அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

எந்தச் சூழ்நிலையிலும் இலங்கைத் தமிழரைக் கைவிடமாட்டேன்- கருணாநிதி

kurunanithi.jpgஇலங்கைத் தமிழர்களை எந்தச் சூழ்நிலையிலும் கைவிடமாட்டேன் என்று தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் குழுவிடம் உறுதியளித்திருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோர் கருணாநிதியை நேற்று செவ்வாய்க்கிழமை அவரின் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே கலைஞர் இந்த உறுதிமொழியை அளித்திருக்கிறார்.

“தமிழர்களின் நலன்கள் தொடர்பாக இந்தியாவினதும் தமிழக முதலமைச்சரினதும் தலையீட்டை நாம் கோரியுள்ளோம என்று கருணாநிதியுடனான சந்திப்பின் பின்னர் நிருபர்களிடம் சம்பந்தன் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று தெரிவித்தது.

கடந்த வருடம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசு அறிவித்திருந்த தமிழர்களுக்கான புனர்வாழ்வு விடயங்களில் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த புனர்வாழ்வு நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதற்கு விசேட தூதுவர் ஒருவரை அனுப்பிவைக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை தமிழக முதல்வர் கோரியிருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

kurunanithi.jpg

பான் கி மூன் மீது மோசமான குற்றச்சாட்டு

ஐ.நா.: ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது விஷ ஊசி ஏற்றும் வகையிலான கருத்தை அந்த சர்வதேச அமைப்பிலிருந்து பதவி விலகும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதுடன், பதிலளிக்கும் கடப்பாட்டிலிருந்தும் பான் கீ மூன் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார்.

சுவீடனைச் சேர்ந்த கணக்காய்வாளரான இங்கா பிரிட் கடந்த வெள்ளிக்கிழமை உள்மட்ட மேற்பார்வை சேவைகள் அலுவலகத்தின் உதவிச் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் ஐ.நா. செயலாளர் நாயகம் மீது அசாதாரணமான முறையில் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்களை முன்வைத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக சிறப்பான பதிவுகளைப் பெற்றுக்கொண்டவர் என்ற ரீதியில் பான் கீ மூன் வளர்த்தெடுத்திருந்த பிரதிமைக்கு சவாலாக 50 பக்கங்களைக் கொண்ட இங்காவின் அறிக்கை காணப்படுகிறது.

சுற்றாடலை மாசுபடுத்திய 300 பேர் பொலிஸாரால் கைது

சுற்றாடலை மாசுபடுத்திய 300 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

நகர் பகுதி வீதி ஓரங்களில் குப்பைகளை வீசி எறிந்த நபர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். நகரங்களின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் 140 பேரைக் கொண்ட விசேட சுற்றாடல் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க சிற்றால் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி யாகவும் கடமையாற்றுகின்றார். கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் 12 விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கையொப்பமில்லாத ஆவணம் – சபையில் சர்ச்சை

parliament.gifசர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஆலோசனைகளை ஐ.தே.க. எம்.பி. ஆர். யோகராஜன் நேற்றுக் காலை சபையில் முன்வைக்க முற்பட்ட போது அரச தரப்பிலிருந்து அதற்குக் கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்டது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தினேஷ் குணவர்தன போன்றோர் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் கையொப்பமிடாத ஆவணமொன்றைச் சபையில் சமர்ப்பிப்பதற்கு யோகராஜன் எம்.பிக்கு எத்தகைய அதிகாரமோ உரிமையோ கிடையாதென தெரிவித்தனர்.

யோகராஜன் எம்.பி. இதனைச் சபையில் முன்வைத்த போது அவர் முன்னால் அங்கம் வகித்த இ. தொ. கா. வின் சார்பில் கூற்றுக்களைத் தெரிவித்தார். இதன் போது குறுக்கிட்ட இ. தொ. கா. தலைவர் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், யோகராஜன் ஒரு இ. தொ. கா. உறுப்பினரல்ல.  இ. தொ. கா.வின் சார்பில் எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்கும் உரிமை அவருக்குக் கிடையாதெனத் தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்: உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக முன்னெடுக்க அரசு நடவடிக்கை

டெங்கு நுளம்பு ஒழிப்பு தொடர் பான வேலைத் திட்டங்களை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விரிவான அடிப்படையில் துரிதமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் அடங்கிய வரைவின் பிரதிகளை சகல உள்ளூராட்சி ஆணையாளர்களுக்கும் நேற்று வழங்கினார். இந்த வரைவை ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திலும் நிறை வேற்றி அதனடிப்படையில் டெங்கு நுளம்பு ஒழிப்புப் பணிகளைத் துரித மாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதாவுல்லா உள்ளூராட்சி மன்றத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய உள்ளூராட்சி வாரம் நேற்று ஆரம்பமானது. இதன் நிமித்தம் பத்தரமுல்லையிலுள்ள ஜனகலா கேந்திரவில் நேற்று ஆரம்பமான உள்ளூராட்சி மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பி ட்டார். இதேநேரம் இம்மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன விசேட அதிதியாகக் கலந்து கொண்டு டெங்கு நுளம்பு ஒழிப்பு தொடர்பாக விசேட உரையாற்றுவார். மாநாடு அமைச்சர் அதாவுல்லா தலைமையில் நடைபெறும்.

3ம் நாள் ஆட்டம்: இலங்கை 8/520, இந்தியா 3/140

muralitharan.jpgஇலங்கை இந்திய அணிகளுக்கிடையே நடைபெறும் முதலாவது ரெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் நிறைவின் போது முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 520 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதலாவது இனிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது. துடுப்பாட்டத்தில் பரனவிதாரண 111 ஓட்டங்களையும் சங்கக்கார 103 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் மிதுன் 105 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பறியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நாள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷெவாக் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களுடனும் லக்ஷ்மன் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

ரொபட் ஓ பிளேக் இன்று இலங்கை வருகை

ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் இன்று இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார்.

ரொபட் ஓ பிளேக் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸை இன்று சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துவார் என அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்தோடு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், வர்த்தக தலைவர்களையும் அவர் சந்திக்கவிருப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக வட்டாரங்கள் கூறின. இவர் நாளை 22ம் திகதி மாலைதீவுக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.

அமைச்சர் ஜீ.எல். – நீல்பூனே நேற்று சந்தித்துப் பேச்சு

neel.jpgஐக்கிய நாடுகள் சபையின் இலங் கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனேக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ¤க்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது பூனே தனது கடமைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க விருப்பதாகவும் ஐ.நா. இலங்கையில் தமது வேலைகளை தொடர்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் பீரிஸிடம் கூறியுள்ளார். இதன்போது இலங்கைக்கும் ஐ.நா.வுக்குமிடையிலான உறவு என்றும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் விருப்பமெனவும் அமைச்சர் பீரிஸ், பூனேவிடம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் கலந்துரையாடுவதற்காக நியூயோர்க் சென்றிருந்த நீல் பூனே நேற்று காலை நாடு திரும்பி பான் கீ மூனின் ஆலோசனைக்கமைய இந்த சந்திப்பில் ஈடுபட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்

d-m-jayaratne.jpgவடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனைத்து நாடுகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன ஆகிய வலய வறுமை ஒழிப்பு மாநாட்டில் தெரிவித் துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் டி. எம். ஜயரத்ன சீன குமீமின் நகரில் நடைபெறும் ஆசிய வலய வறுமை ஒழிப்புக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த பிரதமர், இலங்கையில் வறுமை ஒழிப்புக்கான வலுவான வேலைத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்துடன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் துரித அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஆசியவலய வறுமை ஒழிப்பு மாநாட்டிற்கு ஆசிய வலய நாடுகளின் அனைத்து தலைவர்கள் மற்றும் உயர் மட்டப் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் டி. எம். ஜயரத்னவை ரூமிமின் விமான நிலையத்தில் சீனாவின் துணைப் பிரதமர் ஹைலியான்கியூ வரவேற்றுள்ளார்.

சுசந்திகாவுக்கு ஒலிம்பிக் வௌ்ளிப்பதக்கம்

su.jpgஇலங்கையின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 2000ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டருக்கான ஓட்டப்போட்டியில் அவர் பெற்ற வௌ்ளிப்பதக்கத்தை அணிவித்தார்.

சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டருக்கான ஓட்டப்போட்டியில் மேரியன் ஜோன்ஸ் முதலாமிடம் பெற்றிருந்த நிலையில் அவர் தடைசெய்யப்பட்ட மருந்துவகைகளை உட்கொண்டமை தெரியவந்ததால் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.