இலங்கையில் அணுசக்தி மூலம் மின்சார உற்பத்தி! தகவல் ஊடகத்துறை அமைச்சர் தகவல்

இன்னும் பத்து வருடங்களில் நாட்டில் அணுசக்தி  மூலமான மின் உற்பத்தி குறித்து கவனம் செலுத்தப்படலாம் என தகவல் ஊடகத்தறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். நாட்டின் சமகாலத்  தேவைக்காக பல வழிகளிலும் அரசாங்கம் மின் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. நீர்,  எரிபொருள்,  சுரிய ஒளி,  நிலக்கரி மற்றும் காற்றாடி ஆகிய  பல வகையிலும் மின்சார உற்பத்தி மேற்கொள்ளபர்பட்டு வருகிறது.

தற்போது நாட்டின் மின்சாரத் தேவையின் 85 வீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். 2012 ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்சாரத் தேவையின் 100 வீதத்தை பூர்த்தி செய்ய அரசாங்கம் எதிர் பார்க்கின்றது.

ஐ.தே.கட்சி ஆட்சிக்காலத்தின் போது மின்சாரக் கட்டணம் பல முறைகள் பல மடங்காக அதிகரிக்கப்பட்டன. அவர்கள் அனல் மின்சார உற்பத்தியை மட்டும் நம்பி இருந்தமையே இதற்கான காரணமாகும். எனினும் எமது அரசாங்கம் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய செலவு குறைந்த வழிகள் அனைத்தையும் மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் இனனும் 10 வருடங்களின் பின்னர் அணு சக்தி மூலமான மின் உற்பத்தி தொடர்பாகவும் சிலவேளை கவனம் செலுத்தப்படலாம் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *