ஜெனரல் சரத் பொன்சேகா விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அவருக்கு அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அத்துடன், அவர் பொருத்தமான இடத்துக்குச் செல்லும் வரை இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வசிக்க முடியுமெனவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.ஜெனரலுக்கு 70 கொமாண்டோக்களும் புல்லட் புரூவ்கார் ஒன்றும் பாதுகாப்பு வாகனங்களும் வழங்கப்படவுள்ளதாக தன்னை அடையாளம் காட்டவிரும்பாத பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் டெய்லி மிரர் இணையத்தளச் சேவைக்குக் கூறியுள்ளார். புலிகளின் பட்டியலில் தான் இப்போதும் இருக்கின்றதாகவும் தமக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் ஓய்வுபெற்ற ஜெனரல் கோரிக்கை விடுத்திருந்தார்.
அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
சற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணதிலக்க சபைக்குள் அவரது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் போது திடீரென சுகயீனமுற்று சிறிது நேரம் அவதிப்பட்டார்.
நேற்று சபைக்குள் விவாதம் நடைபெற்றும் கொண்டிருந்த போது அமைச்சர் நந்தன குணதிலக்க தமது ஆசனத்தில் அமர்ந்தவாறு அவதானித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அமைச்சர் தனது நெஞ்சை கையால் அழுத்திப் பிடித்துக் கண்களை மூடிக் கொண்டு அவதிப்பட்டார். அருகிலிருந்த அமைச்சர் சாலிந்த திசாநாயக்க அமைச்சரின் நெஞ்சை தடவிக் கொடுத்தார். அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தி ற்கு வந்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் அமைச்சருக்கு பாராளு மன்ற உதவியாளர் ஊடாக வெந்நீர் குடிக்கக் கொடுத்தார்.
அதன் பின்னர் நந்தன குணதிலக்க நெற்றிப்பொட்டை விரல்களால் அழுத்திப் பிடித்தபடி அமர்ந்திருந்தார். அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சபைக்கு வெளியே சென்று பாராளுமன்ற நெறியாளர்களை அழைத்து வந்து அமைச்சர் நந்தன குணதிலக்கவை சபைக்கு வெளியே அழைத்துச் சென்றார்.
நாட்டில் சமாதானத்திற்கும் சுபீட்சத்திற்குமான வழி பிறந்துள்ளதையொட்டி இலங்கை மத்திய வங்கி ஞாபகார்த்த ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றினை நேற்று வெளியிட்டு வைத்தது. மத்திய வங்கியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஆயிரம் ரூபா நாணயத்தாளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட கப்ரால் புதிய நாணயத்தாளினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார். 1998ம் ஆண்டின் 6ம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் நியதிகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த நாணயத்தாள் நேற்று முதல் தேசிய ரீதியில் புகழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது.
தாளினது முன்பக்கத்தின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் சுபீட்சத்தினை நோக்கி முன்னேறிச் செல்கின்ற இணக்கம்மிக்க ஒரு நாடு என்ற தொனிப்பொருளும் தாளின் வலது பக்கத்தில் ஜனாதிபதியின் தோற்றம் பொறிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தபோதிலும் எமது பொருளாதார வளர்ச்சியை இவ்வருடம் 3. 5 சதவீதமாகப் பேண முடிந்ததாக நிதி, அரச வருவாய்த் துறை அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒதுக்கீடு திருத்தச் சட்டம், மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கான குறை நிரப்பு பிரேரணை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், தாவரப் பாதுகாப்பு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் ஆகியவற்றின் விவாதத்தை சபையில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- கடந்த காலத்தில் மேலதிகமாக அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலமைக்கு அரசாங்கம் முகம் கொடுத்தது. இந்நாட்டின் அரச வருவாய் ஏற்றுமதி, இறக்குமதியில் தான் தங்கியுள்ளது. உலக பொருளாதாரத்தின் வீழ்ச்சி நேரடியாக அரச வருவாயையே பெரிதும் பாதித்தது. கடந்த 30 வருட கால யுத்தமும், அரச வருவாயையே அதிகளவில் பாதித்தது.
2009ம் ஆண்டில் உலகின் பல நாடுகள் எதிர்பார்த்த அரச வருவாயைப் பெற்றுக்கொள்ளவில்லை. இதற்கு உலக பொருளாதார வீழ்ச்சியே காரணமாகும். தென்னாபிரிக்கா, இந்தியா, நோர்வே, வியட்நாம், அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட அரச வருவாய் வீழ்ச்சி அடைந்தது.
இருப்பினும் எமது உல்லாசப் பயணத்துறை, ஆடைத் தொழிற்றுறை, சிறு தேயிலை தோட்டத் துறை போன்ற கைத்தொழில் துறைகளைப் பாதுகாக்கவென நாம் 16 பில்லியன் ரூபாவை செலவிட் டுள்ளோம்.
இலங் கையின் கிழக்குப் பகுதியில் இலங்கை அரசின் ஆதரவுடன் சிங்களர்கள் குடியமர்த்தப்படுவது தொடர்ந்தால், மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கு ஏற்படும். இவ்வாறு கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் இதழுக்கு வழங்கியுள்ள பேட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்
பொலிவியாவில் இடம் பெறும் சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு யுனிசெப் அந்நாட்டு அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.
இவ்வாறான அநியாயங்களில் ஈடுபடும் குற்றவாளிகளில் பெருமளவானோர் சட்டத்தின் முன் கொண்டுவரப்படாதுள்ளதை சுட்டிக்காட்டிய யுனிசெப் அமைப்பு பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடு வோரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துமாறும் தெரிவித்துள்ளது.
தென்னமெரிக்க நாடுகளில் மிக மோசமான பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம் பெறும் நாடாக பொலிவியா உள்ளது. சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ள போதும் பொலிவியாவில் அதிகரித்துவரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களையிட்டு யுனிசெப் கடும் கவனம் செலுத்தியுள்ளது.
தலைநகர் லாபாஸிலுள்ள யுனிசெப் அதிகாரி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பாலியல் துஷ்பிரயோகங்களுக்கெதிராக பொலிவிய மக்கள் கிளர்ந்தெழவேண்டும். இதற்கான காரணங்களைக் கண்டறிந்து இந் நிலையை மாற்ற வேண்டும். எதிர் கால இளைஞர்கள், சிறுவர்களுக்கு வள மான வாழ்வை வழங்க வேண்டுமானால் அவசரமாக இப் பணியைச் செய்து முடிக்க வேண்டுமென்றார்.
பாலியல் வல்லுறவுக்குள்ளான சிறுவர்கள், இளைஞர்கள் உடல், உள ரீதியாகப் பாதிக் கப்படுகின்றனர். இதனால் வாழ்க்கையில் நம்பிகையிழக்கும் நிலைக்கும் சில சிறு வர்கள் செல்கின்றனர். பொலிவியாவிலுள்ள சகல தரப்பினரும் இப் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றுபட்டு உழைக்க வேண்டு மென்றும் யுனிசெப் அழைப்பு விடுத்து ள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கொழும்பு பங்குச் சந்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் மொத்த விற்பனை சடுதியாக அதிகரித்திருந்தது. 711 மில்லியன் ரூபா பெறுமதியான பங்கு கையிருப்புகள் விற்பனை செய்யப்பட்டன. கொமர்ஷல் வங்கியின் பாரிய கையிருப்பு விற்கப்பட்டது. அமெரிக்காவை தளமாக கொண்ட முதலீட்டாளர் ராஜ் இராஜரெட்ணத்தால் விற்பனை செய்யப்பட்டதற்கான சாத்தியம் குறித்து இது தொடர்பாக சன்டே ரைம்ஸ் பத்திரிகையின் இணையத்தள சேவை நேற்று தெரிவித்தது.
வங்கியின் 3.5 மில்லியன் பங்குகள் 177 ஆக விற்பனை செய்யப்பட்டதாக தரகர்கள் தெரிவித்தனர். முன்னைய மட்டத்திலும் பார்க்க ரூபா 1.25 அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். பகல் 11.25 மணியளவில் சகல பங்குசுட்டிகளும் 0.63% மாக 2997.90 ஆக அதிகரித்திருந்தன. அதேசமயம் மைலங்கா 0.22 சதவீதத்தால் 3,401.53 ஆக அதிகரித்தது.
கொமர்ஷல் வங்கியிலுள்ள தனது கையிருப்பை இராஜரெட்ணம் விற்பனை செய்துள்ளார் என்பது ஊகம் என்று தரகர் ஒருவர் கூறியுள்ளார். இந்தப் பங்குகளை விற்றவர் அல்லது விற்பனை செய்தவர்கள் தொடர்பாக சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை. அமெரிக்காவில் பங்குச் சந்தையில் சட்டவிரோதமாக பங்குகளை வாங்கி விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளை இராஜரெட்ணம் எதிர்நோக்கியுள்ளார்.
ஈழக் கொடியை வீழ்த்த உதவியவர்கள் மீண்டும் அதனை உயர்த்த இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். இவர்கள் வெளிநாடுகளில் ஈழக்கொடியினை உயர்த்த முற்படுவார்களேயானால் நாட்டு மக்கள் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பர் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
அரச காணிகளிலுள்ள விஹாரைகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கிவைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அங்கு மேலும் பேசுகையில், இனத்துரோகிகளுக்கு வீரர்களை உருவாக்க முடியாது. தேசப்பற்று உள்ளோரால் மாத்திரமே அது முடியும். நாம் சரியான பாதையை வகுத்துவருகிறோம். எத்தகைய சவால்களை எதிர்கொள்ளவும் நாம் தயாராகவுள்ளோம் என்றார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;
ஈழக் கொடியை வீழ்த்துவதற்கு எம்மோடு உறுதுணையாக பெளத்த மதகுருமார்களுடன் மேலும் பலர் இருந்தனர். அதற்குத் தலைமைத்துவம் வழங்கியும் செயற்பட்டனர். அவர்கள் எவருமே இந்த நாட்டில் ஈழக் கொடியைக் காண விரும்பமாட்டார்கள். எனினும் எவருக்காகவாவது உலகில் எங்காவது ஈழக்கொடி உயர்த்தப்படுமானால் அதற்கு இந்நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பது உறுதி, சர்வதேச சூழச்சிகள் வெற்றி பெறுவதற்கு உதவியாக இந்நாட்டில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு ஆயுள் மிகக் குறைவானது என்பது உறுதி.
எஸ். எம். எஸ். மூலம் ஜனாதிபதியாக முடியாமற்போனது போல இணையத்தளங்கள் மூலம் ஈழக் கொடியை உயர்த்த முற்படுவதும் முடியாத காரியம். அதற்கு இந்நாட்டின் தேசப்பற்றுள்ளவர்கள் இடமளிக்க மாட்டார்கள். எவராவது அவ்வாறு கனவு காண்பார்களானால் அது ஒருபோதும் பலிக்காது.
இனத் துரோகிகளால் வீரர்களை உருவாக்க முடியாது. வரலாற்றில் தொடர்ச்சியாக தேசப்பற்றாளர்களே நாட்டை நேசிக்கும் மனிதர்களை உருவாக்கியுள்ளனர். நாட்டிற்கான புதிய பாதையை நாம் வகுத்துள்ளோம். அன்று போலவே என்றும் பயமின்றி சவால்களை வெல்வோம் என ஜனாதிபதி அங்கு கூறினார்.
பெளத்த மத விஹாரைகள் கடந்த காலங்களில் சந்தித்த அவலங்கள் சம்பந்தமாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி; கிழக்கில் பெளத்த மதத்தவர்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியாதிருந்த காலகட்டத்தைக் குறிப்பிட்டதுடன், திருகோணமலையில் புத்தர் சிலை முட்கம்பிகளால் வளைக்கப்பட்டு அதனருகே பெளத்த மதத்தவர்கள் சென்று வழிபடமுடியாமலிருந்த சம்பவத்தையும் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் பெளத்த தேரர்கள் கஷ்டமான வாழ்க்கையை அனுபவித்தனர். வெளியில் நடமாட முடியாதிருந்தனர். அதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கவில்லை. அரந்தலாவையில் பிக்குமார் கொலை செய்யப்பட்ட போதும், அவர்கள் அப்பிரதேசத்தைக் கைவிட்டு ஓடவில்லை. விஹாரைகளைப் பாதுகாத்தனர்.
இதனால் நாம் பெளத்த விஹாரைகளை புனரமைக்க நடவடிக்கை எடுத்தோம். இப்போதும் சூழ்ச்சிகள் உள்ளன. எனினும் மீண்டும் இந்த நாட்டில் விஹாரைகள் முள்வேலிகளுக்குள் அடைக்கப்படும் யுகம் உருவாக இடமளிக்கப் போவதில்லை. இது எமது பொறுப்பு மட்டுமல்ல எமது உரிமையுமாகும்.
1996 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி கட்டிட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு கொண்டவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றில் சமூகம் அளிக்காத நிலையிலேயே இவருக்கான தண்டனை முன்னர் விதிக்கப்பட்டிருந்தது.
மத்திய வங்கியின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்காக வெடிபொருள் நிரப்பிய லொறியை கொழும்பிற்கு கொண்டு வந்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு 200 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர் தற்போது குற்றத் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். செல்லத்தம்பி நவரட்னம் என்ற இவர், செட்டிக்குளம் பிரதேசத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (17) இலங்கை வருகிறார்.
அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் அவர் இன்று யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.
இதன் போது அவர் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஆராய உள்ளதோடு வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் நலன் குறித்து நேரில் சென்று பார்வையிட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
