முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருதரப்பினரதும் தாக்குதலால் காயமடைந்த 494 பேர் நேற்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மூலம் புல்மோட்டை இந்திய வைத்தியர்களின் சிகிச்சை முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த சுமார் 4000க்கும் மேற்பட்டோர் புல்மோட்டைக்கும் திருகோணமலைக்கும் ஏற்கனவே அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் வவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மூலம் 13 ஆவது முறையாக ஏற்றிவரப்பட்ட இக்குழுவில் 152 ஆண்களும் 216 பெண்களும் 126 சிறுவர்களும் அடங்கியிருந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.