சுற்றாடலை மாசுபடுத்திய 300 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
நகர் பகுதி வீதி ஓரங்களில் குப்பைகளை வீசி எறிந்த நபர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். நகரங்களின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் 140 பேரைக் கொண்ட விசேட சுற்றாடல் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க சிற்றால் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி யாகவும் கடமையாற்றுகின்றார். கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் 12 விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.