வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்

d-m-jayaratne.jpgவடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனைத்து நாடுகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன ஆகிய வலய வறுமை ஒழிப்பு மாநாட்டில் தெரிவித் துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் டி. எம். ஜயரத்ன சீன குமீமின் நகரில் நடைபெறும் ஆசிய வலய வறுமை ஒழிப்புக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த பிரதமர், இலங்கையில் வறுமை ஒழிப்புக்கான வலுவான வேலைத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்துடன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் துரித அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஆசியவலய வறுமை ஒழிப்பு மாநாட்டிற்கு ஆசிய வலய நாடுகளின் அனைத்து தலைவர்கள் மற்றும் உயர் மட்டப் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் டி. எம். ஜயரத்னவை ரூமிமின் விமான நிலையத்தில் சீனாவின் துணைப் பிரதமர் ஹைலியான்கியூ வரவேற்றுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • rohan
    rohan

    இலங்கையைத் தவிர?

    Reply
  • thurai
    thurai

    //இலங்கையைத் தவிர?//றோகன்

    இலங்கையில் பல நூற்றாண்டுகளிற்கு மேல் தேயிலைத் தோட்டங்களிலும், மலேசியாவில் றப்பர் தோட்டங்களிலும் முதுகெலும்பு முறிய தொழில் செய்பவர்கள் தமிழகத்தமிழர்கள். இலங்கையிலும், மலேசியாவிலும் இவர்களை வைத்து வேலை வாங்கி ஆங்கிலேயர்களிற்கு துணை போனவர்கள் இலங்கைத் தமிழர்கள். உலகம் முழுவதும் அகதிகளாகி அந்தந்த நாட்டின் சுகத்தில் வாழ்பவர்கள்தான் அன்று ஆங்கிலேயர்களிற்கு சேவகம் செய்த இலங்கைத்தமிழர்.

    இவ்வாறு எந்த நாட்டுப்பற்ரும் இனப்பற்ரும் இல்லாமல் பணத்திற்கும் பதவிக்கும் புகளிற்கும் மட்டும் வாழ்வோரே இவர்களில் பலர். இவரக்ள்தான் தாங்கள் உலகத்தமிழாராம், தமிழ் மொழியைக் காக்க புறப்பட்டவீர வேங்கைகளாம்.

    இலங்கையில் தமிழர்கழும் வாழவேண்டும் என்பது இவர்களிற்கு அவசியமில்லை அவ்ர்களின் துயரில் அழிவில் தாம் புலம் பெயர்நாடுகளில் நல்வாழ்வு வாழ வேண்டுமென்பதே முக்கியமானது.

    துரை

    Reply