யாழ். மாவட்டத்தில் போரினால் வீடுகளை இழந்தவர்களுக்கு உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு,கிழக்கு மீள் நிகழ்ச்சித்திட்டத்தில் இதுவரை 5493 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் வழங்கப்பட்டிருப்பதாக இந்நிகழ்ச்சித்திட்ட யாழ்.மாவட்ட திட்டப்பணிப்பாளர் வி.சாம்பசிவம் தெரிவித்தார். இவ்வீடுகளை நிர்மாணிக்க இதுவரை பதினெட்டு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், இன்னும் 2860 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதி ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இத்திட்டம் 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதும் வேலைகளை பூர்த்தி செய்யும் காலம் 2009 ஆக வரையறை செய்யப்பட்டிருந்தாத கூறிய அவர் இக்கால எல்லை 2002 வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சங்கானை பிரதேச செயலர் பிரிவால் 618 வீடுகளும் நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 68 வீடுகளும் யாழ்ப்பாண பிரதேச செயலகர் பிரிவில் 281 வீடுகளும், காரைநகர் உதவி அரசாங்க பிரிவில் 184 வீடுகளும், கரவெட்டி பிரிதேச செயலகர் பிரிவில் 194 வீடுகளும், ஊர்காவல்துறை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 125 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கேப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் 976 வீடுகளும், நல்லூர் பிரதேச செயலகர் பிரிவில் 375 வீடுகளும், பருத்தித்துறை பிரதேச செயலகர் பிரிவில் 116 வீடுகளும், சாவகச்சேரி பிரதேச செயலகர் பிரிவில் 912 வீடுகளும், நெதல்லிப்பழை பிரதேச செயலகர் பிரிவில் 512 வீடுகளும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் 512 வீடுகளும், உடுவில், வேலணை, மதங்கேணி பிரதேச செயலகர் பிரிவில் 613 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன