அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சோனியாவுக்கு விசேஷ கைத்தறி சேலை; மம்தா பானர்ஜி வழங்கினார்

mamta-banerjee.jpg டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அண்மையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். அப்போது, அவருக்கு மேற்கு வங்காளத்தின் பிரசித்தி பெற்ற டோனேகாலி கைத்தறி சேலை ஒன்றை பரிசாக வழங்கினார்.

வெளிறிய நிறம் கொண்ட இந்த கைத்தறி சேலையை பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுக்கும் நாளன்று அணிந்து கொண்டு வருமாறும் சோனியாவிடம் அப்போது மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்துக்கு இந்த கைத்தறி சேலையை சோனியா அணிந்து வந்தால் டோனேகாலி ரக சேலைகள் மேற்கு வங்கத்தில் மட்டுமின்றி நாட்டின் பிறபகுதி பெண்களையும் ஈர்க்கும். இதன் மூலம் நலிவடைந்துள்ள மேற்கு வங்க கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையில் மீண்டும் மலர்ச்சி ஏற்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

வவுனியா செயலகத்தில் இன்று உயர்மட்ட மாநாடு

செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் வசிக்கும் சுமார் இரண்டு இலட்சம் மக்களுடைய தேவைகள் குறித்த உயர்மட்ட மாநாடு இன்று திங்கட்கிழமை காலை வவுனியா செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.

மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட சகல திணைக்களங்களின் முக்கிய தலைவர்கள், பாதுகாப்பு படையினர் இந்த மகாநாட்டில் கலந்து கொள்வர்.

காலை 11 மணிக்கு மகாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுடைய தேவைகள் குறைபாடுகள், இன்னும் பல விடயங்கள் இந்த மகாநாட்டில் ஆராயப்படுமென அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமிர்தலிங்கத்தின் மகனெனக் கூறி வர்த்தகர்களிடம் பணம் கேட்டு மிரட்டல்

telephone.jpgதமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளரான காலம் சென்ற அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகனெனக் கூறும் ஒருவர் கொழும்பிலுள்ள வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்களிடம் தொலைபேசிமூலம் பணம் கேட்டு மிரட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தகர்கள் முக்கியஸ்தர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை எடுக்கும் இந்நபர் தான் அமிர்தலிங்கத்தின் மகன் எனவும் தான் லண்டனிலிருந்து வந்திருப்பதாகவும் கூறி பணம் தரவேண்டுமென அச்சுறுத்துவதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை சம்பந்தப்பட்ட வர்த்தகர்களை லண்டனிலிருந்து தொடர்பு கொண்ட அமிர்தலிங்கத்தின் மனைவியான மங்கையர்க்கரசி தனது இருமகன்களும் லண்டனிலேயே இருப்பதாகவும் அவர்களுக்கும் இந்த பணம் கேட்கும் சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லையெனவும் தனது மகனெனக் கூறி வேறு எவரோ பணம்பெற முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

சாமிமலையில் மண்சரிவு – குடியிருப்புகள் சேதம்

earth-slip.jpgதற் போதைய மழையுடனான காலநிலைமாற்றத்தினால் சாமிமலை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மண் சரிவினால் இரண்டு தொழிலாளர் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. மின்சிங்டே பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த மண்சரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கலரவில பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கி காரணமாக 42 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இச் சம்பவங்களில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையெனவும் பாதிக்கப்பட்டோர் கலரவில தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் நுவரெலியாவில் மழை காரணமாக 28 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் கேல்ட்டன் பிரதேசத்தில் தாழ் நிலப்பரப்பில் காணப்பட்ட 6 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் அவற்றிலிருந்த 19 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வீடுகள் மண்சரிவினால் சேதமடைந்தன. அங்கிருந்த 20 பேர் மாற்றிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அந்தந்தப் பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

131 கிலோ எடையுள்ள 15 குண்டுகள் வவுனியாவில் மீட்பு

131 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த 15 குண்டுகளை வவுனியா கந்தபுரம் காட்டுப் பகுதியிலிருந்து பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். ஒவ்வொன்றும் ஒன்பது கிலோ எடையுள்ள இந்த குண்டுகள் வான்களுக்கு பொருத்தக்கூடியவைகள் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து கந்தபுரம் காட்டுப் பகுதியில் பாரிய தேடுதல்களை மேற்கொண்ட பொலிஸார் இந்த குண்டுகளை மீட்டெடுத்துள்ளனர். சிவப்பு மற்றும் கறுப்பு நிற இரண்டு பரல்களில் மறைக்கப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த குண்டுகளுடன் பெருந்தொகையான வயர்கள் மற்றும் வெடிக்க வைக்கும் கருவிகளையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் நோக்குடன் இந்த குண்டுகள் புலிகளால் ஏற்கனவே மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குண்டு மீட்டெடுக்கப்பட்ட பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார் பலரது வாக்கு மூலங்களை பதிவுசெய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எஸ். எஸ். பி. தெரிவித்தார்.

வல்வெட்டித்துறையில் மாணவிகளுடன் சேஷ்டை; மூன்று இளைஞர்கள் கைது

sri-lankan-students.jpgவீதியால் செல்லும் மாணவிகளுடன் நீண்ட நாட்களாக சேஷ்டை செய்துவந்த இளைஞர்களில் மூவர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். நீதிவான் கே. அரியநாயகம் மூவரையும் கடுமையாக எச்சரித்தார்.

வடமராட்சிப் பகுதியில் வீதியால் செல்லும் மாணவிகள், இளம் பெண்களிடம் சில இளைஞர்கள் அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதாக பெற்றோர் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு முறையிட்டிருந்தனர். இதையடுத்து பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர்.

இதன்போது உடுப்பிட்டியில் இளைஞர் குழு ஒன்று இவ்வாறு நடந்துகொண்ட போது பொலிஸாரைக் கண்டதும் ஓட முயற்சித்தனர் அவர்களில் மூவரை பொலிஸார் துரத்திப்பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அனைவரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்

55 இலங்கையர் இந்தோனேசிய சிறையில் உண்ணாவிரதம்

இந்தோனேசியாவின், அச்சே மாநில சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 55 இலங்கையர்கள் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு நேற்று கூறியது. இவர்கள் சட்டவிரோதமாக இந்தோனேசியாவுக்கு நுழைந்ததன் காரணமாக

கைதாகியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவர்கள் தொடர்பான விபரங்களை இந்தோனேசிய அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் வந்தால் மாத்திரமே தமது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக உண்ணாவிரதமிருக்கும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவுக்கு சட்டவிரோதமாக நுழைந்த 446 பேர் இந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 193 பேர் மியன்மார்வாசிகளும் 55 இலங்கையர்களும் அடங்குவர் என அறியவருகிறது.

அமைச்சரவையில் பங்கேற்பது பற்றி விவாதித்து அறிவிப்போம்: கலைஞர்

karunanidhi.jpgமத்திய அமைச்சரவையில் தி.மு.க. சேருவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் உட்பட 20 கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

இந்த புதிய அரசில் தி.மு.க.வுக்கு எத்தனை அமைச்சர்கள், எந்தெந்த இலாகாக்களை தருவது? என்பது குறித்து டெல்லியில் 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தி.மு.க. தலைவர், முதல் அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டார்.

ஆனால் இதில் சுமுக முடிவு ஏற்படவில்லை. மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என்றும், காங்கிரஸ் கூறிய  பார்முலா’ குறித்து செயற்குழு அல்லது உயர்நிலை செயல்திட்டக்குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு, கருணாநிதி சென்னை புறப்பட்டு வந்துவிட்டார். சென்னை வந்த பின் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தி.மு.க.வின் முன்னணி தலைவர்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த விஷயங்கள் குறித்து முதல் அமைச்சர் கருணாநிதி, கட்சியின் முன்னணி தலைவர்களுடன் ஆலோசித்தார். அதன் பின்னர் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கருணாநிதி கூறியிருப்பதாவது:  15 வது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அமைச்சரவை அமைக்கும் காலக் கட்டத்தில் டெல்லியிலே உள்ள சில தொலைக்காட்சிகளில் வேண்டுமென்றே திட்டமிட்டு, தி.மு.க. அமைச்சர்களைப் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்ததை டெல்லி நிருபர்கள் கூட்டத்தில் பிரதமரே விளக்கமளித்து மறுத்திருப்பதற்கும், அதைத் தொடர்ந்து பிரதமரே மத்திய அமைச்சரவையில் தி.மு.க. பங்கு பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்ததற்கும் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.அமைச்சரவையில் பங்கேற்பது பற்றியும் விவாதித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

யாழ்குடாநாட்டில் போரினால் வீடுகளை இழந்தவர்களுக்கு உலக வங்கி நிதியுதவியுடன் வீடமைப்புத் திட்டம்

images-house.jpgயாழ். மாவட்டத்தில் போரினால் வீடுகளை இழந்தவர்களுக்கு உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு,கிழக்கு மீள் நிகழ்ச்சித்திட்டத்தில் இதுவரை 5493 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் வழங்கப்பட்டிருப்பதாக இந்நிகழ்ச்சித்திட்ட யாழ்.மாவட்ட திட்டப்பணிப்பாளர் வி.சாம்பசிவம் தெரிவித்தார். இவ்வீடுகளை நிர்மாணிக்க இதுவரை பதினெட்டு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், இன்னும் 2860 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதி ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டம் 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதும் வேலைகளை பூர்த்தி செய்யும் காலம் 2009 ஆக வரையறை செய்யப்பட்டிருந்தாத கூறிய அவர் இக்கால எல்லை 2002 வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சங்கானை பிரதேச செயலர் பிரிவால் 618 வீடுகளும் நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 68 வீடுகளும் யாழ்ப்பாண பிரதேச செயலகர் பிரிவில் 281 வீடுகளும், காரைநகர் உதவி அரசாங்க பிரிவில் 184 வீடுகளும், கரவெட்டி பிரிதேச செயலகர் பிரிவில் 194 வீடுகளும், ஊர்காவல்துறை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 125 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கேப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் 976 வீடுகளும், நல்லூர் பிரதேச செயலகர் பிரிவில் 375 வீடுகளும், பருத்தித்துறை பிரதேச செயலகர் பிரிவில் 116 வீடுகளும், சாவகச்சேரி பிரதேச செயலகர் பிரிவில் 912 வீடுகளும், நெதல்லிப்பழை பிரதேச செயலகர் பிரிவில் 512 வீடுகளும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் 512 வீடுகளும், உடுவில், வேலணை, மதங்கேணி பிரதேச செயலகர் பிரிவில் 613 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன

விஞ்ஞானி மரணம்

அமெரிக்காவின் சியாட்டில் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் பர்ச்காட் மருத்துவம் மற்றும் ரசாயன துறை விஞ்ஞானியான இவர் சில வருடங்களுக்கு முன் செக்ஸ் குறைபாடு உள்ள வர்களுக்காக வயகரா என்ற மாத்திரையை கண்டுபிடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பரப்பாக பேசப்பட்டவர்.
 
இது தவிர அவர் அறிவியலில் ரசாயனம் மற்றும் வேதியல் தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார். இதற்காக அவருக்கு 1998 ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
92 வயதான ராபர்ட் பர்ச்காட் சியாட்டில் நகரில் மரணம் அடைந்தார். அவர் இறந்ததை குடும்பத்தினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.