்தவர்கள் ஜிரிவியில அட்வைஸ்வேறு. மக்கள் சாகினம் மக்கள் சாகினம் என உண்மையான உணர்வோடு துடிப்பவர்கள் அதை நிறுத்த கிடைக்க கூடிய வழிகளை ஊக்குவிப்பார்களா? கொள்ளி எடுத்து கொடுப்பார்களா? விதுசா நீங்கள் தலைவருக்கு ஆலோசகராகலாமே?

    Reply
  • vithusha
    vithusha

    உங்கள் நடத்தைகளுக்கு என்ன நடக்கும் எனபதை பொறுத்திருந்து பாருங்கள். தலைவர் பிழையென்றால் நீங்கள் போராடியிருக்க வேண்டியதுதானே.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலித்தலைமைகள் முற்று முழுதாக அழித்தொழிக்கப் படவேண்டும். தப்பிப் பிழைக்க விட்டால் இலங்கைக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் அழிவை ஏற்படுத்துவார்கள். ஆயுதரீதியில் இல்லாவிட்டாலும் வெறியுணர்வை ஏற்படுத்தும் அரசியல் வகையில்.

    Reply
  • george
    george

    This is reality of the world do not condem anyone. i think eelamaran has expressed and made me jump.its great poet except some vulgar words, other then that good poem.i really like it.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //யாரோ கட்டியெழுப்பிய மண்னில் சுகவாழ்வு வாழ்பவரே நாம்//துரை
    இது தான் உண்மை. இதை உணர மறுப்பதுதான் புலம்பெயர் புலிக்குட்டிகள். இந்த பிரச்சனை தீர்கமுடியாமல் நிரந்தரமாக தொடரும் போல் தெரிகிறது. ஐ.நாடு கட்டிடத்து மதில்ஏறி குதித்து தீ குளித்து செத்தாலும் ஓ.கே ஐ.நாடு முன்னால் பிரதட்டை அடிச்சு விழுந்து கும்பிட்டாலும் ஓ.கே

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //பிழையென்றால் நீங்கள் போராடியிருக்க வேண்டியது தானே// விதுசா
    கடந்தகாலத்தை கருத்தில் வைத்தா கதையளக்கிறீர்கள் இல்லை விளையாடுகிறர்களா? எல்லா இயக்கங்களிடையே சிறுசிறு பிரச்சனைகள் இருந்தது உண்மை தான். ஆனால் எந்த இயக்கத்தலைமையும் இன்னெரு இயக்கத்தை முற்றுமுழுதாக அழித்துத்துடைக்க நினைக்கவில்லை பிரபாகரனை தவிர. பிரச்சனைகளை பேசித்தீர்பதிலேயே உறுதியாக இருந்தார்கள். பிரபாகரன் செய்த நயசஞ்சக வேலையை போராட்டம் என்கிறீர்கள். இது சிங்கள அரசுக்கு தமிழ்மக்களை காட்டிக்கொடுத்ததே புலிகள் செய்த வேலை. வெலிகடை படுகொலைகளை தமிழ்மக்கள் மறந்தாலும் பிரபாகரனின் காட்டிக்கொடுப்பை வரும் சந்ததி தமிழ்-மூஸ்லீம் மக்கள் மறக்கப் போவதில்லை. புலம்பெயர் நாட்டுக்கு தொகை வகையாக வந்து சேர்ந்தது பிரபாகரனின் அதிஸ்டம். மறுவகையில் ஈழவாழ்மக்களின் துரதிஷ்டம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //உங்கள் நடத்தைகளுக்கு என்ன நடக்கும் எனபதை பொறுத்திருந்து பாருங்கள். தலைவர் பிழையென்றால் நீங்கள் போராடியிருக்க வேண்டியதுதானே.//

    விதுசா நீங்க எந்த உலகத்தில வாழ்கின்றீங்க. புலிகள் எப்போது மற்றவர்களை இயங்க விட்டவர்கள். எதைச் செய்தாலும் தாங்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமென்ற மமதையினால் வந்த விளைவு தானே இவ்வளவும். இதற்குப் பிறகும் பொறுத்திருந்து பாருங்கள் என்று கனவுலகில் இருக்கும் நீங்கள், கனவுகளைக் கலைத்து கொஞ்சம் வெளியே வாருங்கள்.

    Reply
  • டான்ஸர்
    டான்ஸர்

    /Dear Maran ,you have only missed the temple business or hindu businees of the finamies.Some of them they have build from the money which is collected from our selfish and politically ingnorant people and some of them are snatched from the people which are build by the general tamil or Indian masses who have been living in the western countries./— அதுதான் இந்திய நக்ஸலைட் இயக்கமான, “மக்கள் கலை இலக்கிய கழகம்” போன்றவைகள், இந்திய ஒடுக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், சைவத் தமிழர்களுக்கு (புலம் பெயர் இலங்கைத் தமிழர்கள்) ஆதரவாகவும், “சிதம்பரத்தின் நந்தனாராக”, விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவனை நிறுத்தியிருப்பதாக, இதில் பின்னூட்டம் விடுகிறார்களே!. தேவதாசிகளைத்தான் கடவுளாக தமிழகத்தில் வணங்கினார்கள்!, விபசாரிகளை அல்ல!. வெளிநாடுகளில் தங்கள் பெண்கள் விபசாரிகளாக இருக்கிறார்கள் என்பதற்காக, சமரசம் செய்ய, “சிவபெருமானின் மனைவி,சிவகாமி”, “பரத்தையர் நாட்டியத்தின் நாயகி”, அந்த விபசாரியையே வணங்கும் போது, நம் பண்பாடு இவ்வாறு சமரசம் செய்வதை வலியுறுத்துகிறது என்கிறார்கள். ஆகையால், மேற்குல தொலைக் காட்சி சேனல்களில் (கிராண்ட் ஹோட்டல் கேசினோ), நிர்வாணமாக ஒரு பெண் விளம்பரத்திற்காக நிறுத்தப்பட்டிருப்பாள், அதுபோல், முழுக்க முழுக்க ஆங்கிலம் பேசும் (வேறு மொழி) வெளிநாடுகளில் ,”என்ன சுத்தத் தமிழ்ப் பேசி” பொருள்களை விற்க வேண்டி கிடக்கிறது. மனம் பிறழ்ந்த மக்களின் டேஸ்டுக்கு தகுந்த மாதிரி “எக்ஸ்பிளிஸிட் எஸ்கார்ட்ளை” வாடகைக்கு அமர்த்தினால், அது “விபசாரம் இல்லாமல் வேறு என்ன”?. ஆண்கள் என்றால், கூலிகாரர்கள், பெண்கள் என்றால் விபசாரிகள் என்பதுதான் தமிழர்களின் “சமய அடையாளமா?”. ஒருசில தனிநபர்களின் “வருமானத்தை உறுதி செய்யும்” இந்த வாழ்க்கை முறைதான் “தமிழின அடையாளமா?”.

    Reply
  • Eelamaran
    Eelamaran

    சில வார்த்தைப் பிரயோகங்கள் நான் கூட ஏற்க மறுக்கின்ற சொற்கள் தான். வெறுமனே சீசனுக்கு துரத்துப்படும் மறிமாடுகள் போல; வன்னிமக்களின் அவலங்கள், தாங்கொணாத் துயரங்கள் எல்லாம் இந்த புலி வாலைக் கண்டவர்களுக்கு கொண்டாடு பொருளாக வெளிநாடுகளில் மாறியிருப்பதைப் படிக்கிறபோது, கிராமங்களில் பங்கர்களில் இன்று இருக்கின்ற வன்னி மக்களின் தொனியிலேயே பேசவேண்டும் என்று தோன்றியதால் தான் வார்த்தைப் பிரயோகங்களை சற்று பண்பு மீறிப் பாவிக்க வேண்டி வந்தது.

    இவர்களுக்கு தேவைப்படும்போது தெருவுக்கு ஓடி வருவதும் அந்தத் தேவை முடிகிறபோது ஒதுங்குவதற்கும் வன்னி மக்கள் ஒன்றும் சீசனுக்கு பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல.

    கிடைக்கிற 100கிராம் பருப்பை அரிசிக்குள் போட்டு அவித்து ஒரு நாளுக்கு ஒரு பிடி வீதம் சாப்பிடும் மக்களைப் பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை. கடந்த வாரம் வவுனியாவுக்கு வந்த ஒரு குடும்பம் (கணவன் மனைவி இரண்டு பிள்ளைகள்) இரண்டு நாட்களாக காட்டுக்குள் பதுங்கி கிடந்து தப்பிவந்த கதை கேட்டால் தெரியும் புலியின் கையில் அகப்பட்டால் அந்த மக்களுக்கு என்ன நடக்கும் என்று.

    Reply
  • thurai
    thurai

    வணங்கா மண் கப்பல் விரையாக வன்னி போய் சேரும், மக்களின் துயரம் தீரும் என் யாராவது எதிர்பார்த்தால் ஏமாற்ரமே ஏற்படும்.

    உலகில் எங்கெங்கு தமிழர் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தங்கி நின்று பணம் வசூலித்தே செல்லும். இதற்கிடையில் வன்னியில் புலிகள் அழிக்கப்பட்டால், புலத்தில் வாழும் புலிகள் விமானமூலம் போய் வணங்காமண்ணில் சேர்ந்து கொள்வார்கள் என கதைகளும் வரும்.

    ஏ 9 வீதியில் உழவுயந்திரம் கொண்டு சென்ற தமிழரின் கழுத்தைப் பிடித்து வரி கேட்ட புலிகளிற்கு, அரசாங்கம் புலியின் கழுத்தை நெரிக்கும்போது உதவுபவர்கள் தமிழர்களா?

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    “வணங்காமண்” கப்பல் பலநாட்டைச் சேர்ந்த தொண்டர்கள் மருத்துவர்கள் பல ஆயிரம் தொன்நிறையுடைய மருந்துப் பொருள்கள் உணவுவகைகள் கொண்டு செல்வதாக புலம்பெயர் நாடுகளில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இலங்கை அரசோ தமது அனுமதியில்லாமல் தமது எல்லைக்குள் பிரவேசிக்கும் எந்த கப்பலும் பயங்கரவாதத்திற்கு கைகொடுப்பது கள்ளக்கடத்தலில் ஈடுபடுவது போன்ற சட்டத்திற்கு புறம்பான தேசதுரோக குற்றத்தில் ஈடுபடுவதாகக் கருதி எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல் மூழ்கடிக்கப்படும் என தமது ஊடகங்களில் பிரச்சாரம் செய்துள்ளது.
    புலிகளைப்பற்றி எம்மில் பலபேருக்கு அறிமுகமானவர்கள் அவர்கள் சர்வதேசிய சட்டத்தையோ மனிதநேயத்தை மதிப்பளிக்கத் தெரியாதவர்கள். “கெடு குடி சொற்கேளாது” என்பதற்கு பொருத்தமானவர்களே. வேற்று நாட்டு தொண்டர்கள் மருத்துவர்கள் பயணிக்கிறார்கள் என்பது தான் வேதனை தரும் விஷயம். பொதுநல விரும்பிகள் இதில் கவனம் செலுத்தி அறிவுரை கூறப்படவேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இன்றும் தீபம் தொலைக்காட்சியில் உந்த சுருட்டல் மண் பற்றிய நிகழ்ச்சி போனது. இருவர் இதுபற்றிய விபரங்களைக் கூற வந்திருந்தார்கள். கேள்வி கேட்க வந்த நேயர் ஒருவர் முன்பு கண்ணீர்த் துளிகள் என்று சேர்த்து காசை என்ன செய்தீர்கள் ஏன் அதுபற்றிய கணக்கு வழக்குகளைத் தெரியப்படுத்தவில்லை என்று கேட்டுவிட்டார். பதிலளிக்க வந்தவர்கள் தடுமாறத் தொடங்கி விடடனர். அந்தப் பணத்தை 4 மாதமாக ஓடிட் பண்ணுகின்றார்களாம் இன்னும் முடியவில்லையாம். முடிந்ததும் அதுபற்றிய விபரங்களைத் தெரியப் படுத்துவார்களாம். இது எப்படி இருக்கு. அதைவிட கப்பலே இன்னும் ஒழுங்கு பண்ணி முடியவில்லையாம். ஆனால் 27 ம் திகதி கப்பல் புறப்படுகின்றதாம். 4 மாதங்களுக்கு முன்னர் சேர்த்த காசே இன்னும் ஓடிட் பண்ணி முடியவில்லை. இப்பவும் காசைத் தாங்கோ என்று தான் கேட்கினம். அப்ப இந்தக் காசை ஓடிட் பண்ண எத்தனை மாதம் தேவை. ஆனால் 27ம் திகதி கப்பல் பயணம் ஆரம்பம். முடியலைடா சாமி. எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றார்கள். என்ன செய்வது ஏமாற என்று ஒரு கூட்டம் இருக்கும் போது ஏமாற்றவும் அதைவிட பெரிய கூட்டம் இருக்கும் தானே …………..

    Reply
  • murugan
    murugan

    வேற்று நாட்டு தொண்டர்கள் மருத்துவர்கள் பயணிக்கிறார்கள் என்பதில்தான் விசயமே இருக்கு. இவ்வளவு நாளும் புலிகள் தமது சொந்த மக்களை கொன்று அல்லது கொல்லக் கொடுத்து தான் தப்பிப் பிழைத்து வந்தார்கள். இனி வேற்று நாட்டு தொண்டர்களை கொல்லுவித்து உலகச் சண்டை வந்தால்தான் தப்பலாம் என்ற நிலையில் திட்டம் போடுகிறார்கள். போகப் போகின்ற அந்த தொண்டர்களுக்கு முன் கூட்டிய அஞ்சலிகள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    பார்த்திபன் முக்கியமானத விட்டு விட்டியள் கப்பலுக்கு முன் கூட்டியே பணம் கட்ட வேண்டுமாம் ஆகவே பொருத்களை விட பணமாகதான் எதிர்பார்க்கினமாம். அதுவும் ஒரு பேப்பர்காரன் சொல்லுகிறார் காசோலை வேண்டாமாம் (பின்பு பிடிபட்டாலுமென்று) பணமாகவே கொடுக்கட்டாம். நாகர் கோவில் கப்பல் திருவிழா தற்போது புலம்பெயர்ந்து லண்டனில் நடக்க போகுது. பல நாட்டில் இருந்து காவடிகள் தயார். இந்த கப்பல் பல நாடுகளில் தங்கி ரீ வடை சாப்பிட்டுதான் போகுமாம்.
    பல்லி

    Reply
  • BALA
    BALA

    தேசம் வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
    தமிழ் மக்கள் நியாயமான தீர்வினைப் பெறுவதற்கான அரிய சந்தர்ப்பம் மறுபடியும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. உலக பொருளாதார நெருக்கடியின் கருணையினால் இலங்கை அரசிற்க்கு ஏற்ப்டுள்ள பாரிய பண நெருக்கடியினை சமாளிக்க உலக நாடுகளின் உதவியை நாடவேண்டிய அத்தியாஅவசிய தேவை அரசிற்க்கு ஏற்பட்டுள்ளது.இதனை தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை வழங்குவதற்கு சாதகமாக பயன்படுத்தும்படி உலக நாடுகளையும் இந்தியாவையும் இணங்க வைக்க முடியும்.தலைவரைக் காப்பாற்றும் முனைப்புகளுக்குப் பதிலாக புலம்பெயர் தமிழ்மக்களின் குரல்கள் நிரந்தர நியாயமான தீர்வினை வலியுறுத்தி உலகநாடுகளை வேண்டும்படி ஒலிக்க உங்களால் இயன்ற உதவியினைச் செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.இதுவரை தமிழ் மக்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை விட இது மிகவும் சாத்தியப்பாடான தருணமாகும். எமது மக்களின் இழப்புகளுக்கு ஏதேனும் மதிப்பளிப்போமாக இருந்தால் இத்தருணத்தை தவறவிட மாட்டீர்கள்.
    அன்புடன்
    பாலா

    Reply
  • மாயா
    மாயா

    வெளிநாட்டுக்கார டாக்குத்தர்மார் போறதெண்டு ஆக்கள்தான் சொல்லினம். வெளிநாட்டுக்காரர் யாராவது சொன்னவையோ? வெளிநாட்டு பாஸ்போட் உள்ள தமிழனும் வெளிநாட்டுக்காரன்தானே?

    எல்லா நாட்டு அம்புலன்ஸிலயும் சிகப்பு குறொஸ் அடையாளம் இருக்கு. அது றெட்குறொஸ்தான் ஆனால் அது செஞ்சிலுவை சங்கத்தின் கொடியில்ல? Hospital சின்னம். சிலுவை போட்டு சிலுமிசம் வேறயா? தமிழில எதையும் சொல்லலாம் இங்கிலீஸில இதை சொன்னா செஞ்சிலுவை சங்கமே வழக்கு தொடுக்கும்?

    Reply
  • vithusha
    vithusha

    புலிகள் அமைப்பு மற்றய இயக்கங்கள் போல மக்களின் பணத்தைக் கையாடினவர்கள் கிடையாது. கப்பல் வன்னியைச் சென்றடையும் போது உங்களுக்கு தெரியும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //வெளிநாட்டு பாஸ்போட் உள்ள தமிழனும் வெளிநாட்டுக்காரன்தானே?//
    நிதர்சன உன்மை.

    Reply
  • murugan
    murugan

    கப்பல் வன்னிக்கு போகுகின்றதோ இல்லையோ முதலில் புலிகள் தாம் தடுத்து வைத்துள்ள மக்களை வெளியேற விடவேண்டும் என உங்களுக்கு தைரியமிருந்தால் ,நீங்கள் மக்கள் பக்கம் தான் என்றால், நீங்கள் மனிததன்மை உள்ளவர் , நீங்கள் பக்கச்சார்பற்றவர் என்றால் உடனடியாக தெருவில் இறங்குங்கள். அதை மட்டும் கேடக மாட்டீர்களே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //புலிகள் அமைப்பு மற்றய இயக்கங்கள் போல மக்களின் பணத்தைக் கையாடினவர்கள் கிடையாது. கப்பல் வன்னியைச் சென்றடையும் போது உங்களுக்கு தெரியும்.//
    விதுசா, உண்மைதான் புலிகள் பணத்தைக் கையாடியதில்லை. அப்படியே முழுக்க விழுங்கி ஏப்பம் விட்டவர்கள். வெளிநாட்டுத் தமிழர்களிடம் 3 வருடத்தில் திருப்பித் தருவதாக வங்கி மூலம் பெருந்தோகை பணத்தினை பெற்றுக் கொண்டனர். ஆனால் 10 வருடமாகியும் வங்கியில் கடன் எடுத்துக் கொடுத்தவர்களுக்கு நாமம் தான் போட்டு விட்டார்கள். கண்ணீர் வெள்ளம் நிகழ்ச்சி நடத்தி சேகரித்த பல இலட்சம் பிரித்தானிய பெளண்டுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்க 4 மாதங்களைத் தாண்டியும் ஓடிட் பண்ணுகின்றார்களாம். ஓடிட் பண்ணி முடிய அதுபற்றிய விபரங்களை வெளியிடுவார்களாம். மொத்தத்தில் உங்களுக்கே தெரியும் வன்னிக்கு கப்பல் புறப்படப் போவதுமில்லை, சென்றடையப் போவதுமில்லையென்பதும். அதனால்த் தான் வன்னியை கப்பல் சென்றடையும் போது உண்மை தெரியுமென்கின்றீர்களா?? கப்பலே இன்னும் ஒழுங்கு செய்து முடிக்கவில்லை, ஆனால் கப்பல் 27.03.09 அன்று புறப்படுகின்றதாம். யார் காதில் பூச் சுற்றுகின்றார்கள். மொத்தத்தில் விதுசா போன்றவர்களுக்கு உலகத் தமிழர்களெல்லாம் முட்டாள்கள் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கின்றது போலும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    என்ன முருகன் நீங்க மடியிலேயே கை வைக்கின்றீர்கள். புலிகள் இருக்கும் வரை தானே புலிகளை வைச்சுப் படம் காட்டி வெளிநாட்டிலை சுருட்டிற வரை சுருட்ட முடியும். அதனாலே தானே புலிகள் தடுத்து வைத்துள்ள மக்களை வெளியேற்ற சில நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளையே பலர் எதிர்க்கின்றனர். மக்கள் வெளியேறி விட்டால் அப்புறம் புலிகள் யாரை பாதுகாப்பு அரணாக பாவிப்பது.

    Reply
  • sanganathaam
    sanganathaam

    our murugan and kanthan was fixed the mulliveli then their sons became heros and were tried to change our way of life, forced to change us. our lands and homes bacame thier own. we lost what we are, we can not constanly die for them. we have to make our own decision, put up with it, or move.

    Reply
  • vithusha
    vithusha

    உறதியுடனும் தியாகத்துடனும் போராடும் எந்த அமைப்பும் தேற்றதாக சரித்திரம் இல்லை. உங்களில் பத்துப் பேருக்கு புலிகள் தோற்க வேண்டும் என்பது ஆதங்கம். காரணம் உங்கள் போலி அரசிலைச் செய்வதற்கு புலிகள் தடையாக இருப்பதே. தமிழர்கள் உங்களை நம்பி பின்னால் வருவார்கள் என்று கனவு கூடக் காண வேண்டாம். தலைவரின் உறுதியும் திறமையான வழிகாட்டலும் நிச்சயம் வெல்லும்.அப்போது உங்களுடன் பேசிக்கnhள்கிறேன்.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    dear vithusha
    your leader even he couldnt to safe his family his wife & daughter in swiss with their friends then you are writing he will safe tamils how???

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //உறதியுடனும் தியாகத்துடனும் போராடும் எந்த அமைப்பும் தேற்றதாக சரித்திரம் இல்லை.தலைவரின் உறுதியும் திறமையான வழிகாட்டலும் நிச்சயம் வெல்லும்.அப்போது உங்களுடன் பேசிக்கொள்கிறேன்.//

    விதுசா, புலிகளின் தியாகங்களைத் தானே இலங்கை இராணுவம் படம் படமாய் காட்டுகின்றதே. அது போதாதா. அங்கு தலை துப்பாக்கிக் குண்டுகளால் மக்களை கொல்ல, நீங்க இங்கே பேசியே கொல்கின்றீங்கள். அதைத் தானே கடைசியில் சொல்ல வந்தீங்க.

    Reply
  • santhanam
    santhanam

    விதுஷா நீங்கள் எனி தீகுளிக்களாம் ஏன் என்றால் தமிழ்நாட்டு தமிழரிற்கு மேல் அதைவிட எங்கேயோ போய்விட்டிர்.

    Reply
  • padamman
    padamman

    தமிழர்கள் உங்களை நம்பி பின்னால் வருவார்கள் என்று கனவு கூடக் காண வேண்டாம். நாங்கள் உங்களை போல் கனவு காணவில்லை. மக்கள் எங்களுக்கு பின்னால் வரத்தேவையில்லை. நாங்கள் மக்கள் பின்னால் போகின்றேம். எங்களுக்கு எப்போதும் மக்கள்தான் முக்கியம் தலைவர்யில்லை

    “உறதியுடனும் தியாகத்துடனும் போராடும் எந்த அமைப்பும் தேற்றதாக சரித்திரம் இல்லை”
    உண்மை விதுசா உண்மை உங்களுக்கு தெரிந்த உண்மை உங்கள் தலைக்கு தெரியவில்லை அவருடைய சுயநலம்தான் இன்று எமது விடுதலை போராட்டம் இன்று எந்த நிலமையில் வந்து இருக்குது என்று வன்னி வாழ் தமிழ்மக்களிடம் நேரடியாக போய் கேட்டுபாருங்கள். விதுசா மக்கள் நலம்பேனி இங்கு வந்து பின்னோட்டம் விடுங்கள் தயவு செய்து தலைக்காக பின்னோட்டம் விடவேண்டாம் அந்ததலை இன்னும் எத்தனை தமிழ் தலையையெடுத்தாலும் தன் தலை தப்பினால் போதும் என்று இருக்கிறர் அந்ததலை இன்னும் எத்தனை நாள்?

    Reply
  • murugan
    murugan

    விதுசா
    உறுதியைக் கண்டோம் பங்கரின் சுவர்களில்
    தியாகங்கள் கண்டோம் நீந்தும் தடாகங்களில்
    வழிகாட்டலும் கண்டோம் ராணுவ தடங்களில்
    வெற்றியை கண்டோம் நடேசரின் அழுகையிலே!

    Reply
  • மறவன்
    மறவன்

    ஈழமாறா!
    போ..போ… பங்கர் அரண்மனையிலே உமக்கு பட்டமளித்து பொற்கிளி தந்து கெளரவிப்பதற்கு தலைவர் காத்துக்கிட்டிருக்கார். நாட்கள் சென்றால் கிடைக்க வாய்பில்லாமலும் போகலாம்.

    Reply
  • menaka
    menaka

    தப்பி ஓட ஆசை
    குப்பியைக் கடிக்காம எனக்கு
    தப்பிஓட ஆசை
    பொட்டனுக்கு பொட்டு
    வைச்சுப்பாக்க ஆசை
    முல்லைப் பட்டணத்தை விட்டு
    எல்லைதாண்டித்
    தப்பி ஓட ஆசை

    மதி அக்காவை கொண்டு
    பாய்ந்து செல்ல ஆசை
    வன்னி மக்கள் சாக
    பார்ப்பதற்கு ஆசை

    Reply
  • மாயா
    மாயா

    ஏனைய இயங்கள் நாட்டு மக்களிடம் கையேந்தினர். சோத்து பார்சல் கேட்டனர். ஆனால் புலிகள் மட்டும்தான் பகல் கொள்ளை அடித்தனர். புலத்தில எல்லாரையும் வெருட்டி பணம் வாங்கினர்.

    இப்ப பிரச்சனை நாளைக்கு புலத்தில விரட்டினவங்களை அடிக்கப் போறாங்க. நாடு மாறினால்தான் தப்பலாம். அதுக்குதான் இப்பவே கப்பல் ரெடியாகுது

    Reply
  • ragesh
    ragesh

    the poem shows that with whome Eelamaran is working. to get Srilankan government fund, people like Eelamaran try their best to betray the Tamils and their struggles. Tigers have done mistakes in the past but they are the only organisation till today fights a just war and never betrayed our struggle for freedom. The propaganda war waged by Sri lankan government and the poem by Eelamaran go hand in hand shows who he is working for. tigers banned other organisations by force for a purpose. the purpose was to prevent the betryers distroy the dream of tamils of achieving Tamil Eelam.

    wars were won and lost in the past. the retreat should not be interepreted as cowardness instead, its a diplomatic move by the mighty tigers to reposition themself for a longer and sustainable struggle.

    Reply
  • chanthirica
    chanthirica

    RAGESH TRUTH ALWAYS BIT HEAVY,ITS DIFFICULT TO ACCEPT.TRUTH ARE TRUTH YOU CANT CHANGE IT.PLEASE DONT KEPT ON TELLING US THEY MADE MISTAKE,OR MISTAKES.PLEASE DONT ACCUSE US , PLEASE ANSWER HIM,YES OR NO?

    Reply
  • மாயா
    மாயா

    இன்றைய (28.03.2009)தமிழழோசை பீபீசியில் இந்தக் கப்பல் குறித்த செவ்வி உண்டு. கேட்டுப்பாருங்கள்.

    என்னமா மழுப்பல். எங்கயிருந்து கப்பல் போகும் என்றும் தெரியாதாம்? எப்போது போகும் என்றும் தெரியாதாம்?
    செஞ்சிலுவை சங்க கொடியோடதான் போகுது என்றார்கள். அப்படி எதுவும் இங்க சொல்லயில்லை.

    கப்பல் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பயணத்தை தொடர முன்னம் அந்த கப்பலில் என்ன கொண்டு செல்லப்படுகிறது என்று பயணத்தை தொடரும் நாட்டு துறைமுகத்துக்கும் : சென்றடையும் துறைமுகத்துக்கும் தெரிவிக்க வேண்டுமே என்ற போது….கிக்கியா பதில்?

    அதை இங்க நீங்களே கேளுங்க:
    http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/tx/tamil_1545?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1

    Reply
  • thurai
    thurai

    தமிழீழம்-வன்னிமக்கள்-வணங்காமண்.

    வணங்காமண் கப்பல் ஈழத்தமிழர்களின் பிணங்களால் கட்டப்பட்டது.
    அதன் மாலுமிகள் தமிழீழ மனநோயாளர்கள்.
    கப்பலின் எரிபொருள் புலம் வாழ் ஈழத்தமிழரின் இரத்தம்.
    அதனுள் ஏற்ரப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் தமிழீழ மனநோயாளர்களிற்கே சமிபாடாகும்.
    மருந்துப் பொருதளிற்காக சேர்க்கப்படும் பணம் தமிழீழப்பூசாரிகளிற்கான் காணிக்கையாகும்.

    வணங்காமண்ணின் பயணம், உலகமுள்ளவரை, புலத்தில் தமிழினமுள்ளவரை தொடரும்.

    துரை

    Reply
  • BC
    BC

    //துரை- வணங்காமண்ணின் பயணம் உலகமுள்ளவரை புலத்தில் தமிழினமுள்ளவரை தொடரும்.//
    துரை,ஒரு சிறிய மாற்றத்திற்கு அனுமதிப்பீர்களா? வணங்காமண்ணின் பயணம் புலத்தில் தமிழினமுள்ளவரை நிச்சியமாக தொடரும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    கப்பலும் விமானம் மாதிரி இல்லைதானே?? ஆரோக்கியமான கப்பல்தானே??

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    BREAKING NEWS
    Now they started to sell the collected goods

    Reply
  • irumporai
    irumporai

    பல்லி எந்த பொராட்டம் எழப்பு எல்லம்மல்நடந்து இருகின்ட்ரது? எந்த சுதந்திரம் எழப்பு இல்லாமல் பெர பட்டது? புலிகலம்நால் ஒரு பொழுதும் மடிந்து கொன்டு தான் இருகிரார்கல்…யாருகாக? இன்ட்ரு அவர்கல் அடிபடும் பொது சிரிபதும்…அவர்கலை கெல்வி கெட்பதும்…சுலபம்….ஆனல் தம் வாழ்வை எழந்து அவர் செய்யும் தியகம் முன் உங்கல் வெட்ரு வீன் பேச்சு என்ன சொல்ல?

    Reply
  • accu
    accu

    இரும்பொறை உங்கள் தமிழையும் தமிழுணர்வையும் மெச்சினேன்! அதுசரி என்ன பல்லியை மட்டும் அப்படியே விட்டு விட்டீர்கள். வாலையாவது அறுத்திருக்கலாமே!!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இரும்பொறை, போராட்டம் இழப்பில்லாமல் நடைபெறுவது இல்லைத் தான். ஆனால் இன்றைய இழப்புகள் எதனால் ஏற்படுகின்றன. பூனை கண்ணை மூடிக்கொளவது போல் நீங்களும் மூடிக் கொண்டு கருத்தெழுதுகின்றீர்களா?? புலிகள் மக்களைக் காப்பாற்ற மக்களைப் பின்னால் விட்டு தாம் முன்னால் நின்று போராடினால் அவர்களைப் பாராட்டடலாம். ஆனால் மக்களைக் கேடயமாக்கி அவர்களை முன்னுக்கு விட்டு அம்மக்களுக்குள் மறைந்திருந்து போராடும் கோழைகளை எப்படி பாராட்டுவது?? இந்த இலட்சணத்தில் அவர்கள் செய்வது தியாகமென்று நினைக்கும் உங்களைப் போன்றவர்களை நினைத்தால் அனுதாபம் தான் வருகின்றது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //Now they started to sell the collected goods – BREAKING NEWS//

    ஏற்கனவே இத்தகவல் எனக்கும் கிடைத்தது. ஆனால் இன்றும் தொலைக்காட்சியில் வந்து எவ்வளவு பொருட்கள் எங்கு கொடுக்கலாம் என்று கேட்கும் முட்டாளள்த்தனமான மக்கள் எம்மிடையே இருக்கும் வரை, அவர்கள் கொடுத்த பொருட்களை அவர்களே காசு கொடுத்து மீண்டும் வாங்கியிருந்தாலும் கண்டு பிடித்திருக்க மாட்டார்கள். அத்தோடு பலருக்கு வன்னி மக்களுக்கு தாமும் ஏதாவது செய்தோம் என்று விளம்பரப்படுத்த வேண்டுமென்ற பேராசை. இதனால் ஏமாற்ற நினைப்பவர்களுக்கும் சுலபமாக வேலை முடிகின்றது.

    Reply
  • பல்லி
    பல்லி

    தம்பி இருட்டறை ஏன் இந்த கோபம். சரி போராட்டம் என்றால் இழப்புகள் வரதான் செய்யும். ஆனால் இழப்புகள் வருவதற்க்கான போராட்டமல்லவா ஈழத்தி நடக்குது. அதனால் அது தேவையா என சொல்லுகிறோம். புலிகள் ஒவ்வொரு நாளும் மடிகிறார்கள் யாருக்காக. கண்டிப்பாக மக்களுக்காக இல்லை. இருப்பின் மக்களை தம்முடன் தங்க வற்புறுத்த மாட்டார்கள். அதையும் விட அவர்களின் இறந்த காலம் எமக்கு தெரியும். சிரிப்பதும் கேள்வி கேப்பதும் எமது வேலையல்ல. எமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் தெரிய படுத்துகிறோம். இது பரபரப்பல்ல வீர வசனம் எழுத. தியாகம் புலிகள் செய்கிறார்கள். திருத்தவும் புலிகளுக்காக மக்கள் செய்கிறார்கள் கண்டிப்பான தியாகம். (குட்டி புலிகள் உறவாக இருப்பதால்) பல்லியின் வெட்டு வீண் பேச்சை படித்த இரும்பொறைக்கு நன்றி.
    அக்கு சந்தடி சாக்கில் ஆள்வைத்து பல்லியின் வால் அறுக்கலாமா?? அப்படி என்னதான் பல்லியின் பின்னோட்டம் தங்களை தாக்குகிறது இருப்பினும் வால் அறுந்த பல்லியும் உயிர் வாழும் என நினைக்கிறேன்.

    Reply
  • murugan
    murugan

    பொருட்கள் எல்லாம் கடையில் விற்று காசாக்கி திரும்ப வன்னி மக்களுக்கு குடுப்பினம்தானே என்று தான் இந்த மக்கள் ஒரு பதிலை ரெடி பண்ணி வைத்திருப்பார்கள்.

    Reply
  • santhanam
    santhanam

    பல்லியின் பின்னோட்டத்தில் யுத்தமுனையின் அனுபவம் மட்டுதான் பேசுகிறது…… பல்லியின் கனவில் எனக்கு நிறைய உடன்பாடுண்டு மக்களை காப்பாற்றுங்கள் என்ற கோசத்தை பல்லி அடிக்கடி முன்வைக்கிறார். இந்த போரட்டம் முறிந்தபணை ஆகிவிட்டது:

    Reply
  • 123
    123

    BEFORE YOU DESCRIBE OTHERS THINK WHAT YOU DID FOR TAMILS.DONT WASTE THE TIME IN WRITING THERSE. DO SOME THING FOR TAMILS

    Reply
  • santhanam
    santhanam

    கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பெற்ற சிறைகளைக் காட்டிலும் கொடுமையான சிறை மனிதனின் சுயமரியாதையை மறுத்து இழிவு படுத்தும் மனச்சிறையே! (தாகூர்)

    Reply
  • பல்லி
    பல்லி

    // இந்த மக்கள் ஒரு பதிலை ரெடி பண்ணி வைத்திருப்பார்கள்.//
    முருகா தயவு செய்து இந்த ஈனதனத்தை மக்கள் செய்வார்கள் என சொல்ல வேண்டாம். சில புலியின் புறோக்கர்மார் வேண்டுமானால் செய்யலாம். அதை மக்கள் தலைமீது போடலாமா??

    Reply
  • murugan
    murugan

    பல்லி இந்த சனங்களோடு பேசிப்பாருங்கள். புலியின் புறோக்கர்மார் சொல்லும் எல்லாவற்றையும் கிளிப்பிள்ளை மாதிரி அப்படியே ஒப்புவிக்கிறார்கள். பலருக்கு புலிகள் பற்றி சர்வதேச நிறுவனங்கள் சொல்லுகின்றவை கூட இன்னமும் காதில் ஏறவில்லை. அல்லாவிட்டால் பெட்டி பெட்டியாக வணங்காமண்ணுக்கு அள்ளி விடுவினமோ? ரொம்ப கஸ்டம் பல்லி. இது வரை பிடித்து வைத்துள்ள மக்களை விடுவி என புலியைப் பார்த்து யாராவது கேட்டு இருக்கிறார்களா? அதை சொன்னால் நாங்கள் துரோகிகளாம்.

    Reply