இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2000ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டருக்கான ஓட்டப்போட்டியில் அவர் பெற்ற வௌ்ளிப்பதக்கத்தை அணிவித்தார்.
சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டருக்கான ஓட்டப்போட்டியில் மேரியன் ஜோன்ஸ் முதலாமிடம் பெற்றிருந்த நிலையில் அவர் தடைசெய்யப்பட்ட மருந்துவகைகளை உட்கொண்டமை தெரியவந்ததால் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.