சாமிமலையில் மண்சரிவு – குடியிருப்புகள் சேதம்

earth-slip.jpgதற் போதைய மழையுடனான காலநிலைமாற்றத்தினால் சாமிமலை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மண் சரிவினால் இரண்டு தொழிலாளர் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. மின்சிங்டே பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த மண்சரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கலரவில பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கி காரணமாக 42 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இச் சம்பவங்களில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையெனவும் பாதிக்கப்பட்டோர் கலரவில தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் நுவரெலியாவில் மழை காரணமாக 28 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் கேல்ட்டன் பிரதேசத்தில் தாழ் நிலப்பரப்பில் காணப்பட்ட 6 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் அவற்றிலிருந்த 19 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வீடுகள் மண்சரிவினால் சேதமடைந்தன. அங்கிருந்த 20 பேர் மாற்றிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அந்தந்தப் பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *