பொலிவியாவில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்: உடன் நடவடிக்கை வேண்டுமென்கிறது யுனிசெப்

பொலிவியாவில் இடம் பெறும் சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு யுனிசெப் அந்நாட்டு அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

இவ்வாறான அநியாயங்களில் ஈடுபடும் குற்றவாளிகளில் பெருமளவானோர் சட்டத்தின் முன் கொண்டுவரப்படாதுள்ளதை சுட்டிக்காட்டிய யுனிசெப் அமைப்பு பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடு வோரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துமாறும் தெரிவித்துள்ளது.

தென்னமெரிக்க நாடுகளில் மிக மோசமான பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம் பெறும் நாடாக பொலிவியா உள்ளது. சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ள போதும் பொலிவியாவில் அதிகரித்துவரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களையிட்டு யுனிசெப் கடும் கவனம் செலுத்தியுள்ளது.

தலைநகர் லாபாஸிலுள்ள யுனிசெப் அதிகாரி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பாலியல் துஷ்பிரயோகங்களுக்கெதிராக பொலிவிய மக்கள் கிளர்ந்தெழவேண்டும். இதற்கான காரணங்களைக் கண்டறிந்து இந் நிலையை மாற்ற வேண்டும். எதிர் கால இளைஞர்கள், சிறுவர்களுக்கு வள மான வாழ்வை வழங்க வேண்டுமானால் அவசரமாக இப் பணியைச் செய்து முடிக்க வேண்டுமென்றார்.

பாலியல் வல்லுறவுக்குள்ளான சிறுவர்கள், இளைஞர்கள் உடல், உள ரீதியாகப் பாதிக் கப்படுகின்றனர். இதனால் வாழ்க்கையில் நம்பிகையிழக்கும் நிலைக்கும் சில சிறு வர்கள் செல்கின்றனர். பொலிவியாவிலுள்ள சகல தரப்பினரும் இப் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றுபட்டு உழைக்க வேண்டு மென்றும் யுனிசெப் அழைப்பு விடுத்து ள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *