இலங்கை உள்ளூராட்சி சபைகளினதும் மாநகர சபை மேயர்களினதும், ஆணையாளர்களினதும் மாநாடு இன்றும், நாளையும் கண்டி மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ மாநாட்டை ஆரம்பித்து வைத்து ஆரம்ப உரையாற்றவுள்ளார்.
இலங்கை உள்ளூராட்சி சபைகளினதும் மாநகர சபை மேயர்களினதும், ஆணையாளர்களினதும் மாநாடு இன்றும், நாளையும் கண்டி மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ மாநாட்டை ஆரம்பித்து வைத்து ஆரம்ப உரையாற்றவுள்ளார்.
காசாவில் இஸ்ரேல் தீவிர படை நடவடிக்கை மேற்கொண்டிருந்தது மத்தியகிழக்கிலுள்ள காசா பகுதி மீது இந்த வருடத்தின் முற்பகுதியில் நடைபெற்ற இஸ்ரேலிய படை நடவடிக்கை குறித்த தனது விவாதத்தை ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் மீண்டும் துவக்கியுள்ளது.
இது குறித்த விசாரணைகள் தென் ஆப்பிரிக்க நீதிபதி ரிச்சரட் கோல்ட்ஸ்டோன் தலைமையில் நடைபெற்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அகிய இரண்டுமே போர்க் குற்றங்களை புரிந்ததாக குற்றம்சாட்டி, இருதரப்பும் நம்பத்தகுந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இவ்விசாரணைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான முதல் விவாதம் இரு வாரங்களுக்கு முன்பு நடந்தபோது, இப்பிரச்சினை தொடர்பான தனது பதில் நடவடிக்கைகளை ஆறு மாதங்கள் காலம் தாழ்த்துவது என மனித உரிமை கவுன்சில் முடிவெடுத்தது.
அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக முதலில் இதற்கு பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இணக்கம் தெரிவித்திருந்தார். ஆனால் பாலத்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவை மாற்றிக் கொண்டு, இது தொடர்பான விவாதம் உடனே மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.
அரசாங்க பாடசாலைகளில் 2009ம் ஆண்டுக்கான மூன்றாந்தவணைப் பரீட்சைகளை நடத்துவதற்கென கல்வி அமைச்சு 90 மில்லியன் ரூபாவை மாகாண சபைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. பாடசாலை மட்டத்தில் வலய மட்டத்தில் இம்முறை நடைபெறவுள்ள மூன்றாந்தவணை பரீட்சைக்கென மாணவர்கள் எவரும் பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.
அத்துடன் பரீட்சைக்கென மாணவர்களிடம் கட்டணம் அறவிட வேண்டாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது. சில மாகாண சபைகளும் இப்பரீட்சைக்கென நிதி ஒதுக்கியுள்ளதுடன் கல்வி அமைச்சின் வேண்டு கோளுக்கு இணங்க 3ஆம் தவணைப் பரீட்சை நடத்துவதற்குரிய செலவினம் தொடர்பான மதிப்பீடுகளை கல்வி அமைச்சுக்கு மாகாண சபைகள் அனுப்பி வைத்துள்ளன.
அத்துடன் இம்முறை க.பொத. சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கும் மாதிரி பரீட்சையும் நடத்தப்படவுள்ளது. நவம்பர் 6ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இப்பரீட்சைகள் நடைபெறும். மூன்றாம் தவணைப் பரீட்சையாக ஆண்டு 6 தொடக்கம் 10ஆம் ஆண்டு வரை மாணவர்களுக்குரிய பரீட்சை நவம்பர் 17 தொடக்கம் 30ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.
தவணைப் பரீட்சைகளை ஏற்பாடு செய்வதற்கென நியமிக்கப்பட்ட விசேட குழுவினதும், தேசிய கல்வி ஆணைக்குழுவினதும் அறிக்கையின் பிரகாரம் மாகாண அதிகாரிகளின் ஒப்புதல்களுடன் பரீட்சையை இவ் வாறு நடத்துதென முடிவு செய்யப்பட்டுள்ளது. மாகாண ரீதியில் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதற்கென கல்வி அமைச்சில் 9 பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைகள் மற்றும் பாடசாலைகள் தொகுதி (சிறிய பாடசாலை களுக்கான பிரதான பாடசாலையுடன் இணைந்து அடிப்படையில் பரீட்சைகளை ஒருங்கிணைப்பதற்கென அதிபர்கள் மற்றும் பிரபல்ய மான ஆசிரியர்களை உள்ளடக்கியதாக கமிட்டியொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.
பல தென்னாப்பிரிக்க நகரங்களில், தமக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்றும், ஊழல் புரியும் அதிகாரிகளை நீக்க வேண்டும் என்றும் கோரி மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் செய்துள்ளனர்.
குறிப்பாக சாக்ஹைல் என்ற இடத்தில் அவசரகாலநிலை போன்ற ஒரு சூழல் நிலவுவதாக பிபிசி நிருபர் ஒருவர் கூறுகிறார்.
மூன்று வாரங்களாக நடக்கும் இந்த போராட்டத்தில் பல சாலைகள் மறிக்கப்பட்டன. முனிசிபல் கட்டிடங்கள் கொளுத்தப்பட்டன.இரண்டு அமைச்சர்களும் பல மூத்த அதிகாரிகளும் அந்தப் பகுதிகளுக்கு செல்லவுள்ளனர்.
இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் திருமதி பி. கெளர் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தினை வழிபட்டார்.
கொழும்பில் நடைபெறும் மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த கெளர் இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீட மாணவர்களது விரிவுரைப் பகிஷ்கரிப்பு நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. இம் மாணவர்கள் நேற்று முன்தினம் விரிவுரைப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்ததுடன் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பும் வேலைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
முதற்கட்டமாக நேற்றுக் காலை 620 கர்ப்பிணித் தாய்மார் உட்பட சுமார் 3260 பேர் 62 பஸ் வண்டிகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களது உடைமைகளை ஏற்றிச் செல்வதற்காக 27 லொறிகளும் பயன்படுத்தப்பட்டன என வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். நேற்று தொடக்கம் தினமும் 2500 முதல் 3000 வரையில் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
நேற்று 620 கர்ப்பிணித் தாய்மார்கள் 12 பஸ் வண்டிகளிலும் அவர்களது உடைமைகள் 2 லொறிகளிலும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏனைய 2500 பேரும் 50 பஸ் வண்டிகளிலும் அவர்களது உடைமைகள் 25 லோறிகளிலும் அனுப்பி வைக்கப்பட்டன.
நேற்றுக் காலை முதல் இவர்களை கட்டம் கட்டமாக அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நேற்றுக் காலையிலேயே முதற்கட்டமாக மூன்று பஸ் வண்டிகள் புறப்பட்டுச் சென்றன. யாழ். நகருக்கு ஏ-9 பாதையூடாக செல்லும் இவர்களை யாழ். அரச அதிபர் கே. கணேஷ் பொறுப்பேற்பதுடன் அவர்களது சொந்த இடங்களுக்கு பொறுப்பான பிரதேச செயலகங்களுக்கும் கிராம சேவகர்களுக்கும் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 5000 பேரும் விரைவில் குடியமர்த்தப் படவுள்ளனர். அத்துடன் வவுனியா மாவட்டத்திலும் நிவாரணக் கிராமங்களிலுள்ள 4000 பேரும் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளில் மக் களை மீளக் குடியமர்த்துவதற்கு ஏது வாக நிலக்கண்ணி வெடிகள், மிதி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப் படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
புராதன காலத்தில் மனித குடியிருப்புகளின் எச்சங்கள் வடமராட்சியின் கிழக்கு பகுதியில் தோண்டியெடுக்கப் பட்டுள்ளதாக தொல்பொருளியல் துறையின் இயக்குநர் டாக்டர் செனரத் திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்
அங்கு மூன்று மனித குடியிருப்புகள் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த குடியிருப்புகள் சுமார் 3 கிலோமீற்றர் தூரத்துக்கு பரந்திருந்ததாகவும் இந்த சான்றுகள் யாழ் குடாநாட்டில் வரலாற்றுப் பின்னணியை நிரூபிப்பதற்கு மிக முக்கிய சான்றுகள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு நேரசட்டங்களை வேறுபட்ட நிறங்களில் ஓவியமாக தீட்டியிருந்த களிமண் பானைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன எனவே இவற்றைக் கொண்டு எந்த சகாப்தத்தில் அக்குடியிருப்புகள் இருந்தன என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
கி.மு. ஆரம்பத்திலிருந்து கி.மு 900ஆண்டு காலப்பகுதியில் இக்குடியிருப்புகள் இருந்துள்ளன எனத் தாம் நம்புவதாகவும் ஆனால் மிகச்சரியாக இதைக் கூறமுடியாது என்றும் இயக்குநர் கூறியுள்ளார்.
யாழ்குடாநாட்டில் கந்தரோடை பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது பெரிய பெரிய மாடங்களின் எச்சங்கள் கிடைத்துள்ளதாக கூறினார் இங்கு கிடைத்தசான்றுகளின்படி யாழ் குடாநாட்டில் மிகப்பழைய குடியிருப்புகள் இங்கேயே இருந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்
வல்லிபுர தங்க காகிதச் சுருள்களும் யாழ்குடாநாட்டின் வரலாற்றைத் தீர்மானிக்க உதவுகின்றதாகவும் அது 2ம் நூற்றாண்டுக்குரியது என்றும் தெரிகிறது மேலும் ராஜாக்களின் மாளிகை மற்றும் அதன் தடாகத்தையும்கூட கண்டு பிடித்துள்ளனர் மேலும் மன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளிலும் இதுபோன்ற சான்றுகள் கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் தொல்பொருளியல் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்
இன்னும் பத்து வருடங்களில் நாட்டில் அணுசக்தி மூலமான மின் உற்பத்தி குறித்து கவனம் செலுத்தப்படலாம் என தகவல் ஊடகத்தறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். நாட்டின் சமகாலத் தேவைக்காக பல வழிகளிலும் அரசாங்கம் மின் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. நீர், எரிபொருள், சுரிய ஒளி, நிலக்கரி மற்றும் காற்றாடி ஆகிய பல வகையிலும் மின்சார உற்பத்தி மேற்கொள்ளபர்பட்டு வருகிறது.
தற்போது நாட்டின் மின்சாரத் தேவையின் 85 வீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். 2012 ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்சாரத் தேவையின் 100 வீதத்தை பூர்த்தி செய்ய அரசாங்கம் எதிர் பார்க்கின்றது.
ஐ.தே.கட்சி ஆட்சிக்காலத்தின் போது மின்சாரக் கட்டணம் பல முறைகள் பல மடங்காக அதிகரிக்கப்பட்டன. அவர்கள் அனல் மின்சார உற்பத்தியை மட்டும் நம்பி இருந்தமையே இதற்கான காரணமாகும். எனினும் எமது அரசாங்கம் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய செலவு குறைந்த வழிகள் அனைத்தையும் மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் இனனும் 10 வருடங்களின் பின்னர் அணு சக்தி மூலமான மின் உற்பத்தி தொடர்பாகவும் சிலவேளை கவனம் செலுத்தப்படலாம் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
ஆஸ்தி ரேலியாவுக்கு கப்பலில் செல்ல முயன்றபோது இந்தோனேசியாவின் கடற்படையால் ஜகார்தா அருகேயுள்ள மெரக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 260 இலங்கை தமிழ் அகதிகள் தாம் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.
கப்பலில் உள்ள சிறு குழந்தைகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் பங்கேடுத்துள்ளதாக தமிழோசையில் தெரிவித்த கப்பலில் உள்ள அகதிகளில் ஒருவர், உடனடியாக ஏதாவது ஒரு நாடு தமக்கு அடைக்கலம் கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் நடைபெறுவதாக குறிப்பிடுகின்றனர்.
கப்பலில் உள்ளவர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்தவர்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர்களில் சிலர் முகாம்களில் இருந்து தப்பிவந்தவர்கள் என்றும் மேலும் தெரிவித்னர்.
சட்ட விரோத குடியேறிகள் இந்தோனேசியா வழியாக தமது நாட்டுக்கு வருவதை இந்தோனேசியா தடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் சில தினங்களுக்கு முன்பாகத்தான் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.